Pandian stores 2: 50 நாட்கள்ல சரவணன் கல்யாணத்தை முடிப்பேன்.. அதுவரைக்கும்.. பாண்டியன் உறுதி!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. தற்போது அதிகமான டிஆர்பி புள்ளிகளுடன் சேனலின் மூன்றாவது முன்னணி சீரியலாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலின் முதல் சீசனும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மூன்றாவது இடத்தில் தொடர்ந்து இருந்த நிலையில் தற்போது சில மாதங்களிலேயே இந்த தொடரும் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது அதன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறது. இந்நிலையில் தன்னுடைய மகன்கள் செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணத்தால் தன்னுடைய மூத்த மகன் சரவணனின் திருமணம் தடைப்படுவது குறித்து பாண்டியன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்.
சரவணனின் திருமணம் அடுத்தடுத்து தடைப்படுவதால் குடும்பத்தினர் அனைவரும் வருத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சரவணன் -மீனா மற்றும் கதிர் - ராஜி ஆகியோர் மாற்றி மாற்றி சண்டை போடுகின்றனர். இதனால் குடும்பத்தின் நிம்மதி பாதிக்கப்படுவதாக அடுத்தடுத்த எபிசோடுகளில் காணப்படுகிறது. இதனிடையே, தன்னுடைய தம்பிகளை வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று சரவணன் தன்னுடைய தந்தையிடம் கூறுகிறார். சரவணன் திருமணம் குறித்து இன்றைய எபிசோடில் பாண்டியன் முக்கியமான முடிவு ஒன்றை குடும்பத்தினரிடம் தெரிவிக்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக சில மாதங்களிலேயே இடம்பெற்று அதிரடி காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் பாண்டியன் அவரது மனைவி மற்றும் மகன்கள், மகள்கள் என முன்னணி கேரக்டர்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சீரியல் இயக்குனர். இந்த சீரியலின் முதல் சீசன் 5 ஆண்டுகளை கடந்து ரசிகர்களை கவர்ந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகி வரும் இரண்டாவது சீசன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த சீசனில் அப்பா மற்றும் மகன்களின் உறவு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

அப்பா -மகன்களின் பாசம்: அப்பாவாக முதல் சீசனில் மூத்த அண்ணனாக நடித்த ஸ்டாலின் நடித்து வருகிறார். அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையிலும் குடும்பத்தை அவர் மிகவும் கட்டுக்கோப்பாக வைத்து வருவதாக சீரியலின் துவக்கத்தில் காட்டப்பட்டது. ஆனால் செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்கள் மூலம் அவர் நிலை குலைகிறார். அவரைப் பார்த்து குடும்பத்தினர் அனைவரும் பயப்படுவதாக காட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒவ்வொருவராக அவரிடம் கேள்வி எழுப்புவதாக காட்டப்பட்டு வருகிறது. முதலில் செந்தில் தான் விருப்பப்பட்ட மீனாவை காதலித்து அவருக்கு தெரியாமல் திருமணம் செய்து வருகிறார்.

அடுத்தடுத்த திருமணங்கள்: செந்தில் -மீனா திருமணத்தால் ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர் உள்ளாகின்றனர். ஆனாலும் அவர்களது திருமணத்தை பாண்டியன் ஏற்றுக்கொள்கிறார். இந்நிலையில் இரண்டாவதாக கதிரும் தன்னுடைய அம்மாவின் நிர்பந்தத்திற்கு உள்ளாகி தன்னுடைய மாமன் மகள் ராஜியை திருமணம் செய்கிறார். இந்த அடுத்தடுத்த இரு திருமணங்கள் மூலம் மூத்த மகன் சரவணனின் திருமணம் கேள்விக்குறியாகிறது. இது மட்டுமில்லாமல் ராஜியின் அப்பா மற்றும் சித்தப்பா இருவரும் சரவணனின் திருமணம் நடக்காமல் செய்கின்றனர். சரவணனுக்கு உடலளவில் பிரச்சினை இருப்பதாக அவர்கள் வதந்தி பரப்புகின்றனர்.

கேள்விக்குறியாகும் சரவணன் திருமணம்: இதனால் சரவணன் திருமணம் தொடர்ந்து கேள்விக்குள்ளாகிறது. அவரது திருமணம் தடைப்படுவதற்கு காரணம் செந்தில் மற்றும் கதிர் தான் என்று பாண்டியன் குற்றம் சாட்டும்நிலையில் அவரவர் தங்களது மனைவியிடம் சண்டை போடுவதையும் அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்க முடிந்தது. இந்நிலையில் தான் தன்னுடைய மகன் சரவணனுக்கு இன்னும் 50 நாட்களில் திருமணம் செய்து வைப்பேன் என்றும் அதுவரை தான் காலில் செருப்பு போட மாட்டேன் என்றும் பாண்டியன் சபதம் இடுகிறார். அடுத்தடுத்து வெயில் காலம் வரும் நிலையில் அவரது இந்த சபதம் தேவையற்றது என்று கதிர் கூறுகிறார்.
பாண்டியன் அதிரடி முடிவு: பாண்டியனின் இந்த முடிவால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். முன்னதாக சரவணன் திருமணத்தையொட்டி தன்னிடம் சண்டை போடும் செந்திலிடம் மீனாவும் சண்டை போடுகிறார். அவர்களை சமாதானப்படுத்த வந்த மற்றவர்களிடம் குறிப்பாக பாண்டியனிடம் தங்களது பிரச்சனையை தாங்களே பார்த்துக் கொள்வதாக மீனா கூறுகிறார். இதனால் அவர்களது சண்டை மேலும் வலுப்பதாக கடந்த எபிசோட்களில் காணப்பட்டது. கதிர் மற்றும் ராஜியும் தொடர்ந்து சரவணன் திருமணத்தையொட்டி சண்டையிடுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











