Pandian stores 2 Serial: கடுமையான சண்டையில் செந்தில் -மீனா.. பஞ்சாயத்துக்கு வந்த பாண்டியன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக அதிக டிஆர்பிக்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டது. முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவு செய்யப்பட்ட இதன் முதல் சீசனும் தொடர்ந்து மூன்றாவது இடத்திலேயே மாஸ் காட்டி வந்தது. இந்நிலையில் தற்போது இந்த இரண்டாவது சீசனும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. இந்த சீரியலில் அப்பா மற்றும் மகன்களுக்கு இடையிலான உறவை மையப்படுத்திக் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார் பாண்டியன். அவரை மீறி அவரது மகன்கள் செந்தில் மற்றும் கதிரின் திருமணம் குடும்பத்திற்கு தெரியாமல் நடந்து முடிகிறது. இதனால் ஊரார் முன்னிலையில் அசிங்கப்படுகிறார். அவரது பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் வந்து அனைவரும் இந்தத் திருமணம் குறித்து பேசுகின்றனர். ஒரு மகனுக்குக்கூட திருமண சாப்பாடு போடும் திட்டம் இல்லையா என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் உடைந்து போகிறார் பாண்டியன். மேலும் அடுத்தடுத்த இந்தத் திருமணங்களால் மூத்த மகன் சரவணனின் திருமணமும் தடைப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த சீரியல் துவங்கப்பட்டது. முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் சீசனும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிக டிஆர்பிக்களுடன் மூன்றாவது இடத்தில் தொடர்ந்து இடம்பெற்று மாஸ் காட்டியது. இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் அதே இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் பாண்டியன், கோமதி கேரக்டர்களில் ஸ்டாலின் மற்றும் பிரபல நடிகை நிரோஷா நடித்து வருகின்றனர். இவர்களின் மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்களையும் கோமதியின் அண்ணன்களையும் மையமாக கொண்டு இந்த சீரியல் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது.
தடைப்படும் சரவணன் திருமணம்: பாண்டியனின் அடுத்தடுத்த மகன்கள் செந்தில் மற்றும் கதிர் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துவந்த நிலையில் அவரது மூத்த மகன் சரவணனின் திருமணம் தடைபடுகிறது. இதனால் தன்னுடைய மகனின் வாழ்க்கையை நினைத்து அவர் தொடர்ந்து மனவருத்தம் கொள்கிறார். பல தரப்பிலும் சரவணனின் திருமணத்திற்காக குடும்பத்தினர் அனைவரும் முயற்சிக்கும் நிலையில் ராஜியின் சித்தப்பா மூலம் சரவணனின் திருமணம் தடைபடுகிறது. மீனா மூலம் ஒரு வரன் வர, அதையும் சரவணன் குறித்து கேவலமாக பேசி குலைக்கிறார் சக்திவேல். இது தெரியாமல் தன்னுடைய மனைவியின் அலட்சியமே அனைத்திற்கும் காரணம் என ஆத்திரமடைகிறார் செந்தில்.
சண்டை போட்டுக் கொள்ளும் செந்தில் -மீனா: இதனால் அவர்களுக்குள் அடுத்தடுத்து பிரச்சினைகள், சண்டைகள் ஏற்படுகின்றன. தன்னுடைய அண்ணன் அசிங்கப்பட மீனாதான் காரணம் என்றும் அவர், அந்த வரனிடம் சரியாக தங்களின் குடும்பம் குறித்தும் அடுத்தடுத்த திருமணங்கள் குறித்து சொல்லாமல் விட்டதாகவும் செந்தில் ஆத்திரப்படுகிறார். மேலும் அவசரமாக நடந்தேறிய தங்களின் திருமணமும் சரவணின் திருமணத்தில் பிரச்சினை செய்ததையும் அவர் கோபத்துடன் சுட்டிக் காட்டுகிறார். இரவு நேரத்தில் இவர்கள் இருவரும் சண்டைப்போட்டுக் கொள்ள சத்தம் கேட்டு அங்கு வரும் பாண்டியன் அவர்களது அறையின் கதவை தட்டி அவர்களை வெளியில் வரவழைக்கிறார்.
மாமனாரிடம் கேள்வி கேட்கும் மீனா: தொடர்ந்து அவர்களின் சண்டை குறித்து பாண்டியன் கேட்க, தங்களது பிரச்சினையை தாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீனா கூறுகிறார். பெண் பிள்ளையிடம் ஏன் குரலை உயர்த்துகிறாய் என்று பாண்டியன் செந்திலை அடிக்கப் பாய்கிறார். இதை இடையில் புகுந்து தடுக்கிறார் மீனா. தொடர்ந்து பிரச்சினை குறித்து விசாரிப்பதாக இருந்தாலும் அதை வாய் வார்த்தைகளால் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் மனைவி முன்னாள் கணவனை அடிப்பது சரியாக இருக்காது என்று மீனா கூற, தன்னுடைய மகனை கேள்விக் கேட்கக்கூட தனக்கு உரிமை இல்லையா என்று பாண்டியன் மருகுகிறார்.
தம்பிகளை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்க வேண்டாம்: இதையடுத்து இடையில் பேசும் சரவணன், அவருக்க அடிக்க வேண்டுமென்றால் தன்னை அடித்துக் கொள்ளட்டும் என்று கூறுகிறார். தன்னுடைய திருமணத்தை காரணமாக வைத்து தம்பிகளை திட்ட வேண்டாம் என்றும் அவர்களை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்க வேண்டாம் என்றும் சரவணன் மேலும் கூறுகிறார். இதனிடையே மீண்டும் செந்தில் -மீனா சண்டை வலுக்கிறது. செந்தில் கத்தி பேச, மீண்டும் கத்திப் பேசினால், பாண்டியன் அவர்கள் சண்டையில் இடையில் வருவார் என்று மீனா கூறுகிறார். இவ்வாறு இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











