Pandian stores 2: சரவணனிடம் சண்டை போட்ட தங்கமயில்.. விட்டுக்கொடுக்காதே என்று பாக்கியம் அட்வைஸ்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த சுவாரஸ்யமான காட்சிகள் அமைந்துள்ளன. தன்னுடைய அம்மாவை வீட்டைவிட்டு தன்னுடைய அப்பா வெளியேற்றியது குறித்து ராஜி, கதிரிடம் ஆதங்கப்பட்டு பேசுகிறார். அவருக்கு கதிர் சமாதானம் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

இதேபோல கல்லாவில் இருந்து 1000 ரூபாயை கதிர்தான் எடுத்தார் என்பது தெரியவரும் மீனா, அதிர்ச்சிக்குள்ளாகிறார். இந்த உண்மை தெரிந்தால் பாண்டியன் எப்படி ரியாக்ட் செய்வாரோ என்று அவர் கவலைப்படுவதாகவும் காட்சிகள் அமைந்திருந்தன. இதனிடையே தன்னுடைய அம்மா சொல்வதற்கிணங்க ஹனிமூன் போன இடத்திலும் தன்னுடைய கணவன் சரவணனிடம் சண்டை போடுகிறார் தங்கமயில்.

television Pandian stores 2 serial Vijay TV

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்து சுவாரஸ்யங்கள் நிறைந்த காட்சிகள் அமைந்துள்ளன. தன்னுடைய அம்மாவை, அப்பா வீட்டைவிட்டு வெளியேற்றியது குறித்து ராஜி தொடர்ந்து கண்ணீருடன் கதிரிடம் ஆதங்கப்படுகிறார். ராஜியை சமாதானப்படுத்தும் கதிர், தொடர்ந்து ராஜியின் கோச்சிங் கிளாஸ் குறித்து கேள்வி எழுப்புகிறார். இதனால் அதிர்ச்சிக்குள்ளாகும் ராஜி, கதிரிடம் இந்த விஷயத்தை கூறிவிடலாம் என்று தீர்மானிக்கிறார். ஆனால் கதிர் மிகவும் சோர்வாக இருக்க, தற்போதைக்கு இந்த விஷயத்தை கூற வேண்டாம் என்றும் முடிவெடுக்கிறார்.

மீனாவிற்கு தெரியவந்த உண்மை: இதனிடையே, கடை கல்லாவில் இருந்துதான் 1000 ரூபாய் எடுக்கப்பட்டது என்ற உண்மை மீனாவிற்கு தெரியவருகிறது. ஆனால் 10,000 ரூபாய் எடுத்தது குறித்து மீனாவிடம் மறைக்கிறார் செந்தில். இந்த 1000 ரூபாயை கதிர்தான் எடுத்தார் என்பது தெரியவந்தால், தன்னுடைய மாமனார் பாண்டியன் எப்படி ரியாக்ட் செய்வார் என்று மீனா கவலைப்படுகிறார். மேலும் உண்மை தெரியாமல் தொடர்ந்து பாண்டியன் தங்கமயிலை பாராட்டுவது குறித்தும் செந்திலிடம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

television Pandian stores 2 serial Vijay TV

அம்மாவிற்கு கட்டுப்படும் தங்கமயில்: இதனிடையே, தன்னுடைய அம்மா பாக்கியத்தின் அட்வைஸ்படி, தன்னை ஹோட்டல் வாசலில் 3 மணிநேரம் நிற்கவைத்தது குறித்து கோபத்துடன் சண்டையிடுகிறார் தங்கமயில். சண்டையிட்டு, அறைக்கு வெளியில் தங்கமயில் செல்ல, அவரை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் சரவணன் முழிக்கிறார். தொடர்ந்து செந்திலுக்கு கால் செய்து அட்வைஸ் கேட்கிறார். செந்திலோ, முதலிலேயே காலில் விழுந்துவிட்டால் ஆயுசுக்கும் அந்த நடைமுறை தொடரும் என்றும், எதையும் கண்டுக் கொள்ளாமல் இழுத்துப் போத்திக் கொண்டு தூங்கும்படியும் கூறுகிறார். சரவணனும் அவ்வாறே செய்ய, தங்கமயில் கோபப்படுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

television Pandian stores 2 serial Vijay TV

சரவணனை வழிக்கு கொண்டுவர வேண்டும்: முன்னதாக ரூம் வாசலில் வந்து தன்னுடைய அம்மாவிற்கு கால் செய்கிறார் தங்கமயில். அவர், சரவணனிடம் தொடர்ந்து தன்னுடைய கெத்தை காட்டி அவரை வழிக்கு கொண்டுவரும் வழிமுறைகளை கூறுகிறார். சரவணன் செய்யும் விஷயங்களுக்கு விட்டுக் கொடுக்காதே என்று அவர் கூற, அவர் கூறியது சரிதான் என்பதாக தங்கமயிலும் யோசிக்கிறார். சரவணனை வழிக்கு கொண்டுவந்துவிட்டால், பாண்டியன் இல்லத்தில் தங்கமயிலின் மரியாதை அதிகரிக்கும் என்றும் பாக்கியம், அறிவுறுத்துவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X