Pandian stores 2 serial: வீட்டை முற்றுகையிட்ட கடன்காரர்கள்.. கதறிய தங்கமயில் அப்பா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்யும் வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியலில் தற்போது சரவணன் -தங்கமயில் திருமணத்தையொட்டி அடுத்தடுத்த காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. தங்கமயில் குடும்பத்தினர் அடுத்தடுத்து பலரிடம் கடன் வாங்கி உள்ள நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் கடன்காரர்கள், கடனை திருப்பிக் கேட்டு அவர்களிடம் தகராறு செய்கின்றனர்.
இந்நிலையில் பெண் அழைப்பிற்காக தங்கமயில் வீட்டிற்கு வரும் குழலி, மீனா உள்ளிட்டவர்களுக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து கடன்காரர்களையும் சமாளிக்கும் தங்கமயில் பெற்றோர், பாண்டியன் குடும்பத்தினரையும் சமாளிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் மாஸ் சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. முன்னதாக செந்தில் மற்றும் கதிரின் திருமணங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த இருவரின் திருமணங்களும் சாதாரணமாக நடக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினைகளில் சிக்கி பரபரப்பான காட்சிகளுடன் இந்த திருமணங்கள் நடந்து முடிந்தன. சரவணனுக்கு வீட்டில் பாண்டியன் பார்த்து பிக்ஸ் செய்த திருமணம் தான் என்பதால் பிரச்சினைகள் அதிகமாக இல்லாமல் இந்த திருமணத்தை நடத்துவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
சரவணன் -தங்கமயில் திருமணம்: ஆனால் அது எப்படி என்று களம் இறங்கியுள்ளார் இயக்குனர். மற்ற இருவரை காட்டிலும் சரவணனின் திருமணத்தில்தான் அதிகமான பிரச்சனைகளை புகுத்தி வருகிறார். ஒரு பக்கம் அடாவடியான தங்கமயில் குடும்பத்தினர், அடுத்ததாக இது குறித்து எந்த விஷயமும் தெரியாமல் அவர்களிடம் போய் சிக்க போகும் பாண்டியன் குடும்பத்தினர், தொடர்ந்து தங்கமயில் குடும்பம் குறித்து சந்தேகத்தை கிளப்பி வரும் மீனா, இதனிடையே திருமணத்தை ஏதேதோ பொய்களை அடுக்கி தங்க மயிலின் அப்பா மற்றும் அப்பா இருவரும் நடத்த முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஆப்பு வைப்பது போல கடன்காரர்கள் திருமணத்திற்கு முந்தைய நாள் வீட்டு வாசலில் வந்து சத்தம் போடுகின்றனர்.
சமாளிக்கும் தங்கமயில் பெற்றோர்: வாசலில் இருந்தபடி கடன்காரர்கள் கத்துவதை கேட்டுக்கொண்டே அவர்கள் வர, அவர்களை சமாளித்து வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார் பாக்கியம். தொடர்ந்து தங்கமயில் அப்பா கடன்காரர்களிடம் காலில் விழாத குறையாக கெஞ்சி தன்னுடைய மகளின் திருமணத்தை நிறுத்திவிட வேண்டாம் என்று கேட்கிறார். இதையடுத்து பரிதாபம் பார்க்கும் கடன்காரர்கள், ஒரு வாரத்தில் கொடுக்கவில்லை என்றால் நடப்பதே வேறு என்று எச்சரிக்கை விட்டு செல்கின்றனர். இதுகுறித்து பெண் அழைப்பிற்காக வந்த பாண்டியன் குடும்பத்தினர் அனைவரும் கேள்வி கேட்க, அதற்கு தங்கமயிலின் அம்மா, அவர்கள் தங்க மயிலை பெண் கேட்டதாகவும் பையன் சரியில்லாததால் தாங்கள் கொடுக்கவில்லை என்றும் அதனால் தற்போது வந்து அவர்கள் சண்டையிடுவதாகவும் மழுப்பலாக சமாளிக்கிறார்.
சந்தேகத்தை கிளப்பும் குழலி: இதற்கெல்லாம் இப்படி சண்டை போடுவார்களா என்று மீனாவிடம் கேட்கிறார் குழலி. இந்த விஷயத்தில் தனக்கு துவக்கத்திலிருந்து சந்தேகம் இருக்கிறது என்று மீனா கூறுகிறார். இந்நிலையில் முன்னதாக கடன்காரர்கள் வீட்டு வாசலில் சண்டை போட்டதையடுத்து தங்கமயில் உடனடியாக சரவணனுக்கு கால் செய்து எந்த பிரச்சனை வந்தாலும் தன்னை விட்டுப் போக மாட்டீர்களே என்று கேள்வி எழுப்புவதாக காணப்பட்டது. அதற்கு குழப்பத்துடன் சரவணன் தான் எப்போதும் அவளுடன் இருப்பதாக வாக்களிக்கிறார். இன்றைய எபிசோடின் அடுத்தடுத்த காட்சிகள் பரபரப்பாக காணப்பட்டன.


Click it and Unblock the Notifications











