Pandian stores 2: முடிவுக்கு வந்த செந்தில் -மீனா சண்டை.. கூல்டிரிங்குடன் சண்டைக்கு எண்ட் கார்ட்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ஏராளமான ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது/ சரவணன் திருமணத்திற்காக தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக தோழியின் பெண்ணை மீனா ஏற்பாடு செய்த நிலையில் அந்த திருமணம் சக்திவேலால் நிறுத்தப்படுகிறது. இதனிடையே இதுகுறித்து தெரியாமல் மீனா, குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துச் சென்று அவமானப்படுத்தியதாக செந்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சண்டை போட்டு வந்தார். இந்நிலையில் மீனாவை காணாமல் அவர் பரிதவிப்பதாக காட்சிகள் காணப்பட்டன.

இதையடுத்து மீனாவை அழைத்துச் செல்வதற்காக அலுவலகத்திற்கு சென்ற செந்தில், அவர் அந்த சக ஸ்டாப்பிடம் சண்டை போடுவதை பார்த்து, மீனா இந்த திருமணம் தடைபடுவதற்கு காரணம் இல்லை என்பதை உணர்ந்து கொள்கிறார். இதனால் கடந்த சில தினங்களாக அவர்களின் சண்டை மும்முரமாக இருந்த நிலையில் இன்றைய தினம் இருவரும் சமாதானமடைந்துள்ளனர். இதனிடையே குடும்பத்தில் உள்ளவர்களை இம்ப்ரஸ் செய்யும் வகையில் டீ போட்டு கொடுத்து ராஜி அனைவரையும் கவர்வதாகவும் காட்சியமைப்புகள் காணப்பட்டன. சரவணன் பிறந்தநாளையொட்டி பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் கோயிலுக்கு செல்கின்றனர்.

Vijay TV s Pandian stores 2 serial today 16th March 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பா -மகன்களின் பாசத்தை மையமாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் வெற்றிநடை போட்டு வருகிறது. குடும்ப செண்டிமெண்ட் தூக்கலாக இதன் முதல் சீசனும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிக டிஆர்பிக்களுடன் சேனலின் முன்னணி சீரியலாக வலம் வந்தது. இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் அதேபோல ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக மாறியுள்ளது. இந்த சீரியலில் அப்பாவாக ஸ்டாலின் நடித்து வருகிறார். அம்மாவாக பிரபல நடிகை நிரோஷா நடித்து வருகிறார். இவர்களின் மூன்று மகன்கள் மற்றும் மகள்கள், பகையாளிகளாக இருக்கும் கோமதியின் அண்ணன்கள் என இந்த சீரியல் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களங்களுடன் எபிசோடுகளை ஒளிபரப்பி வருகிறது.

தடைக்குள்ளாகும் சரவணன் திருமணம்: செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்களால் தன்னுடைய மூத்த மகன் சரவணனின் திருமணம் பாதிக்கப்படுவதை கண்டு மன உளைச்சலுக்கு உள்ளாகிறார் பாண்டியன். அடுத்தடுத்து அவர் சரவணன்க்காக பெண் தேடும் படலத்தில் ஈடுபட ஆனால் இந்த திருமண ஏற்பாடுகள்களை சக்திவேல் மற்றும் அவரது மகன் குமரன் இருவரும் குலைத்து வருகின்றனர். சரவணனுக்கு உடலில் பிரச்சனை இருப்பதாக அவர்கள் பெண் வீட்டாரிடம் கூற இதனால் அவரது திருமணம் அடுத்தடுத்து நிற்கிறது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் வருத்தம் அடைகின்றனர்.

கதிர் -ராஜி சண்டை: அவரது திருமண தடைக்கு தாங்கள் தான் காரணம் என்று செந்தில் - மீனா மற்றும் கதிர் -ராஜி என அடுத்தடுத்து சண்டை போட்டுக் கொள்கின்றனர். இதனிடையே சரவணனுக்கு அடுத்த ஐம்பது நாட்களில் திருமணம் செய்து வைப்பேன் என்றும் அதுவரை காலில் செருப்பு போட மாட்டேன் என்றும் பாண்டியன் சபதம் ஏற்கிறார். இதனிடையே இன்றைய எபிசோடில் கதிர் மற்றும் ராஜியின் காதல் கதையை கேட்டு அவர்களது நண்பர்கள் அவர்களை கலாய்கின்றனர். இதனால் ஆத்திரமடையும் கதிர், ராஜியை அங்கிருந்து கூட்டிக்கொண்டு செல்கிறார். நடு ரோட்டிலேயே அவர்கள் இருவரும் இதுகுறித்து சண்டையிட்ட நிலையில் அங்கு வரும் செந்தில் அவர்களை சமாதானப்படுத்துகிறார்.

ராஜிக்கு செந்தில் ஆலோசனை: ராஜியிடமும் கதிரின் நல்ல குணங்கள் குறித்து பேசுகிறார். மேலும் வீட்டில் உள்ளவர்களை ராஜி இம்ப்ரஸ் செய்து விட்டால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்வார்கள் என்றும் ஆலோசனை கூறுகிறார். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மீனாவிடம் கேட்டுக் கொள்ளுமாறும் செந்தில் கூறுகிறார். இதையடுத்து வீட்டிற்கு வரும் ராஜி, அனைவருக்கும் டீ போட்டுக் கொடுத்து பாராட்டு பெறுகிறார். இதனிடையே அலுவலகத்தில் இருந்து மீனா வருவதற்கு தாமதமாகும் சூழலில் அவரை தேடி செந்தில் அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு முன்னதாக சரவணன் வேண்டாம் என்று கூறி அவமானப்படுத்திய சக ஸ்டாப்பிடம் மீனா சண்டை இடுவதை செந்தில் பார்ப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

சமாதானமடையும் செந்தில் -மீனா: இதனால் மீனா வேண்டுமென்றே இந்த விஷயத்தை செய்யவில்லை என்பது உறுதியாக மீனாவிடம் அவர் முன்னதாக தொடர்ந்து சண்டை போட்டு வந்த செந்தில் தற்போது சமாதானம் ஆகியுள்ளார். ஆனால் மீனா தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்த, அவர் மிகவும் சூடாக இருப்பதாகவும் கூலாக ஏதாவது குடிக்கலாம் என்றும் கூறி அவருக்கு சோடா வாங்கி கொடுக்கிறார் செந்தில். இவ்வாறு கூல்டிரிங்குடன் இவர்களது சண்டை சமாதானம் ஆகிறது. இதனிடையே சரவணன் பிறந்த நாளை ஒட்டி கோமதி மற்றும் பாண்டியன் இருவரும் கோயிலுக்கு செல்கின்றனர். அங்கு பாண்டியன் செருப்பு போடாமல் நடந்துவர, வழியில் அனைவரும் கலாய்க்கின்றனர். தொலைந்து விடும் என்று நினைத்து செருப்பு போடவில்லையா என்று ஒருவர் கேட்கிறார் இந்நிலையில் பாண்டியனின் காலில் முள் குத்துவதாக இன்றைய சீரியலில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X