Pandian stores 2 serial: இப்படி செஞ்சிருக்கக்கூடாது.. தங்கமயிலிடம் மன்னிப்பு கேட்ட சரவணன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் தொடர்ந்து சரவணன் ஹோட்டல் வாயிலில் காசில்லாமல் காத்திருக்க, கதிர் தன்னுடைய அப்பாவின் அக்கவுண்டிலிருந்து அவருக்கு தெரியாமல் பணம் அனுப்புவதாக காணப்பட்டது. இதைப் பார்க்கும் பழனிவேல் மற்றும் செந்தில் இருவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர்.
தன்னுடைய தம்பிகள் பணம் அனுப்பியதையடுத்து ஹோட்டலுக்கு கட்ட வேண்டிய முழு பணத்தையும் கட்டி அறைக்குள் நுழைகிறார் சரவணன். இதையடுத்து தம்பிகள் எப்படி பணத்தை புரட்டினார்கள் என்ற கேள்வி அவருக்கு தொடர்கிறது. இதனிடையே, தன்னுடைய தவறு குறித்து தங்கமயில் சரவணனிடம் மன்னிப்பு கேட்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் செய்த தவறான புக்கிங்கால், சென்னைக்கு ஹனிமூன் வந்தும் ஹோட்டல் அறைக்குள் நுழைய முடியாமல் தங்கமயிலுடன் ஹோட்டல் வாசலிலேயே தவித்துக் கொண்டிருக்கிறார் சரவணன். இதனிடையே சரவணனுக்கு தேவையான பணத்தை தன்னுடைய நண்பர்களிடம் கேட்கும் கதிர், 10 ஆயிரம் ரூபாயை புரட்டுகிறார். தொடர்ந்து மீதமுள்ள 11 ஆயிரம் ரூபாயை அவர் தனது அப்பாவின் அக்கவுண்டிலிருந்து அவருக்கே தெரியாமல் எடுப்பதாக காணப்படுகிறது. இதை பார்க்கும் செந்தில் மற்றும் பழனிவேல் இருவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர்.
அவமானப்படும் தங்கமயில்: இதனிடையே, தொடர்ந்து ஹோட்டல் வாசலிலேயே சரவணன் மற்றும் தங்கமயில் நின்றுக் கொண்டிருப்பதை பார்க்கும் ஹோட்டல் ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல் அவமானத்தில் செந்தில் மற்றும் தங்கமயில் இருவரும் பரிதவிக்கின்றனர். ஒரு கட்டத்தில் பெட்டி படுக்கையுடன் ஹோட்டலில் இருந்து வெளியேற முயற்சிக்கிறார் தங்கமயில். தனக்கு மிகவும் அவமானமாக இருப்தாகவும் ஹோட்டல் ஊழியர்கள் தங்களை கழுத்தை பிடித்து வெளியேற்றுவதற்கு முன்னதாக தாங்களே வெளியேறிவிடலாம் என்றும் தங்கமயில் சரவணனிடம் அழுகையினூடே கூறுகிறார். இதையடுத்து அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார் சரவணன்.
சஞ்சலத்தில் சரவணன்: இதனிடையே, கதிர் கால் செய்து, பணத்தை அனுப்பிவிட்டதாகவும் உடனடியாக ரூமை பெற்று என்ஜாய் செய்யுமாறும் கதிர் கூறுகிறார். இதையடுத்து நிம்மதியடைந்தாலும் பணத்தை எப்படி புரட்டினாய் என்று சரவணன் பலவாறாக கேள்வி எழுப்புகிறார். அதை அப்புறமாக பேசிக் கொள்ளலாம் என்று கதிர் கூறிய நிலையில், தொடர்ந்து செந்திலுக்கும் கால் செய்கிறார். அவர்கள் இருவருமே உண்மையை கூறாமல் மறைக்கின்றனர். இதனிடையே ரூமிற்கு வந்து ஆசுவாசப்படுகின்றனர். ஆனாலும் காலையில் இருந்து நடந்தவற்றை நினைத்து அவர் மனம் மிகவும் சஞ்சலப்படுகிறது.
மன்னிப்பு கேட்ட தங்கமயில்: இதனிடையே தன்னுடைய அம்மாவிற்கு கால் செய்து நடந்தவற்றை கூறுகிறார் தங்கமயில். ஆனாலும் தன்மீதான தவறை நினைத்து தங்கமயில் வருத்தம் கொள்கிறார். ஆனால் இக்கட்டான சூழலில் அதை சமாளிக்க கைவசம் பணமில்லாமல் இருந்ததாக சரவணனை பாக்கியம் குற்றம் சாட்டுகிறார். இதையடுத்து நடந்த தவறுக்கு சரவணனிடம் மன்னிப்பு கேட்கிறார் தங்கமயில். ஆனால் போகுமிடம் தெரியாமல் அலைகழித்ததற்காக தான் தான் தங்கமயிலிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சரவணன் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
https://www.youtube.com/watch?v=oLOAwxscdfI
மீண்டும் சிக்கலில் வடிவு: இதனிடையே, சரவணன் -தங்கமயிலின் ஹனிமூன் குறித்து எதிர்வீட்டில் அப்பத்தா, மாரி, வடிவு அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்குவரும் முத்துவேல் மற்றும் சக்திவேல், மாலையில் குமரனை பார்க்க பெண் வீட்டார் வீட்டிற்கு வருவதாக கூறுகின்றனர். பெண் பார்க்க போன போது இருந்ததுபோல வெற்றுக் கழுத்துடன் இருக்க வேண்டாம் என்றும் லாக்கரில் உள்ள நகைகளை எடுத்துவந்து போட்டுக் கொள்ளும்படியும் முத்துவேல் வடிவிடம் கூறுகிறார். முன்னதாக தன்னுடைய நகைகளை ராஜிக்கு வடிவு கொடுத்த நிலையில், தற்போது எப்படி நிலைமையை சமாளிப்பது என்பது குறித்து தெரியாமல் அவர்கள் திகைப்பதாக இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த காட்சிகள் அமைந்திருந்தன.


Click it and Unblock the Notifications











