Pandian stores 2: நிச்சயதார்த்த புடவையை தேர்ந்தெடுத்த சரவணன்.. பிடிக்கவில்லை என்று சொன்ன தங்கமயில்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் துவக்கத்திலிருந்தே மாஸ் காட்டி வருகிறது. தற்போது சேனலின் மூன்றாவது முன்னணி சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 காணப்படுகிறது. இந்த சீரியல் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை கூறும் வகையில் அமைந்துள்ளது. பாண்டியன் மற்றும் கோமதியை சுற்றி இந்த சீரியலின் கதைகளம் காணப்படுகிறது. 28 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் செய்த காதல் திருமணம் தற்போது வரை கோமதியின் அண்ணன்களின் பகைமையை சம்பாதித்து கொடுத்து வருகிறது.
இந்த பகை ஒரு கட்டத்தில் அவர்களது மூத்த மகன் சரவணனின் திருமணத்திற்கும் இடையூறாக இருப்பதை கடந்த சில எபிசோட்களுக்கு முன்பு பார்க்க முடிந்தது. தற்போது சரவணனுக்கு தங்கமயில் என்பருடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட சூழலில், கோமதியின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மகன் குமரன் இருவரும் இந்த திருமணத்தை முறியடிக்க என்ன மாதிரியான சதி வேலைகளில் ஈடுபடுவார்கள் என்பது குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் அமைந்திருந்தது. இயல்பான கதைகளத்தில் இந்த சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறார் இயக்குனர். அந்த வகையில் சரவணன் மற்றும் தங்கமயிலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட சூழலில் நிச்சயதார்த்த புடவை மற்றும் வேட்டியை எடுக்க பாண்டியன் குடும்பத்தினர் ஜவுளி கடைக்கு சென்றுள்ளனர். அங்கு தங்கமயிலுக்கு நிச்சயதார்த்த புடவையை எடுப்பதற்காக அவர்கள் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியாததாக காணப்படுகிறது.
புடவை எடுக்க இவ்வளவு நேரமா?: இதனால் டென்ஷனான பாண்டியன், கதிர் மற்றும் சரவணன் மூவரும் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஸ்நாக்ஸ், ஜூஸ், காபி என அடுத்தடுத்து சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். இதனிடையே ஒருவழியாக தங்கமயிலுக்கு ஒரு நான்கு -ஐந்து புடவைகளை கோமதி உள்ளிட்ட குடும்பத்தினர் தேர்ந்தெடுக்கின்றனர். இதையடுத்து அதில் ஒன்றை தேர்ந்தெடுக்க பாண்டியனை கோமதி அழைக்கிறார். அங்கு வரும் பாண்டியன், தனக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது என்று சரவணனே அவரது வருங்கால மனைவிக்கு புடவையை தேர்ந்தெடுக்கட்டும் என்றும் கூறுகிறார். இதையடுத்து முதலில் தயங்கினாலும் இறுதியில் தங்கமயிலுக்கு புடவையை தேர்ந்தெடுக்கிறார் சரவணன்.
புடவை தேர்ந்தெடுத்த சரவணன்: ஒவ்வொரு புடவையாக எடுத்து தங்கமயிலுக்கு வைத்து பார்ப்பதாக கற்பனை செய்து இறுதியில் ஒரு புடவையை தேர்ந்தெடுக்கிறார் சரவணன். அந்தப் புடவை குடும்பத்தினர் அனைவருக்கும் பிடித்தமானதாக அமைகிறது. தங்கமயிலுக்கு அந்த புடவையை வாட்ஸ் அப் செய்கிறார் மீனா. அதை பார்க்கும் தங்கமயிலின் குடும்பத்தினர் அனைவரும் சூப்பராக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் தங்கமயிலுக்கு அந்த புடவை டிசைன் பிடிக்கவில்லை என்று கூறுகிறார். ஆயினும் தன்னுடைய அம்மா கூறுவதற்கு ஏற்ப தனக்கு அந்த புடவை மிகவும் பிடித்துள்ளதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். இதனால் பாண்டியன் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்,
கடுகு டப்பாவில் ரூ.48 ஆயிரம்?: இதையடுத்து தாங்கள் எடுத்த துணிகளுக்கு டிஸ்கவுண்ட் கேட்டு அதை வாங்கிக் கொள்கின்றனர். குறிப்பாக கட்டை பைகளை கேட்டு வாங்கிக் கொள்கிறார் கோமதி. இவ்வாறாக இன்றைய எபிசோடு கலகலப்பாக சென்றது. இதனிடையே தங்கமயில் வீட்டில் இந்த நிச்சயதார்த்தத்திற்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் தேவைப்படும் என்று கணக்கு போடுகின்றனர். ஆனால் கையிறுப்பில் 40 ஆயிரம் மட்டுமே உள்ளதாக தங்கமயில் அப்பா கூறும் நிலையில். அவரது அம்மா பாக்கியம் போய் கடுகு டப்பா, உளுந்து டப்பா என அனைத்திலும் கைவிட்டு அங்கங்கே எடுத்து வந்து கொட்டுகிறார். அந்த பணத்தை எண்ணிப் பார்க்கும்போது 48 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது.
உண்மை தெரிந்தால்?: இதனால் குடும்பத்தினர் அனைவரும் ஆனந்த அதிர்ச்சி அடைகின்றனர், இவ்வாறாக இன்றைய எபிசோடு சுவாரசியங்கள் நிறைந்ததாக, திருமணத்திற்கு முன்பாக என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்த நடைமுறைகளை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. சரவணனைவிட ஒரு வயது மூத்தவர் தங்கமயில். இந்த விஷயத்தை பாக்கியம் மறைத்த நிலையில் இந்த விஷயம் தெரிய வந்தால் பாண்டியன் குடும்பத்தினர் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பது குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதே போல அவர் எம்ஏ என்று பாக்கியம் கூறிய சூழலில் அவர் இன்னும் தனது படிப்பை முடிக்காமல் உள்ளதும் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறாக இனிவரும் எபிசோடுகளில் இந்த நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் கலாட்டாவாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications











