Pandian stores 2 serial: என்ன சபதம் இது.. பாண்டியனை கலாய்த்த மீனா.. கடுப்பான செந்தில்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நிலைபெற்று மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலில் செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்களால் மூத்த மகன் சரவணனின் திருமணம் கேள்விக்குறியாகியுள்ளது. எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல, கோமதியின் அண்ணன் சக்திவேலும் பெண் வீட்டாரிடம் சரவணன் குறித்து தொடர்ந்து அவதூறுகளை பரப்பி திருமணத்தை நிறுத்துகிறார். இதனால் பாண்டியன் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாவதாக அடுத்தடுத்த எபிசோட்களில் காணப்படுகின்றன.

சரவணனின் திருமணம் தடை படுவதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் வருத்தப்படும் நிலையில், தன்னுடைய அலுவலகத்தில் உடன் பணிபுரிபவரின் மகளை அவருக்கு பேசுகிறார் மீனா. ஆனால் இதில் சக்திவேல் கலகம் செய்ய நிச்சயம் வரை வந்து திருமணம் நிற்கிறது. சரவணனின் உடல்நிலை சரியில்லை என்பதாக பேச்சு எழுகிறது. இதனால் குடும்பத்தில் அடுத்தடுத்து செந்தில் -மீனா, கதிர் -ராஜியும் சண்டையிட்டுக் கொள்கின்றனர். இதனிடையே, தன்னுடைய மகனுக்கு அடுத்த 50 நாட்களில் திருமணம் முடிப்பேன் என்றும் அதுவரை தான் செருப்பு போட மாட்டேன் என்றும் பாண்டியன் சபதம் ஏற்கிறார்.

Vijay TV s Pandian stores 2 serial today 15th March 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர். இந்தத் தொடர் துவங்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில், ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சேனலில் 3வது முன்னணி சீரியலாக அதிக டிஆர்பிகளை இந்தத் தொடர் பெற்றுள்ளது. சீரியலில் பாண்டியன், கோமதி, மற்றும் இவர்களின் மகன்கள், மருமகள்கள், மகள்கள் என கூட்டுக்குடும்பமாக பார்க்க அதிரடி சரவெடியாக உள்ளது. முன்னதாக முதல் சீசனிலேயே குடும்ப உறவுகளின் மகத்துவத்தை கதைக்களமாக கொண்டிருந்த இயக்குர், இதிலும் பேமிலி சென்டிமெண்டையே மையமாக கொண்டு கதைக்களத்தை அமைத்துள்ளார்.

அப்பா -மகன்களின் பாசம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அப்பா மற்றும் மகன்களில் பாசத்தை மையமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் கட்டுக்கோப்பாக இருந்த குடும்பத்தில் செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்கள் கல்லெறிகின்றன. குடும்பத்திற்கு தெரியாமல் இவர்களின் திருமணங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இதனால் ஏற்படும் குழப்பங்களை மையமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதில் தன்னுடைய அம்மாவின் வற்புறுத்தலுக்காக தங்களின் குடும்பத்திற்கு பகையாளிகளான மாமன் மகளை திருமணம் முடிக்கிறார் கதிர்.

சரவணன் திருமண பிரச்சினை: அடுத்தடுத்த இரு திருமணங்களால் மூத்த மகன் சரவணனின் திருமணம் பாதிக்கப்படுகிறது. மேலும் சரவணனுக்கு உடலளவில் பிரச்சினை இருப்பதாக அடுத்தடுத்து பெண் வீட்டார்களிடம் பற்ற வைக்கிறார் சக்திவேல். சரவணனின் அடுத்தடுத்த திருமண ஏற்பாடுகள் நடக்காமல் போவதால் வீட்டில் செந்தில் -மீனா, கதிர் -ராஜி சண்டையிட்டுக் கொள்கின்றனர். இவர்களுக்கு பஞ்சாயத்து செய்வதே பாண்டியன் மற்றும் கோமதியின் வேலையாக மாறுகிறது. இதனிடையே தன்னுடைய மகன் சரவணனுக்கு அடுத்த 50 நாட்களில் திருமணம் முடிப்பேன் என்றும் அதுவரை தான் காலில் செருப்பு அணியமாட்டேன் என்றும் பாண்டியன் சபதம் இடுகிறார்.

கலாய்த்த மீனா.. கடுப்பான செந்தில்: அவரது இந்த சபதத்தால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைகின்றனர். அவருக்கு சுகர் இருப்பதாகவும் காலில் ஏதாவது குத்தினால் என்னவாகும் என்றும் கோமதி வருத்தம் கொள்கிறார். இதனிடையே கடுமையான வெயில் காலம் வருவதையும் கூறி மகன்களிடம் புலம்புகிறார். இதனிடையே, அவரது இந்த முடிவு மீனாவிற்கு நகைப்பை ஏற்படுத்துகிறது. சபதம் போடுவதாக இருந்தால் இன்னொரு கடையை துவங்குவேன், வீட்டின் மேலே இன்னொரு வீடு கட்டுவேன் என்று போடலாம், இது என்ன சின்னப்புள்ள தனமா இருக்கு என்று அவர் ராஜியிடம் நகைப்புடன் கூறுகிறார். இதை செந்தில் பார்ப்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

அம்மாவை திட்டித்தீர்த்த சக்திவேல்: அவர் சிரிப்பதையும் கிண்டலடிப்பதையும் பார்த்து விடுகிறார் செந்தில். ஏற்கனவே சரவணன் திருமணம் நின்ற விஷயத்தில் மீனாவுடன் அவர் சண்டையிட்டுவரும் சூழலில் தற்போது அவரது சிரிப்பை பார்த்து அதற்கும் சண்டையிடுகிறார். முன்னதாக பாண்டியனின் இந்த சபதம் குறித்து தன்னுடைய அம்மா மற்றும் அண்ணன்களிடம் கூறுகிறார் பழனிவேல். இதை கேட்டு அம்மா வருத்தப்படும் நிலையில் அதை பார்க்கும் முத்துவேல் மற்றும் சக்திவேல், அந்த குடும்பம் குறித்து யாராவது கவலைப்படுவதாக இருந்தால் அங்கேயே போய்விடலாம் என்று அம்மாவிடம் சண்டையிடுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X