Pandian stores 2: மொத்தக் குடும்பமும் உனக்கு எதிரா திரும்பிடும்.. தங்கமயிலை கதிகலங்க வைத்த பாக்கியம்

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை சிறப்பாக கவரும்வகையில் அமைந்திருந்தது. சரவணன் மற்றும் தங்கமயில் சென்னைக்கு ஹனிமூன் சென்ற நிலையில் ஹோட்டலுக்கு எக்ஸ்ட்ராவாக கட்ட வேண்டிய 21 ஆயிரம் ரூபாயை கதிர் பாண்டியனின் அக்கவுண்ட் மற்றும் கடையின் கல்லாவில் இருந்து எடுத்து அனுப்புகிறார்.

அன்றைய தினம் கடையின் கணக்கு வழக்குகளை அரசியின் உதவியுடன் எழுதும் பாண்டியன் கடைக்கணக்கில் 1000 ரூபாய் குறைவதை கண்டறிகிறார். என்றைக்கும் இல்லாத திருநாளாக கதிர் அன்றைய தினம் கடைக்கு வந்ததை நினைவுக்கூறும் பாண்டியன், அவர் பணத்தை எடுத்தாரா என்று கேள்வி எழுப்புகிறார்.

Television Pandian stores 2 serial Vijay TV 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் மிக சிறப்பாக அதே சமயம் செந்தில் மற்றும் பழனிவேல், கதிர் ஆகியோரின் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பரபரப்புடன் காணப்பட்டது. சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் சென்னைக்கு ஹனிமூன் சென்ற நிலையில் அங்கு ஒரு ஹோட்டலில் ஆன்லைன் மூலம் ரூம் புக் செய்திருந்தார் தங்கமயில். ஆனால் அவர் தவறாக புக் செய்த நிலையில் மேலும் 21 ஆயிரம் ரூபாய் கட்டினால் மட்டுமே ஓட்டல் அறையில் ரூம் கிடைக்கும் என்றும் அல்லது அட்வான்ஸ் தொகையும் கிடைக்காது என்றும் ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

கணக்கில் குறைந்த 1000 ரூபாய்: இதையடுத்து கையில் ஐயாயிரம் ரூபாய் மட்டுமே வைத்திருந்த சரவணன், இந்த விஷயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார். தொடர்ந்து தன்னுடைய தம்பிகளிடம் உதவி கேட்கிறார். அவர்கள் பணத்தை ஏற்பாடு செய்து அனுப்ப மூன்று மணி நேரம் ஆன நிலையில் ஹோட்டல் வாசலிலேயே தங்கமயிலுடன் சரவணன் நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனிடையே தன்னுடைய அப்பாவின் அக்கவுண்டில் இருந்து பத்தாயிரம் ரூபாயும் கடையின் கல்லாவிலிருந்து ஆயிரம் ரூபாயும் எடுத்து கதிர் தன்னுடைய அண்ணனுக்கு உடனடியாக அனுப்பி வைக்கிறார். இதனிடையே இன்றைய எபிசோடில் வழக்கம் போல கடை கணக்குகளை தன்னுடைய மகள் அரசியின் துணையோடு எழுதும் பாண்டியன், கடை கணக்கில் ஆயிரம் ரூபாய் குறைவதை கண்டுபிடிக்கிறார். அது எப்படி சாத்தியம் என்று பலவாறாக கேள்வி எழுப்புகிறார்

சமாளிக்கும் செந்தில்: தொடர்ந்து செந்தில் மற்றும் பழனிவேலிடம் இது குறித்து கேட்கிறார். அவர்கள் மழுப்பும் சூழலில் என்றைக்கும் இல்லாத திருநாளாக அன்றைய தினம் கதிர் கடைக்கு வந்ததால் அவர் மீது பாண்டியனுக்கு சந்தேகம் திரும்புகிறது. இதையடுத்து கதிரை கூப்பிட்டு விசாரிக்கிறார். ஆனால் அவரோ தான் எதையும் எடுக்கவில்லை என்று ஒரே போடாக போடுகிறார். தொடர்ந்து அவர் விசாரிக்கும் நிலையில் வியாபாரி ஒருவர் பணம் கொடுத்த நிலையில் 13,500 மட்டுமே கொடுத்ததாகவும் தான் தவறுதலாக 14,500 என்று கூறி விட்டதாகவும் செந்தில் கூறி ஒருவழியாக அந்த சூழலை சமாளிக்கிறார். திட்டும் வாங்குகிறார்.

ஹனிமூன் போட்டோஸ் குரூப்: இந்நிலையில் ஹனிமூன் போட்டோஸ் என்ற ஒரு குரூப்பை உருவாக்கி அதில் தாங்கள் சென்னையில் எடுக்கும் புகைப்படங்களை அனுப்பி வைக்கிறார் தங்கமயில். இது குறித்து சரவணன் கேள்வி எழுப்ப தாங்கள் ஹனிமூனில் இருப்பதால் தங்களை அவர்கள் தொந்தரவு செய்ய தயங்குவார்கள் என்றும் அதனால் தாங்கள் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தங்கமயில் இதற்கு விளக்கம் அளிக்கிறார். இப்படி மற்றவர்களை குறித்து அதிகமாக யோசிக்கும் பெண்ணாக தங்கமயில் இருப்பது குறித்து சரவணன் பெருமைப்படுகிறார்.

தங்கமயிலை குழப்பும் பாக்கியம்: இந்நிலையில் தங்க மயிலுக்கு அவரது அம்மா பாக்கியம் கால் செய்து பேசுகிறார். தான் தன்னுடைய சக்தியை மீறி தங்க மயிலுக்கு திருமணம் செய்து வைத்து விட்டதாகவும் ஆனால் அவர் தன்னுடைய கணவனை தன்னுடைய பிடிக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பாக்கியம் கூறுகிறார். தொடர்ந்து ஹோட்டலுக்கு வெளியில் மூன்று மணி நேரம் நிற்க வைத்ததற்காக ஒரு நாள் முழுவதும் சரவணனிடம் கோபத்தை காட்டியிருக்க வேண்டும் என்றும் தங்க மயிலுக்கு பாக்கியம் அட்வைஸ் செய்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தாங்கள் இந்த திருமணத்திற்காக சொன்ன பொய்கள் வெளியில் வந்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மொத்தமும் தங்கமயிலுக்கு எதிராக திரும்பி விடுவார்கள் என்றும் கூறி தங்கமயிலை கதிகலங்க வைக்கிறார் பாக்கியம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X