Pandian stores 2 serial: இது எத்தனை பவுன்.. தங்கமயிலின் நகையை சரிபார்க்கும் குழலி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் துவங்கி சில மாதங்களிலேயே இரண்டு பரபரப்பான திருமணங்களை கண்டுள்ளது. செந்தில் மற்றும் கதிர் இருவரின் திருமணங்களும் வீட்டிற்கு தெரியாமல் நடந்து முடிந்துள்ளன. இதில் செந்தில் மீனாவை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்தார். கதிரோ, ராஜியின் வாழ்க்கையை காக்கும்வகையில் தன்னுடைய அம்மாவின் விருப்பத்திற்காக திருமணம் செய்துக் கொண்டார்.

பாண்டியன் குடும்பத்திலேயே முன்னதாக குழலியின் திருமணம் முறைப்படி நடந்த நிலையில், தற்போது சரவணனின் திருமணமும் அதேபோல பெற்றோர் பார்த்து நிச்சயித்து நடக்கவுள்ளது. இன்றைய தினம் சரவணன் -தங்கமயிலின் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தங்கமயிலின் குடும்பத்தினர் அடாவடி பேர்வழிகளாகவும் ஒன்றும் இல்லாதவர்களாகவும் இருக்கும் சூழலில், தன்னுடைய மகளின் திருமணத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் பாக்கியம்.

Vijay TV s Pandian stores 2 serial today 16th April 2024 episode Saravanan -thangamayil engagement

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்களால் மூத்த மகன் சரவணனின் திருமணம் கேள்விக்குறியான நிலையில், கல்யாண வைபோகம் நிகழ்ச்சி மூலம் அதை நிச்சயிக்கின்றனர் பாண்டியன் மற்றும் தங்கமயில் குடும்பத்தினர். தன்னுடைய மகனுக்கு திருமணம் நிச்சயமானால் போதும் என்ற மனநிலையில் இருக்கும் பாண்டியன், தங்கமயில் குடும்பத்தினர் குறித்து எதையும் விசாரிக்காமல் நிச்சயதார்த்தத்திற்கு தேதி குறிக்கிறார்.

சரவணன் -தங்கமயில் நிச்சயதார்த்தம்: தங்கமயில் குடும்பத்தை பார்த்தால் ஏதோ நெருடலாக இருப்பதாக மீனா கூறியதையும் அவர் நிராகரிக்கிறார். தொடர்ந்து நிச்சயதார்த்தத்திற்கு ஜவுளி எடுக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் நிச்சயதார்த்தமும் வந்துள்ளது. இதையொட்டி, முன்னதாக வீட்டிலிருந்து கிளம்பும்போதே பஞ்சாயத்தை துவக்குகிறார் பாண்டியனின் மூத்த மகள் குழலி. மீனா மற்றும் ராஜி போட்ட கோலம் சிறியதாக இருப்பதாக கூறி, அதை தண்ணீர் ஊற்றி அழிக்கிறார். தொடர்ந்து அவர்கள் காதலித்து வந்ததால், விற்கும் நகைகளை போட்டுள்ளதாகவும் வம்பிழுக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் கோமதி, தன்னுடைய மருமகள்களுக்கு அரசியின் நகைகளை கொடுத்து போட்டுக் கொள்ள செய்கிறார்.

தொடரும் மீனாவின் சந்தேகம்: இதையடுத்து குடும்பத்தினர் சகிதமாக தங்கமயில் வீட்டிற்கு பாண்டியன் குடும்பத்தினர் செல்கின்றனர். அங்கு சொந்தக்காரர்கள் யாருமே வராததை பார்க்கும் பாண்டியன், அதுகுறித்து தங்கமயில் குடும்பத்தினரிடம் கேட்கிறார். அவரோ, திருமணத்திற்கு அனைவரையும் அழைத்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டதாக கூலாக சொல்கிறார். இதனால் அவர் சமாதானமடையவில்லை என்றாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. தொடர்ந்து மீனாவும் இதேகேள்வியை செந்திலிடம் கேட்கிறார். அவருக்கு தங்கமயில் குடும்பம் குறித்து தொடர்ந்து சந்தேகம் இருந்தவண்ணம் உள்ளது.

தொடர்ந்து வம்பிழுக்கும் குழலி: இதனிடையே தங்கமயிலிடம் நிச்சயதார்த்த புடவை கொடுக்கப்படுகிறது. முன்னதாக தங்கமயிலின் வருகைக்காக காத்திருந்த சரவணனை செந்தில், அரசி, மீனா உள்ளிட்டவர்கள் கலாய்த்த சம்பவங்களும் நடந்தேறுகின்றன. இதனிடையே பெண்ணை உள்ளே ரூமில் சென்று மீனா, அரசி, ராஜி மற்றும் குழலி ஆகியோர் சந்திக்கின்றனர். அப்போது தன்னுடைய அடுத்தடுத்த தம்பிகளின் திருமணம் வீட்டிற்கு தெரியாமல் நடந்ததை குத்திக்காட்டும் குழலி, நீயாவது உன்னைப்பற்றி சொல், தெரிந்துக் கொள்ளலாம் என்று தங்கமயிலிடம் கூறுகிறார். இதனால் மீனா மற்றும் ராஜியின் முகம் மாறுகிறது.

நகையை கணக்குப்போடும் குழலி: இதனிடையே தங்கமயில் அணிந்திருக்கும் நகைகள் பளிச்சென்று இருப்பதாக பாராட்டு தெரிவிக்கும் குழலி, எங்கே வாங்கினீர்கள் என்று அடுத்த கேள்வியை அடுக்குகிறார். அவை அனைத்தும் போலியானவை என்பதால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தங்கமயில் முழிப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. தொடர்ந்து பெண்ணை அழைத்து செல்வதற்காக ரூமிற்குள் வரும் பாக்கியம், இதற்கு பதில் சொல்வதாகவும் காணப்படுகிறது. எப்படியோ ஒவ்வொரு விஷயமாக சமாளிக்கிறார் பாக்கியம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X