Pandian stores 2 serial: பச்சக்..கனவில் தங்கமயிலுக்கு முத்தம்.. நேரில் சரவணனிடம் மாட்டிய பழனிவேல்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் தற்போது சரவணனுக்கு நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதையொட்டி துணி எடுக்க செல்வது என்பது போன்ற செயல்களில் பாண்டியன் குடும்பத்தினர் ஈடுபடுகின்றனர். இந்த நிச்சயதார்த்தம் நடக்குமா அல்லது கோமதியின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மகன் குமரன் ஆகியோரின் சதி திட்டத்திற்கு உள்ளாகி நடக்காமல் போகுமா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
நிச்சயதார்த்தத்திற்கான நாள் வந்த சூழலில் அதை கொண்டாட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர். முன்னதாக தங்கமயில் குறித்த கனவில் தன்னுடைய மாமாவிற்கு தூக்கத்திலேயே சரவணன் முத்தம் கொடுத்ததும் நடந்துள்ளது. இதனால் தனக்கு இந்த வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று அவர் புலம்புவதாகவும் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர், இன்றைய தினமும் ரசிகர்களை கவரும் வகையிலான எபிசோடை கொடுத்துள்ளது. இந்த சீரியலில் முக்கியமான ஆபீஸ் மீட்டிங் இருப்பதாக மீனா கூறிய நிலையிலும் அவரை வற்புறுத்தி பாண்டியன் லீவ் போட வைத்திருந்தார். லீவ் போட்டு அனைவருடனும் இணைந்து அவர் நிச்சயதார்த்தத்திற்கு புடவை மற்றும் வேட்டி உள்ளிட்டவற்றை எடுப்பதற்காக சென்ற நிலையில் அவருடைய மேலதிகாரியிடம் நன்றாக வாங்கி கொட்டிக் கொண்டதை இன்றைய தினம் பார்க்க முடிந்தது.
மீனாவை சமாதானப்படுத்திய செந்தில்: இதனால் அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். இதையடுத்து அங்கு வரும் செந்தில், என்ன நடந்தது என்று கேட்க தான் பிசினஸ் செய்யும் மனிதரை திருமணம் செய்து கொண்டதைவிட தன்னுடைய பீல்டில் இருக்கும் அரசு கவர்மெண்ட் மாப்பிள்ளையை திருமணம் செய்திருந்தால் தன்னுடைய சூழலை புரிந்து கொண்டு அவர் தன்னை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருப்பார் என்றும் தற்போது தான் மீட்டிங்கில் கலந்து கொள்ளாததால் நன்றாக வாங்கி கட்டி கொண்டதாகவும் புலம்பி தீர்க்கிறார். இதையடுத்து இனிமேல் இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்வதாக செந்தில் உறுதியளிக்கிறார். தன்னுடைய அப்பாவிடம் இது குறித்து பேசுவதாகவும் கூறுகிறார்

கதிருக்கு சாப்பாடு பறிமாறிய ராஜி: இந்நிலையில் நாள் முழுவதும் ஜவுளி கடையில் நின்று கொண்டே இருந்ததால் கோமதி மிகுந்த சோர்வாக தூங்கி வழிந்து கொண்டே கதிரின் வருகைக்காக காத்திருக்கிறார் இதனிடையே அங்கு வரும் ராஜி தான் கதிருக்கு சாப்பாடு கொடுப்பதாகவும் கோமதி போய் தூங்குமாறும் கூறுகிறார். இதையடுத்து கதிர் வீட்டுக்கு வரும் சூழலில் அவருக்கு ஆம்லெட் போட்டு சாப்பாடு பரிமாறுகிறார் ராஜி. சாப்பிட்டுவிட்டு தான் எப்போதும் தாமதமாக தான் வருவேன் என்றும் அதனால் தனக்காக காத்திருந்து உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கதிர் கூறுகிறார். இதனால் ராஜி நெகிழ்ச்சி அடைவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.
தங்கமயில் என நினைத்து பழனிக்கு முத்தம்: இதனிடையே மொட்டை மாடியில் தூங்க சென்ற கதிருக்கு போர்வை மற்றும் தலகாணியை போட்டுவிட்டு வருகிறார் ராஜி. சரவணன் மற்றும் அவரது மாமா பழனிவேல் இருவரும் தூங்கிக் கொண்டிருக்க, கனவில் தங்கமயில் வருவதாகவும் அவருக்கு கன்னத்தில் சரவணன் கிஸ் அடிப்பதாகவும் காணப்படுகிறது. இதனிடையே தங்க மயிலுக்கு முத்தம் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு பக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் பழனிவேல் கன்னத்தில் முத்தமிடுகிறார் சரவணன். அங்கு வரும் கதிரிடம் தனக்கு இந்த வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று புலம்புகிறார் பழனிவேல். தொடர்ந்து தனக்கும் சரவணனுக்குமிடையில் கதிரை தூங்கும்படி செய்கிறார்.

நிச்சயதார்த்தத்திற்கு ரெடியான பாண்டியன் குடும்பத்தினர்: இந்நிலையில் நிச்சயதார்த்த நாளும் வருகிறது. அன்றைய தினம் காலையில் தங்களது வீட்டின் வாசலில் என்ன மாதிரியான கோலம் போடலாம் என்று ராஜியும் மீனாவும் யோசிப்பதாக காணப்படுகிறது. தங்கமயில் என்பதால் மயில் கோலம் போடலாமா என்று ராஜியிடம் மீனா கேட்க பின்பு சரவணன் மாமா இங்கேயே உட்கார்ந்து விடுவார் என்று ராஜி கலாய்க்கிறார். இதனிடையே அங்கு வரும் கோமதி அவர்களிடம் என்ன சிரிப்பு என்று கேட்பதாக இன்றைய எபிசோடு காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











