Pandian stores 2 serial: பொண்டாட்டின்னு கூப்பிடட்டுமா.. தங்கமயிலிடம் கேட்ட சரவணன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் வகையிலேயே அமைந்துள்ளது. இந்த சீரியலில் இன்னும் இரு தினங்களில் சரவணன் -தங்கமயில் திருமணம் நடக்கவுள்ள சூழலில், ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகிறது.
இதனிடையே திருமணத்தையொட்டி, பாண்டியனின் மூத்த மகள் குழலி, பாண்டியன் வீட்டிற்கு வருவதாகவும் வந்தது முதல் தொடர்ந்து கலகம் செய்து வருவதாகவும் அவரை தொடர்ந்து மீனா, ராஜி உள்ளிட்டவர்கள் சமாளிக்க திணறுவதாகவும் காணப்பட்டது. தன்னுடைய அம்மா, மாமியாராக நடந்துக் கொள்ளவில்லை என்று உசுப்பேற்ற முயற்சிக்கிறார் குழலி. ஆனாலும் கோமதி அசையவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் சிறப்பாகவே அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் சரவணன் மற்றும் தங்கமயில் திருமணத்தை ஒட்டிய நிகழ்வுகள் காணப்பட்டன. தன்னுடைய தம்பியின் திருமணத்தையொட்டி மூத்த மகள் குழலி, தன்னுடைய அப்பா வீட்டிற்கு குடும்பத்தினருடன் வருகிறார். வந்தது முதல் அவர் தொடர்ந்து குட்டி குட்டி கலகங்களை செய்கிறார். வந்தவுடன் தன்னுடைய குழந்தையை தூக்கச் சென்ற ராஜியை அவமானப்படுத்துகிறார்,
மீனா, ராஜியை வம்பிழுத்த குழலி: தொடர்ந்து மீனா அவரிடம் இருந்து எஸ்கேப் ஆவதாக காணப்படுகிறது. தன்னுடைய மாமியார், தன்னிடம் அதிகமாக வேலை வாங்குவதாகவும் ஆனால் தன்னுடைய அம்மா கோமதியோ, மீனா மற்றும் ராஜியை வேலைக்கும் கல்லூரிக்கும் அனுப்பி அழகு பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார். மாமியாராக நடந்து கொள்ளுமாறு கோமதிக்கு தொடர்ந்து அறிவுறுத்துகிறார். மீனா மற்றும் ராஜியை தான் விட்டுவிட்டாய் அடுத்தது வரும் தங்கமயிலிடமாவது கண்டிப்புடன் நடந்து கொள் என்று தன்னுடைய அம்மாவிடம் குழலி கூறுவதாக காணப்படுகிறது. இதை ஆமோதிக்கும் மீனா தங்கமயில் நல்லவிதமாக காணப்பட்டாலும் அவரது அம்மா ஒரு மாதிரியாக காணப்படுவதாகவும் அவர் கண்டிப்பாக தன்னுடைய மகளுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்து அனுப்புவார் என்றும் மீனா, கோமதியிடம் கூறுகிறார்.
தங்கமயிலிடம் பேசிய சரவணன்: இதைக் கேட்கும் கோமதி மீனாவிடம் தன்னுடைய கண்டிப்பை விளையாட்டிற்காக காண்பிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. இந்நிலையில் தனியாக மொட்டை மாடியில் தங்கமயிலுடன் பேசிக் கொண்டிருக்கிறார் சரவணன். தான் முன்னதாக காதல் தோல்வி ஏற்பட்டதால் எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை என்றும் தன்னுடைய வீட்டினர் பெண் பார்ப்பதற்காக காண்பிக்கும் பெண்களையும் ஆர்வம் இல்லாமல் தான் பார்த்து வந்ததாகவும். ஆனால் தங்கமயிலை பார்த்தது முதல் தன்னுடைய நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சரவணன் கூறுகிறார்.
பொண்டாட்டின்னு கூப்பிடட்டுமா?: சரவணன் கூறியதை கேட்டு மகிழ்ச்சி அடையும் தங்கமயில், நாளை மறுதினம் திருமணம் நடக்கவுள்ள நிலையில் தனக்கும் படபடப்பாகவும் பதற்றமாகவும் இருப்பதாக தங்கமயில் கூறுகிறார். தொடர்ந்து பேசும் சரவணன், தங்கமயிலை தான் பொண்டாட்டி என்று கூப்பிடட்டுமா என்று கேட்கிறார். இதற்கு பதிலளிக்கும் தங்கமயில் வெட்கத்துடன் சரி என்று தலையாட்டுகிறார். இதை மொட்டை மாடியில் துணி எடுக்க வரும் பழனிவேல் பார்த்துவிட்டு கீழே சென்று தன்னுடைய மாமா பாண்டியனிடம் புலம்புவதாக காணப்பட்டது. அவர்கள் தனிமையாக பேசி கொண்டு இருப்பதை ஒட்டு கேட்டாயா என்று பாண்டியன் கேட்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
ராஜியிடம் கோபப்பட்ட கதிர்: இந்நிலையில் திருமண வேலைகளை முடித்துக் கொண்டு தன்னுடைய அறைக்குள் வருகிறார் கதிர். அவர் வந்து தன்னுடைய படுக்கையை விரிக்கும் சூழலில், சத்தம் கேட்டு எழுந்து கொள்கிறார் ராஜி. தங்களது திருமணத்தின்போது நடந்த உண்மைகளை குடும்பத்தினர் அனைவரிடமும் கூறட்டுமா என்று ராஜி கேட்கிறார். இதையடுத்து உடனே போய் சொல் என்று கோபத்துடன் கூறுகிறார் கதிர். தொடர்ந்து தன்னை தன்னுடைய அப்பா திட்டுவது எப்படி இருந்தாலும் நிற்காது என்றும் இந்த விஷயம் கேள்விப்பட்டவுடன் இதை ஏன் தன்னிடம் கூறவில்லை என்று தன்னிடம் சண்டை போடுவார் என்றும் கதிர் கூறுகிறார்.
விளக்கம் கொடுத்த கதிர்: தொடர்ந்து திருமணத்தை நடத்திவைத்த தன்னுடைய அம்மா கோமதிக்கும் திட்டுவிழும் என்றும் இந்த குடும்பத்தில் ஒருவராக ராஜியை பாண்டியன் ஏற்றுள்ள சூழலில் இந்த விஷயத்தை கேள்விபட்டால் பாண்டியன் இதே அன்புடன் ராஜியிடம் இருப்பாரா என்பது கேள்விக்குறிதான் என்றும் கதிர் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. மேலும் திருமணம் நடக்கும் இந்த சூழலில் இந்த விஷயத்தை வெளிப்படுத்தினால் எத்தகைய களேபரங்கள் நடக்கும் என்றும் அவர் ராஜியிடம் கேள்வி கேட்பதாக காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











