Pandian stores 2 serial: வடிவை வீட்டைவிட்டு வெளியில் தள்ளிய முத்துவேல்.. அம்மாவிடம் பொங்கிய கோமதி!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிரலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. குமரன் திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் பெண் வீட்டார் முத்துவேல் பேமிலியை நேரில் பார்ப்பதற்காக வருகின்றனர். அப்போது கழுத்தில் அதிகமாக நகைகள் இல்லாமல் வடிவு காணப்படுகிறார். இதனால் முத்துவேல் ஆத்திரம் அடைகிறார்.
முன்னதாக வடிவு தன் மகள் ராஜியிடம் தன்னுடைய நகைகளை கொடுத்த நிலையில் இது தெரியாமல் நகைகள் இல்லாமல் நிற்கும் தன்னுடைய மனைவி வடிவிடம் சண்டை போடுகிறார் முத்துவேல். இதனால் ஏற்படும் களேபரத்தில் வடிவை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். இதனால் தன்னுடைய அண்ணன்களுக்கு எதிராக கோமதி தன்னுடைய அம்மாவிடம் கோபத்துடன் பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் மிகச் சிறப்பான வகையில் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. குமரனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுவரும் நிலையில் பெண் வீட்டார் முத்துவேல் குடும்பத்தினரை நேரில் பார்ப்பதற்காக வீட்டிற்கு வருவதாக இன்றைய எபிசோடில் அமைந்திருந்தது. முன்னதாக தன்னுடைய மனைவி வடிவிடம் லாக்கரில் இருக்கும் நகைகளை எடுத்து வந்து போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் பெண் வீட்டார் முன்னிலையில் கௌரவமாக இருக்கும் என்றும் முத்துவேல் கூறியிருந்தார்.
நகை விஷயத்தில் முத்துவேல் கோபம்: ஆனால் வடிவு தன் நகைகளை மகள் ராஜிடம் கொடுத்து விட்டதால் பெண் வீட்டார் வந்தபோது அவர் நகைகள் அதிகமாக இல்லாமல் காணப்படுகிறார். இது குறித்து தன்னுடைய மனைவியிடம் மீண்டும் முத்துவேல் கேள்வி கேட்கிறார். ஏன் நகைகளை லாக்கரில் இருந்து எடுத்து வரவில்லை என்று அவர் தொடர்ந்து வற்புறுத்தி கேட்டவுடன் நிலைமையை சமாளிக்கும் வகையில் வடிவு தன்னுடைய அம்மாவிற்கு அவசர தேவைக்காக பணம் தேவைப்பட்டதாகவும் அதனால் தன்னுடைய நகைகளை கொடுத்துள்ளதாகவும் கூறுகிறார். இதையடுத்து தனக்கு தெரியாமல் எப்படி இப்படி நடந்துக் கொள்ளலாம் என முத்துவேல் சண்டை பிடிக்கிறார்.
வடிவை வீட்டை விட்டு வெளியேற்றிய முத்துவேல்: வடிவின் அண்ணன் பிசினஸில் சிறப்பாக இருப்பதாக கூறும் முத்துவேல், அவருக்கு பணத்திற்கு என்ன தேவை என்று தொடர்ந்து கேட்கிறார். தொடர்ந்து தன்னுடைய நகைகளை கொடுக்க தனக்கு உரிமையில்லையா என வடிவு கேட்க, இதனால் ஆத்திரமடையும் முத்துவேல் தன்னுடைய மனைவியை அவர்கள் அம்மா வீட்டிற்கே சென்று விடுமாறு கூறி வீட்டை விட்டு வெளியில் தள்ளுகிறார். இதனால் அப்பத்தா, மாரி, பழனிவேல் உள்ளிட்டவர்கள் மிகவும் அதிர்ச்சியடைகின்றனர். இந்த விஷயத்தை வெளியில் இருந்து மீனா மற்றும் ராஜி இருவரும் பார்க்கும் நிலையில் தொடர்ந்து தன்னுடைய அம்மாவின் நிலை குறித்து ராஜி அழுதபடி இருக்கிறார்.
பொங்கிய கோமதி: விஷயம் கேள்விப்பட்டு வெளியில் வரும் கோமதி, வீட்டில் உள்ள பெண்களை நிம்மதியாகவே இருக்க விட மாட்டார்களா என்று தன் அண்ணன்களை குற்றம் சாட்டுவதாக இந்த எபிசோடில் காணப்பட்டது. தன்னுடைய அம்மாவிடம் வீட்டுக்கு வந்த மருமகளை இப்படி வெளியில் தள்ளலாமா என்று பலவாறாக கோமதி சண்டையிடுவதாகவும் காண்பபட்டது. இதையடுத்து அப்பத்தாவும் தன்னுடைய மகன் முத்துவேலை திட்டி மருமகளை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார். இந்நிலையில் நடந்த விஷயம் தெரியாமல் ராஜி தொடர்ந்து அழுது கொண்டிருக்கிறார். இந்த விஷயம் ராஜி குடும்பத்தினருக்க தெரிய வேண்டாம் என்று வடிவு பழனிவேலிடம் கூறுகிறார்.
பழனிவேல் சமாதானம்: இதையடுத்து தன்னுடைய அக்கா வீட்டிற்கு வரும் பழனிவேல், குமரனின் திருமண ஏற்பாட்டில் வடிவின் அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்ளாததால் சண்டை போட்டு வடிவை வீட்டை விட்டு முத்துவேல் வெளியே தள்ளியதாக ராஜி, கோமதி உள்ளிட்டவர்களிடம் கூறி சமாளிக்கிறார். இந்நிலையில் தொடர்ந்து அழுதுக் கொண்டிருக்கும் ராஜியிடம் தாங்கள் செய்யும் இத்தகைய வேலைகளுக்காக ஒரு நாள் தன்னுடைய அண்ணன்கள் கண்டிப்பாக அனுபவிப்பார்கள் என்று கோமதி கோபத்துடன் கூறுவதாக இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











