நாங்க என்ன சின்ன புள்ளையா.. ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்து சமாதானப்படுத்த.. பாண்டியனிடம் மீனா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் மீனாதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்று பாண்டியன் எப்படி கூறலாம் என்று கடையில் வைத்து செந்தில் பாண்டியனிடம் கேள்வி எழுப்புவதாகவும் அவரை பாண்டியன் வழக்கம் போல திட்டி அனுப்புவதாகவும் காணப்பட்டது.
இதனிடையே தன்னை ராஜி திட்டியது குறித்து தன்னுடைய கணவன் சரவணனிடம் தங்கமயில் கண்கலங்கி பேசுகிறார். தொடர்ந்து மாலையில் மீனா மற்றும் ராஜிக்கு ஸ்னாக்ஸ் வாங்கி வரும் பாண்டியன் காலையில் நடந்தது குறித்து வருத்தம் தெரிவிக்கிறார். தொடர்ந்து அவருடைய அப்பா திட்டினால் அவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்களா என்பதாக அவர் இன்றைய எபிசோடில் பேசுவதாக காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் கடையில் வைத்து தன்னுடைய மாமாவிடம் வீட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து பேசுகிறார் பாண்டியன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் பிரச்சினைகளை இழுத்து வருவதாக கூறுகிறார். வீட்டில் அனைவரும் நிம்மதியாக இருந்தால் என்ன அதை விட்டுவிட்டு டியூஷன் எடுக்கிறேன் என்று கிளம்புகிறார் ராஜி என்றும் அதற்கு மீனா சப்போர்ட் என்றும் வீட்டில் நடந்தவற்றை மாமாவிடம் பாண்டியன் கூற, உடனே அருகில் இருக்கும் செந்தில் அதற்காக மீனாவை ஏன் அப்படி பேசினீர்கள் அவள்தான் வீட்டில் பிரச்சனைகளை இழுத்து வருவதாக கூறுகிறீர்களே அவள் எவ்வளவு வருத்தப்பட்டாள் என்பதாக பேசுகிறார்.
பாண்டியன் கோபம்: இதைக் கேட்கும் பாண்டியனுக்கு கோபம் தலைக்கேறுகிறது. தன்னுடைய மருமகளிடம் எப்படி பேச வேண்டும் என்று தனக்குத் தெரியும் என்றும் ஏதாவது பேசினால் பல்லை உடைத்து விடுவேன் என்றும் செந்திலை அடக்கி அவரை வெளியில் வேலைக்கு அனுப்புகிறார். தொடர்ந்து மாமாவிடம் பேசும் பாண்டியன் தன்னுடைய மகள்கள் அரசி மற்றும் குழலியை போல தான் மீனாவையும் ராஜியையும் நினைப்பதாக கூறுகிறார். இதனிடையே சரவணனுக்கு சாப்பாடு எடுத்து வரும் தங்கமயில் தனக்குத்தானே வீட்டில் நடந்த விஷயங்களை பேசிக் கொள்வதாக காணப்படுகிறது,.
ஹனிமூன் குறித்து பேசும் தங்கமயில்: இது குறித்து சரவணன் கேட்க, தன்னை மூத்தவள் என்று கூட பார்க்காமல் ராஜி திட்டி விட்டதாக கூறி அழுகிறார். அவரை சமாதானப்படுத்தும் சரவணன் அவர்கள் விஷயத்தை நீ எதற்காக அப்பாவிடம் சொன்னாய் என்று கேட்கிறார். இதைக் கேட்டு தங்கமயில் இப்போதும் நீங்கள் மற்றவர்களுக்கு தான் சப்போர்ட் செய்கிறீர்கள் என்பதாக கூறி ஆதங்கப்படுகிறார். தொடர்ந்து பேச்சை மாற்றும் தங்கமயில் இந்த மன உளைச்சல்களில் இருந்து தப்பித்து சில தினங்கள் ஹனிமூன் ட்ரிப்புக்கு சென்று வரலாம் என்று கூறுகிறார். இதைக் கேட்கும் சரவணன் கண்டிப்பாக இது குறித்து அப்பாவிடம் பேசுவதாக கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
சமாதானப்படுத்தும் பாண்டியன்: இதையடுத்து மாலையில் வீட்டிற்கு வரும் பாண்டியன், ராஜியையும் மீனாவையும் சமாதானப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஸ்நாக்ஸ் வாங்கி வருகிறார். மீனாவிற்கு சமோசாவும் ராஜிக்கு அதிரசமும் வாங்கி வந்து கொடுக்கிறார். காலையில் அந்த திட்டு திட்டிவிட்டு இப்போது சமாதானப்படுத்துவதற்காக இதை எல்லாம் வாங்கி வந்திர்களா என்று கோமதி கூற மீனாவும் நாங்கள் என்ன சின்னப் புள்ளையா, காலையில் திட்டிவிட்டு, ஸ்நாக்ஸ் வாங்கிவந்து சமாதானப்படுத்துவதற்கு என்று கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து பேசும் பாண்டியன், காலையில் அவர்கள் செய்த விஷயத்திற்காக திட்டியதாக கூறுகிறார்.
வம்பிழுத்த மீனா: அவர்களின் அப்பா திட்டினால் கேட்டுக் கொள்ள மாட்டார்களா என்றும் பலவாறாக பேசுகிறார் பாண்டியன். தொடர்ந்து அவர்களை தன்னுடைய மகள்களாகவே தான் நினைப்பதாகவும் பாண்டியன் கூறுகிறார். இதையடுத்து சமாதானமடையும் மீனா, அவர் வாங்கிவந்த சமோசாவை வாங்கி சாப்பிடுகிறார். தொடர்ந்து தங்கமயிலையும் ஸ்நாக்ஸ் சாப்பிடுமாறு பாண்டியன் கூற, அதை கேட்கும் மீனா வெளியில் வாங்கும் தின்பண்டங்களை தங்கமயில் சாப்பிட மாட்டார் என்று அவரை வம்பிழுப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











