கதிர் -ராஜி கல்யாணத்தை நான்தான் நடத்தி வச்சேன்னு சொல்லப்போறேன்.. கோமதியின் அதிரடி முடிவு!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில், பாண்டியன் அடித்ததால் கதிர் குறித்து பழனிவேல் அவரிடமே கேள்வி எழுப்புகிறார். ஏன் எப்போதும் கதிரை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே எதிர்கொள்கிறீர்கள் என்று அவர் கேட்க, கதிர் என்னுடைய பிள்ளை என்று பாண்டியன் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
இதனிடையே, தான் கதிருக்கும் ராஜிக்கும் திருமணம் செய்து வைத்ததால்தான் பாண்டியன் கதிரை கண்டபடி பேசுவதாகவும் நடந்துக் கொள்வதாகவும் நினைத்து கோமதி தொடர்ந்து கண்ணீர் வடிக்கிறார். இதனால் ராஜிக்கும் கதிருக்கும் தான்தான் திருமணம் செய்து வைத்தேன் என்ற உண்மையை பாண்டியனிடம் கூறப்போவதாகவும் சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த காட்சிகள் பாண்டியன் கதிரை அடித்தது தொடர்பாகவே காணப்பட்டது. கடையில் வந்து வேலை செய்ய மாட்டேன் என்று கதிர் கூற, இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன் அவரை கன்னத்தில் அறைந்துவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு செல்கிறார். அவருடன் செல்லும் பழனிவேல் இதுகுறித்து அவரிடமே கேட்கிறார். எப்போதும் கதிரை மட்டும் அடிப்பதும் திட்டுவதுமாக ஏன் இருக்கிறீர்கள் என்று பழனிவேல் கேட்க, அவன் என்மகன் அவனை எப்படி நடத்த வேண்டும் என்று தனக்கு தெரியும் என்பதாக பாண்டியன் கோபத்துடன் கூறுகிறார்.
தங்கமயிலிடம் ராஜி ஆத்திரம்: இதனிடையே, வீட்டில் தன்னுடைய மகனை பாண்டியன் அடித்தது குறித்து கோமதி கண்ணீர் விட்டு வருந்துவதாக காணப்படுகிறது. மற்றவர்கள் முன்னிலையில் எப்படி பாண்டியன் அடிக்கலாம் என்று அவர் கேட்க, இதற்கு பதிலளிக்கும் தங்கமயில், மாமா கூறுவதை ஏன் எதிர்த்து பேசினீர்கள் என்று கதிரிடம் கேள்வி எழுப்புகிறார். தங்களது வீட்டில் தன்னுடைய தந்தையின் பேச்சை மறுத்து யாருமே பேச மாட்டோம் என்று கூறும் தங்கமயில், பாண்டியனிடம் சென்று மன்னிப்பு கேட்கும்படி கதிரிடம் கூறுகிறார். இதனால் ஆத்திரமடையும் ராஜி, இது அப்பா மற்றும் மகனுக்கிடையில் நடக்கும் விஷயம், இதில் ஏன் தங்கமயில் தலையிட வேண்டும் என்று கோபத்துடன் கேள்வி கேட்கிறார்.
கோபத்தில் தங்கமயில்: இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றும் ராஜி கூற, நான் பிரச்சினையை பெரிதாக்குகிறேனா என்று தங்கமயில் கேட்கிறார். இதையடுதது இந்த விஷயத்தில் அவர்கள் சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம் என்று கோமதி கூற, அங்கிருந்து தன்னுடைய அறைக்கு செல்கிறார் தங்கமயில். தொடர்ந்து சின்னப் பெண்ணாக இருந்தாலும் தன்னை எப்போதும் ராஜி பேச விடுவதில்லை என்று கோபப்படும் தங்கமயில், இந்த விஷயத்தை தன்னுடைய கணவன் சரவணனிடம் கூறி, இன்றைக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்று கூறுகிறார். சரவணனிடம் பேசவும் முயல்கிறார்.
கோமதியின் அதிரடி முடிவு: ஆனால் சரவணனோ, கதிரை சமாதானப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார். சரவணனும் செந்திலும் கதிரை சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் இது வழக்கமாக நடப்பதுதானே, அதனால் தான் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கதிர் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் வீட்டிற்கு சீக்கிரமாகவே வரும் மீனா, கோமதியிடம் பேச முயல்கிறார். ஆனால் அவரோ, ராஜி -கதிர் விஷயத்தால்தான் பாண்டியன், கதிரை அதிகமாக திட்டுவதாகவும், அவர்கள் திருமணத்தை தான்தான் நடத்தி வைத்தேன் என்ற உண்மையை கூறப் போவதாகவும் கூறுகிறார். இதனால் மீனா மற்றும் ராஜி இருவரும் அதிர்ச்சியடைவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











