Pandian stores 2 serial: மாமனாருக்கும் சாப்பாடு எடுத்து சென்ற தங்கமயில்.. திட்டுவாருன்னு பார்த்தா?

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடிலும் தங்கமயிலின் அடுத்தடுத்த ஆட்டங்களே காட்சிகளாக ஒளிபரப்பாகின. இன்றைய எபிசோடில் தன்னுடைய கணவனுக்கு சாப்பாடு எடுத்து செல்லும்போது மாமனார் பாண்டியன் மற்றும் பழனிவேல் உள்ளிட்டவர்களுக்கும் சாப்பாடு எடுத்து செல்கிறார் தங்கமயில்.

கோமதி இது குறித்து வேண்டாம் என்றும் பாண்டியன் கண்டிப்பாக திட்டுவார் என்றும் கூறும் சூழலில் தான் எடுத்து கொண்டு சென்றால் மாமா திட்ட மாட்டார் என்று தங்கமயில் மிகவும் உறுதியாக கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது அதற்கு ஏற்ப கடைக்கு சாப்பாடு எடுத்துச் சென்ற தங்கமயிலிடம் முதலில் வேண்டாம் என்று கூறினாலும் இறுதியில் அவரை தன் வழிக்குக் கொண்டு வருகிறார் தங்கமயில்.

Television Pandian stores 2 serial Vijay tv 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடிலும் தங்கமயில் ஆட்டம் தொடர்வதாகவே காட்டப்பட்டுள்ளது. தன்னுடைய கணவன் சரவணனுக்கு அவரது கடைக்கு சாப்பாட்டை எடுத்து சென்று தரும் வழக்கத்தை தங்கமயில் ஏற்படுத்துகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் தன்னுடைய மாமனார் பாண்டியன் மற்றும் பழனிவேலுக்கும் அவர்கள் கடைக்கு சாப்பாட்டை எடுத்து செல்கிறார் தங்கமயில். இதற்கு கோமதி மறுப்பு தெரிவிக்கிறார். புது பழக்கத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் வீட்டிற்கே வந்து சாப்பிடுவார்கள் என்றும் கோமதி கூறுகிறார்.

கோமதியை சமாளிக்கும் தங்கமயில்: ஆனால் கோமதியை சமாளிக்கும் தங்கமயில், நாம் தான் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு கடைக்கு சாப்பாடு எடுத்துச் சென்று தன்னுடைய மாமனாருக்கு கொடுக்கிறார். இது என்ன புது பழக்கம், எதற்கு தேவையில்லை, நாங்களே வந்து சாப்பிட்டுக் கொள்வோம் வெயிலில் அலைய வேண்டாம் என்று பலவாறாக பாண்டியன் தங்கமயிலிடம் கூறுகிறார். ஆனால் தான் ஆட்டோவில் தான் வந்ததாகவும் தான் ஒருத்தி வந்தால் அதனால் பிரச்சனை இல்லை என்றும் வீட்டில் சும்மாதானே இருக்கிறேன் என்றும் பாண்டியன் உள்ளிட்ட அனைவரும் வீட்டுக்கு வந்து சென்றால் அலைச்சலுடன் நேரமும் வேஸ்ட் ஆகும் என்றும் பலவாறாக கூறி பாண்டியனை சம்மதிக்க வைக்கிறார் தங்கமயில்.

பாண்டியன் திருப்தி: இந்நிலையில் அவர் பழனிவேலுக்கும் தாத்தாவிற்கும் பரிமாறுவதை பார்த்து பாண்டியன் மிகப்பெரிய அளவில் திருப்திப்பட்டு கொள்கிறார். தான் பார்த்து வைத்த மருமகள் இப்படி மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வது குறித்து அவருக்கு மிக அதிகமான பெருமை ஏற்படுகிறது. அதை தாத்தாவிடம் காண்பித்துக் கொள்கிறார். இந்நிலையில் கடையில் அவர்கள் சாப்பிட்டு கொண்டிருக்க, கடைக்கு ஒரு வாடிக்கையாளர் வருகிறார். அவரிடமும் மிகவும் பொறுப்புடன் பேசி பொருட்களை எடுத்துக் கொடுக்கிறார் தங்கமயில். இதுவும் பாண்டியனுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

முகம் வாடும் செந்தில்: முன்னதாக சென்னைக்கு ட்ரெய்னிங்கிற்காக செந்திலுடன் சென்றுள்ள மீனா, இருவரும் ட்ரைனிங்கை ஒன்றாக அட்டெண்ட் செய்து சேர்ந்து சாப்பிடலாம் என்று திட்டமிடுகின்றனர். ஆனால் அந்த நேரத்தில் சரியாக பாண்டியன் கால் செய்து தான் பார்க்க சொன்ன வியாபாரிகளை பார்க்க கிளம்பியாச்சா என்று செந்திலிடம் கேட்கிறார். இதனால் செந்தில் முகம் வாட, பரவாயில்லை என்று மீனா அவரை சமாதானப்படுத்துகிறார். எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு மாலை சீக்கிரமாக வந்து விடும்படியும் இருவரும் இணைந்து வெளியே சுற்றிப் பார்க்க கிளம்பலாம் என்றும் மீனா கூறுவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.

பாண்டியனிடம் பேசாத ராஜி: டியூஷன் எடுக்க ராஜி திட்டமிட்ட நிலையில் அவரிடம் படிக்க மாணவர்களை அழைத்து வருகிறார் பழனிவேல். மாமனாரிடம் பேசாதது குறித்து கோமதி நியாபகப்படுத்துகிறார். தான் பேசிக் கொள்வதாக ராஜி சமாதானம் சொல்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. மாலை அனைத்து மாணவர்களையும் டியூஷனுக்கு வரும்படி ராஜி கூறுகிறார். தன்னுடைய மாமனாரிடம் இது குறித்து அவர் இன்னும் பேசாத நிலையில் அவர் இதற்கு எப்படி ரியாக்ட் செய்வார் என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்க முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X