Pandian stores 2 serial: ஏன் இப்படி நடுங்குறீங்க.. மீனா கேட்ட கேள்வி.. அம்மாவிடம் புலம்பிய தங்கமயில்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியல் துவங்கி சில மாதங்களே ஆன நிலையில், எடுத்தவுடன் சேனலின் மூன்றாவது இடத்தில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டுள்ளது. அடுத்தடுத்த திருமண எபிசோட்கள் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.
தற்போது சரவணன் மற்றும் தங்கமயிலின் திருமணம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்த பிரச்சினைகள், சமாளிப்புகள், சந்தோஷங்கள், உற்சாகங்கள் என இந்த சீரியலை ரசிகர்கள் கொண்டாட பல காரணங்கள் சீரியலில் காணப்படுகிறது. இந்த திருமணத்தில் 80 சவரன் நகைகள் போடுவதாக கூறும் தங்கமயிலின் அம்மா, அவை அனைத்தையும் போலி நகைகளாக போட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. பாண்டியன் வீட்டில் திருடன் புகுந்த நிலையில் வீட்டில் உள்ளவர்களின் நகைகளை கொண்டு சென்று பேங்க் லாக்கரில் வைக்க பாண்டியன் முடிவு செய்து கோமதியிடம் கூறுகிறார். இடையில் பழனிச்சாமியும் நகைகளை வைத்து பணம் வாங்கி அதில் ஒரு நிலத்தை வாங்கி போடலாம் என்றும் வங்கி லாக்கருக்கு கொடுக்கும் பணத்தை அடகு வைத்த நகைகளுக்கு வட்டியாக கொடுக்கலாம் என்றும் ஐடியா கொடுக்கிறார்.
தங்கமயில் நடுக்கம்: இதனால் தன்னுடைய நகைகள் போலி நகைகள் என்று தெரியவரும் என்பதால் தங்கமயில் நடுங்குகிறார். இதை பார்க்கும் மீனா ஏன் இப்படி நடுங்குகிறீர்கள் உடல்ல்நிலை சரியில்லையா என கேட்கிறார். தொடர்ந்து அனைவரும் விசாரிக்கின்றனர். இந்நிலையில் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று தங்கமயில் சமாளிக்கிறார். தொடர்ந்து தன்னுடைய அம்மா லக்கரிலேயே எடுத்துச் சென்று நகைகளை வைத்து வருவதாக தங்கமயில் கூறுகிறார். ஆனால் பாண்டியன் கோமதி லாக்கரில் வைப்பதை இறுதி செய்கிறார். இந்நிலையில் லாக்கரில் நகைகளை வைப்பதற்காக கோமதி மற்றும் ராஜி இருவரும் கிளம்பி செல்கின்றனர்.
பாக்கியம் வருகை: நகைகளை கொடுப்பதற்கு தங்கமயில் தொடர்ந்து தயக்கம் காட்டுகிறார். நகைகளை உரசி பார்ப்பார்களா என்று பலவிதமாக கேள்வி கேட்கிறார். நகைகளை உரசி பார்ப்பது குறித்து ஏன் தொடர்ந்து கேட்கிறாய் என்று கோமதி அவரை விசாரிக்கிறார். இதற்கு பதிலளிக்கும் தங்கமயில், நகையை உரசி பார்த்தால் வெயிட் குறைந்து விடும் என்று கூறி சமாளிக்கிறார். இதனிடையே அவரது அம்மா பாக்கியம் அங்கு வருகிறார். ஆயினும் கோமதி மற்றும் ராஜி இருவரும் பேங்கிற்கு சென்று வரும் வரை தான் காத்திருப்பதாக அவர் கூற, அவர்கள் இருவரும் கிளம்பி செல்கின்றனர்.
தங்கமயில் புலம்பல்: இதையடுத்து நடந்த விஷயங்களை தன்னுடைய அம்மாவிடம் கூறி, நீயும் அவர்களை அனுப்பி வைக்கிறாயே என்று தங்கமயில் திட்டுகிறார். இதையடுத்து தங்கமியில் எது குறித்தும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் போலி நகைகள் என அவரே கூறாமல் யாருக்கும் தெரிய வராது என்றும் பாக்கியம் சமாதானப்படுத்துகிறார். இதை அடுத்து பூபதி மற்றும் ராஜி இருவரும் வங்கியில் இருந்து திரும்பி வருகின்றனர். மீனாவும் இரவு சென்னைக்கு ட்ரெயினிங்கிற்காக செல்லவுள்ள நிலையில் மதியமே அலுவலகத்தில் இருந்து திரும்புகிறார். அவர்களை சென்னையில் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லுமாறு கோமதி கூறுகிறார். இதை பார்க்கும் பாக்கியம் பாராட்டுகிறார்.

தவிடுபொடியான செந்தில் திட்டம்: தொடர்ந்து கடையில் செந்திலும் தன்னுடைய சென்னை ட்ரிப் குறித்து பழனிவேல் மற்றும் மாமாவிடம் பலவாறாக தன்னுடைய உற்சாகத்தை தெரிவிக்கிறார். மெட்ராஸை சுற்றி பார்க்க போறேன் என்று அவர் பாடலுடன் தான் போட்டிருக்கும் திட்டங்களை எல்லாம் கூறுகிறார். அதற்கும் ஆப்பு வைக்கிறார் பாண்டியன். சென்னையில் பணம் கொடுக்க வேண்டியவர்கள் குறித்து கூறும் பாண்டியன், அவர்களிடம் வசூல் செய்து விட்டு வருமாறும், கோயம்பேட்டில் ஒரு வியாபாரியிடம் மல்லி வாங்குவது குறித்து பேசிவிட்டு வருமாறும் பல வேலைகளை அடுக்குகிறார். இதனால் செந்தில் போட்ட திட்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகிறது. இவ்வாறாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











