Pandian stores 2 serial: கதிர் கன்னத்தில் பளார் விட்ட பாண்டியன்.. பதைபதைத்த குடும்பத்தினர்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகள் காணப்பட்டன. தங்கமயில் எம்ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்துவிட்டு தன்னுடைய படிப்பை வீணடித்து வருவதாகவும் மீனா வேலைக்கு செல்வது போல ராஜியும் படிப்பதாக சுட்டிக்காட்டிய சரவணன் தங்கமயில் வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார்.
இதனால் சரவணனிடம் தன்னுடைய குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மறுத்துவிட்டு தள்ளிப் போய் படுத்து கொள்கிறார் தங்கமயில். இதனிடையே கடைக்கு வேலைக்கு வருமாறு கதிரிடம் பாண்டியன் கூற, அவர் மறுக்க வாக்குவாதம் முற்றி அவரை பாண்டியன் கன்னத்தில் அறைவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: பாண்டியன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் பாண்டியன் கோபத்தையும் இதுகுறித்து பழனிவேல் கேள்வி எழுப்பியத்தையும் பார்க்க முடிந்தது. இன்றைய எபிசோடில் தன்னுடைய கணவனிடம் பேசிக் கொண்டிருக்கிறார் தங்கமயில். எப்போதும் வீட்டு வேலைகளை செய்து கொண்டே இருக்கிறாயே, போர் அடிக்காதா என்று சரவணன் கேட்க அதுதான் தனக்கு பிடித்தமானது என்று தங்கமயில் கூறுகிறார். மேலும் வீட்டில் நடக்கும் அடுத்தடுத்த விஷயங்கள் குறித்தும் தங்கமயில் பேசுகிறார். காலையில் சண்டையிட்ட பாண்டியன் மாலையில் ஸ்னாக்ஸ் வாங்கி வந்து கொடுத்தது குறித்து அவர் அதிசயிக்கிறார்.
தங்கமயிலின் பயம்: தொடர்ந்து மீனா மற்றும் ராஜிமீது மாமாவிற்கு எப்போதுமே தனி பிரியம் இருப்பதாகவும் கூறுகிறார். இதையடுத்து பேசும் சரவணன், மீனா வேலைக்கு போவதாகவும் ராஜி படிப்பதாகவும் அதேபோல தங்கமயிலும் தன்னுடைய படிப்பை வீணடிக்காமல் வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார். எம்ஏ இங்கிலீஷ் லிட்டரேச்சர் படித்துவிட்டு தன்னுடைய படிப்பை தங்கமயில் வீணாக்குவதாகவும் அப்பாவிடம் சொல்லி தான் வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் சரவணன் கூற தன்னுடைய குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் தங்கமயில் தனக்கு குடும்பத்தினரை பார்த்துக் கொள்வது தான் சந்தோஷம் என்றும் வேலைக்கு எல்லாம் போக மாட்டேன் என்றும் கூறிவிட்டு போய் படுத்து கொள்கிறார்.
வேலையை விடசொல்லும் பாண்டியன்: இதனிடையே மறுநாள் மீனா ஆடிட்டிங்கிற்காக அலுவலகத்திற்கு சீக்கிரத்திலேயே கிளம்பிக் கொண்டிருக்கும் சூழலில் அங்கு வரும் பாண்டியன் மீனா மற்றும் ராஜி குறித்து விசாரிக்கிறார். அவர்கள் இருவரும் ஆடிட்டிங்கிற்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கோமதி கூறுகிறார். இதனிடையே கதிரின் முகம் மிகவும் வாடி உள்ளதாக பழனிவேல் உள்ளிட்ட அனைவரும் விசாரிக்கின்றனர். இதையடுத்து இந்த ஃபுட் டெலிவரி வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் என்றும் இரவு நீண்ட நேரம் கழித்து வந்து தூங்க வேண்டாம் என்றும் உடலை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கூறும் பாண்டியன், அந்த வேலையை விட்டுவிட்டு கடையிலேயே வந்து வேலை செய்யுமாறு கூறுகிறார்.
கதிர் கன்னத்தில் பளார்: இதனால் சந்தோஷம் அடையும் கோமதி, உடனடியாக கதிரை ஒப்புக்கொள்ள சொல்கிறார். ஆனால் கதிரோ தான் கடைக்கு எல்லாம் வேலைக்கு வரமாட்டேன் என்றும் வீட்டில் படும் அவமானம் போதும், கடையில் வந்து அவமானப்பட முடியாது என்றும் கூறுகிறார். மேலும் தான் மாதந்தோறும் கொடுப்பதாக கூறிய பத்தாயிரம் ரூபாயை எப்பாடு பட்டாவது கொடுத்துவிடுவேன் என்றும் வைராக்கியத்துடன் கூறுகிறார். இதனால் ஆத்திரமடையும் பாண்டியன், அவரை கன்னத்தில் அறைகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் பதைப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
பழனிவேல் கேள்வி: இந்நிலையில் பாண்டியனுடன் கடைக்கு வண்டியில் செல்லும் பழனிவேல், அடுத்தடுத்து கதிர் குறித்த கேள்விகளாக அடுக்குகிறார். எந்த பிரச்சனை என்றாலும் கதிரிடம் தான் அதை பாண்டியன் தீர்த்துக் கொள்வதாக கூறுகிறார். கதிருக்கு முன்பு போல இல்லாமல் தற்போது திருமணம் ஆகிவிட்டது என்றும் வீட்டில் மூன்று மருமகள்கள் இருக்கும்போது கதிரை தொடர்ந்து திட்டுவதும் அடிப்பதுமாக இருந்தால் அவனை எப்படி மற்றவர்கள் மதிப்பார்கள் என்று பழனிவேல் கேள்வி எழுப்புவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











