Pandian stores 2: தங்கமயிலை தூக்க திட்டமிடும் குமரன்.. திருமணத்தை நிறுத்த என்னல்லாம் யோசிக்கிறாரு!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் திருமண கலாட்டாக்களுடன் ரசிகர்களை வெகுவாக எண்டர்டெயின் செய்யும் வகையில் அமைந்திருந்தது. பெண்ணழைப்பிற்காக சென்ற குழலி, மீனா, ராஜு உள்ளிட்டவர்கள் தங்கமயிலை அழைத்துக் கொண்டு மண்டபத்திற்கு வருகின்றனர். தொடர்ந்து இரவு ரிசப்ஷன் நடக்கிறது.

தன்னுடைய மகனுக்கு சிறப்பாக திருமணம் நடப்பதை பார்க்கும் பாண்டியன் கண்கலங்குவதாக இன்றைய எபிசோடு மிகவும் செண்டிமெண்டாக காணப்பட்டது. இதனிடையே வில்லத்தனம் இல்லாமலா என்பதாக குமரன் கல்யாண பெண்ணான தங்க மயிலை கடத்த திட்டமிடுகிறார். இதன் மூலம் திருமணத்தை நிறுத்துவதற்கும் அவர் திட்டம் தீட்டுகிறார். இதனால் என்ன மாதிரியான குழப்பங்கள் திருமணத்தில் ஏற்படும் என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்.

Vijay TV s Pandian stores 2 serial today 17th May 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் சிறப்பாகவே அமைந்திருந்தது. கல்யாண கலாட்டாவாக பல விஷயங்களை இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. குழலி, மீனா, ராஜி உள்ளிட்டவர்கள் பெண்ணழைப்பிற்காக தங்கமயில் வீட்டிற்கு சென்ற சூழலில் அங்கு கடன்காரர்கள் வந்து சத்தம் போட்டதை அவர்கள் பார்த்துவிட்டனர். ஆனாலும் பாக்கியம் கடன்காரர்களையும் சமாளித்து பாண்டியன் குடும்பத்தினரையும் சிறப்பாக சமாளித்து அவர்களை தொடர்ந்து தங்கமயிலை அழைத்து செல்லும்படி செய்கிறார்.

சரவணனுக்கு சொல்லிக்கொடுக்கும் கதிர்: தங்கமயில் முகம் சோகமாக இருப்பதை பார்த்து குழலி கேள்வி எழுப்ப, அதற்கு நடந்ததை பார்த்து அவள் பயந்துவிட்டதாக பாக்கியம் சமாதானப்படுத்துகிறார். இதையடுத்து தங்கமயிலை அழைத்துக் கொண்டு பாண்டியன் குடும்பத்தினர், திருமண மண்டபத்துக்கு செல்கின்றனர். அங்கு இன்றைய தினம் ரிசப்ஷன் நடைபெறுவதாக காட்டப்படுகிறது. இதில் எப்படி போஸ் கொடுப்பது என்பது தெரியாமல் சரவணன் முழிக்கிறார். இதையடுத்து கதிர் அவருக்கு இப்படி போஸ் கொடுங்கள், அப்படி போஸ் கொடுங்கள் என்று அட்வைஸ் கொடுக்கிறார். ராஜியும் இந்த விஷயத்தில் கதிருடன் இணைந்து கொள்கிறார்.

கண்கலங்கிய பாண்டியன்: இந்நிலையில் போட்டோகிராஃபரோ அவர்களுக்கு செய்தே காட்டி விடுங்கள் என்று கதிர் மற்றும் ராஜியிடம் கூறுகிறார். இதையடுத்து கதிர் ராஜி இருவரும் தயக்கத்துடன் இணைந்து போஸ் கொடுக்கின்றனர். அதே போல சரவணன் -தங்கமயிலும் போஸ் கொடுக்க அங்கு சிறப்பான புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. தொடர்ந்து தன்னுடைய மகனின் திருமணம் இப்படி சிறப்பாக நடைபெறுவது குறித்து பாண்டியன் கண் கலங்கி பேசுகிறார். அதை பார்த்து அங்கு வரும் கோமதி அவர் ஏன் கண்கலங்குகிறார் என்று கேட்க, இதையடுத்து அருகில் இருக்கும் சித்தப்பா, மகனுக்கு திருமணம் நடப்பதை பார்த்து ஆனந்த கண்ணீர் விடுவதாக சொல்கிறார்.

சதித்திட்டம் தீட்டும் குமரன்: சரவணன் தங்கமயில் மட்டுமில்லாமல் கதிர் -ராஜி மற்றும் செந்தில் -மீனா ஆகியோரையும் தனித்தனியாக புகைப்படங்களை எடுக்குமாறு கூறுகிறார் பாண்டியன். அவர்கள் திருமணத்தின் புகைப்படங்கள் தங்களிடம் இல்லாததால் இந்த புகைப்படங்களை எடுத்து தனியாக வீட்டில் மாட்டி வைக்கலாம் என்றும் அவர் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. கல்யாண கலாட்டாக்கள் இப்படியாக போக, ஒரு கட்டத்தில் பாண்டியன் குடும்பத்தினர் சந்தோஷமாக இருப்பதை பொறுக்க முடியாத குமரன் இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று தன்னுடைய நண்பர்களிடம் பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

தங்கமயிலை கடத்த திட்டம்: பாண்டியனை போட்டு தள்ளலாமா என்று நண்பர்கள் கேட்க, இந்த அளவிற்கு போக வேண்டாம் என்று கூறும் குமரன், தங்க மயிலை திருமண மண்டபத்தில் இருந்து கடத்த திட்டமிடும் தன்னுடைய நண்பர்களுக்கு ஓகே சொல்கிறார். இதனால் தங்கமயிலை கடத்துவதற்கு அனைவரும் திட்டமிடுகின்றனர். இதனால் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து அடுத்தடுத்த எபிசோடுகளில் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X