நம்மள திட்டினாரு இல்ல.. இன்னும் ஒருவாட்டி கூப்பிடட்டும்.. பாண்டியனை அலைகழித்த மீனா!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் தன்னுடைய மாமனாரை கடையில் சென்று மீனா சமாதானப்படுத்திய நிலையில் அவர் மீனா மற்றும் ராஜியை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் மாலை ஸ்னாக்ஸ் வாங்கி வந்து தருகிறார். முன்னதாக தங்கமயிலிடம் இது குறித்து மீனா சவால் விட்டிருந்த நிலையில் அதேபோல நடந்ததை பார்த்து தங்கமயில் ஆச்சரியம் அடைகிறார்.
மீனாவும் தன்னுடைய கெத்தை செந்தில் மற்றும் தங்கமயிலிடம் கண்களாலேயே ஜாடை காட்டுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே மீனா மற்றும் ராஜி இருவரும் தங்களின் கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு மொட்டை மாடியில் சென்று தூங்குகின்றனர். இவ்வாறாக இன்றைய எபிசோடில் சுவாரசியங்கள் நிறைந்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தொடர்ந்து சேனலின் முன்னணி சீரியலாக மாஸ் காட்டி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்த வார டிஆர்பியிலும் இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியலில் ராஜி ஹோம் டியூஷன் எடுத்த விவகாரத்தில் அவரது அப்பா மற்றும் சித்தப்பா பாண்டியனை கேவலமாக பேசியதை அடுத்து அவர், மீனா மற்றும் ராஜியிடம் கோபமாக இருக்கிறார். தன்னுடைய அப்பா கேவலப்பட்டதையடுத்து செந்தில் மற்றும் கதிரும் தங்களின் மனைவியிடம் பேசாமல் கோபத்தை காட்டுகின்றனர்.
பாண்டியனை சமாதானப்படுத்திய மீனா: இந்நிலையில் தன்னுடைய அத்தை கோமதியிடம் நாங்கள் நடந்து கொண்ட சூழ்நிலை குறித்து ராஜி மற்றும் மீனா இருவரும் பேசுகின்றனர். அவர்களுக்கு தங்கமயிலும் சப்போர்ட் செய்த நிலையில் கோமதி மீனா மற்றும் ராஜியிடம் பேச துவங்குகிறார். அவர்களின் உறவு பழையபடி மீண்டும் சிறப்பாக அமைகிறது. இந்நிலையில் பாண்டியன் தொடர்ந்து மீனா மற்றும் ராஜியிடம் பேசாததை பார்க்கும் மீனா, அவரது கடைக்கு நேரில் சென்று அவரிடம் இது குறித்து பேசுகிறார். இதையடுத்து அவரும் சமாதானம் அடைய, அவர் மாலை வீட்டிற்கு வரும்போது தங்களுக்கு தின்பண்டங்கள் வாங்கி வருவார் என்று முன்னதாக தங்கமயிலிடம் மீனா பெட் கட்டுகிறார்.
ஸ்நாக்ஸ் வாங்கிவந்த பாண்டியன்: அதே போல பாண்டியனும் மீனா மற்றும் ராஜியை சமாதானப்படுத்தும் வகையில் அவர்களுக்கு தின்பண்டங்கள் வாங்கி வந்து கொடுக்கிறார். அவர் உள்ளே இருக்கும் மீனா மற்றும் ராஜியை ஹாலில் இருந்தபடி கத்திக் கூப்பிடுகிறார். அவர் கூப்பிடுவது கேட்டும் மீனா மற்றும் ராஜி இருவரும் வெளியில் வராமல் இருக்கின்றனர். ராஜி போகலாம் என்று கூற, தங்களை திட்டினார் இல்லையா இன்னும் ஒரு முறை கூப்பிடட்டும் என்று வெயிட் செய்து அதன் பின்பு வந்து தின்பண்டங்களை வாங்கிக் கொள்கிறார் மீனா. பாண்டியனின் இந்த செயலை பார்க்கும் குடும்பத்தினர் அனைவரும் ஆச்சரியம் கொள்கின்றனர்.
கெத்து காட்டும் மீனா: இந்நிலையில் செந்தில் மற்றும் தங்கமயிலிடம் தன்னுடைய கெத்தை கண் ஜாடை மூலம் காட்டுகிறார் மீனா. இந்நிலையில் எதுவாக இருந்தாலும் தன்னிடம் சொல்லிவிட்டு அதை செய்யுமாறு பாண்டியன் கூறுகிறார். இதைக் கேட்கும் ராஜி, தான் மீண்டும் டியூஷன் எடுக்கவுள்ள விவகாரத்தை கூற முற்படுகிறார். ஆனால் தற்போது தான் அவர் சமாதானம் அடைந்துள்ளதாக ராஜியை மீனா தடுத்து விடுகிறார். இந்நிலையில் தன்னுடைய ரூமிற்கு வரும் ராஜி தன்னுடைய துப்பட்டாவை கதிர் தூக்கி வீசுவதை பார்த்து அவரிடம் சண்டை பிடித்து பாய் மற்றும் தலகாணியுடன் ஹாலுக்கு சென்று தூங்க முற்படுகிறார்.
மீனாவை தேடி வந்த செந்தில்: இதனிடையே தன்னுடைய ரூமில் மாமனார் வாங்கி வந்த மிச்சரை சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் மீனா. அப்போது அங்கு வரும் செந்தில் அவரை வம்பிழுக்கிறார். இதையடுத்து செந்திலிடம் சண்டை பிடிக்கும் மீனாவும் ஹாலில் வந்து ராஜியுடன் தூங்குகிறார். அங்கு புழுக்கமாக இருக்க மொட்டை மாடிக்கு அவர்கள் செல்கின்றனர். இதனிடையே, தனியாக தூங்க முடியாத செந்தில் மொட்டை மாடிக்கு மீனாவை பார்க்க செல்கிறார். அங்கு அவரின் நிழலை பார்த்து, பேய் தான் வந்து விட்டதா என்று மீனா பதறுகிறார். தொடர்ந்து செந்திலை பார்த்து திகைக்கிறார். ஆனாலும் தான் இல்லாமல் தன்னுடைய கணவனால் தனியாக தூங்க முடியவில்லை என்ற நினைவு அவருக்கு மகிழ்ச்சியை தருவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











