Pandian stores 2: கதிரை மாமா அடிச்சதில் உனக்கு கோபம் இல்லையா.. ராஜியிடம் போட்டு வாங்கும் தங்கமயில்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் வழக்கமான கலாட்டாக்கள், சண்டைகள், பரஸ்பர கைகோர்த்தல்கள் என அனைத்து விஷயங்களும் சிறப்பாக அமைந்திருந்தன. சாப்பாட்டு மேஜையில் தன்னுடைய கோபத்தை கோமதி காட்ட முயல, அதை புரிந்துக் கொள்ளாமல் சகஜமாக பாண்டியன் செயல்படுகிறார்.

இதுகுறித்து தன்னுடைய மருமகள்கள் ராஜி, மீனாவிடம் கோமதி அங்கலாய்க்க, அங்கு வரும் தங்கமயில் ராஜியிடம் மாமா கதிரை அடித்த நிலையில் அவர் மீது கோபம் இல்லையா என்று கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. ஆனால் மாமாவிடம் கோபம் இல்லை, வருத்தம் இருக்கிறது என்று ராஜி கூறுவதாகவும் காணப்பட்டது. ராஜி மற்றும் மீனா இருவரும் அந்த குடும்பத்தினரை சரியாக புரிந்து கொண்டு நடந்து கொள்ளும் நிலையில் தங்கமயில் மட்டும் தன்னுடைய அம்மாவின் பேச்சை கேட்டு வித்தியாசமாக நடந்து வருகிறார்.

Television Pandian stores 2 serial Vijay tv 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் வழக்கமான குடும்ப கலாட்டாக்கள், சிண்டு முடித்தல்கள், அன்னியோன்யம், ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து உறவாடுதல் என அடுத்தடுத்த சம்பவங்களை மையமாகக் கொண்டு காட்சிகளை வெளிப்படுத்தியது. இன்றைய எபிசோடில் அனைவரும் சாப்பாட்டிற்காக உட்காந்திருக்க உள்ளே இருந்து தட்டுகளை எடுத்து வரும் கோமதி, பாண்டியன் முன்பு டொப்பென்று வைக்கிறார். அவரது கோபத்தை புரிந்துக் கொள்ளாமல் பார்த்து வை என்று கோமதியிடம் பாண்டியன் கூறுவதாக காணப்பட்டது.

போட்டு வாங்கும் தங்கமயில்: இந்நிலையில் கோமதி, மீனா, ராஜி சாப்பிடுகின்றனர். ராஜி கதிருக்காக காத்திருப்பதாக கூற, கோமதி அவரை சாப்பிட வைக்கிறார். இந்நிலையில் அங்கு வரும் தங்கமயில், ராஜியிடம் காலையில் மாமா கதிரை அடித்தது குறித்து எந்தவித கோபமும் இல்லாமல் அவரிடம் சகஜமாக பேசுகிறாயே என்று கேட்கிறார். வழக்கம் போல இந்த விஷயத்தில் ஆதாயம் தேட தங்கமயில் முயல, ராஜியோ மாமா மீது வருத்தம் உள்ளது ஆனால் கோபம் எல்லாம் இல்லை நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தானே என்று தங்கமயில் திட்டத்திற்கு பிடி கொடுக்காமல் பேசுகிறார்.

உற்சாகமாக பேசும் கதிர்: இதையடுத்து மொட்டை மாடியில் வழக்கம் போல அண்ணன், தம்பிகள், சித்தப்பா பழனிவேல் என அனைவரும் சேர்ந்து கலகலப்பாக பேசி சிரிப்பதாக காணப்படுகிறது. அனைவரிடமும் பேசும் கதிர், தான் தன்னுடைய அப்பாவை இம்ப்ரஸ் செய்வதற்கு புதிய திட்டம் ஒன்றை வைத்திருப்பதாக கூறுகிறார். தான் புதிய தொழில் ஒன்றை துவங்க திட்டமிட்டுள்ளதாகவும் அதன் மூலம் ஒரு பிசினசை பத்து பிசினஸ், 10 பிசினசை 100 பிசினஸ் என முன்னேற்றிக் காட்டி குன்றக்குடியை விலைக்கு வாங்க உள்ளதாகவும் கூறுகிறார். அனைவருக்கும் தனித்தனியாக வீடு வாங்கிக் கொடுப்பதாகவும் கூறுகிறார். அப்போது அங்கு மீனா மற்றும் ராஜி இருவரும் வருகின்றனர்.

பழனிவேல் ஆசை: தன்னுடைய மைத்துனர் பேசுவதை கேட்கும் மீனா, தனக்கும் தன்னுடைய அலுவலகத்திற்கு அருகிலேயே வீடு வாங்கி கொடு என்று கேட்கிறார். அப்போது தான் ஆபீஸிற்கு ஈசியாக சென்று வர சரியாக இருக்கும் என்றும் அவர் கூற, கதிரோ என்ன அண்ணி நான் உங்களுக்காக பெரிய மாளிகையை வாங்கி தரப் போகிறேன், அதில் நீங்கள் ராணி போல செந்திலுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்நிலையில் பழனிவேல் நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரும் இப்படி பேசி சிரிப்பதாகவும் அனைவரும் மொட்டை மாடியிலேயே தூங்கலாம் என்றும் கேட்கிறார்.

சரவணனை தேடிவரும் தங்கமயில்: இதையடுத்து அனைவரும் ஓகே சொல்ல மீனாவும் ராஜியும் அங்கிருந்து கிளம்புகின்றனர். இந்நிலையில் தன்னுடைய கணவன் நீண்ட நேரம் ஆகியும் கீழே வராததை பார்க்கும் தங்கமயில், மொட்டை மாடிக்கு வந்து அவரை அழைக்கிறார். தான் சிறிது நேரத்தில் வருவதாக கூறும் சரவணன் தங்கமயிலை அங்கிருந்து அனுப்பி வைப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X