Pandian stores 2 serial: சரவணன்னு ஒரு உத்தமன்.. தேடிய தம்பிகள்.. உற்சாகத்தில் பாண்டியன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்களால் சரவணனின் திருமணம் கேள்விக்குறியாகிறது. பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது சரவணனுக்கும் தங்கமயில் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது
சரவணன் -தங்கமயில் நிச்சயதார்த்தத்தின் நிகழ்வுகள் கடந்த இரு தினங்களாக நடந்த நிலையில், இன்றைய தினம் நிச்சயதார்த்தத்தை அடுத்து குடும்பத்துடன் பாண்டியன் மற்றும் தங்கமயில் குடும்பத்தினர் புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர். சரவணன் -தங்கமயிலின் ஜோடி புகைப்படங்கள் எடுக்கப்பட்ட சூழலில் செந்தில் -மீனா, கதிர் -ராஜி ஆகியோரின் ஜோடி புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. இலவச இணைப்பாக மேட்ரிமோனிக்கு கொடுப்பதற்காக பழனிவேலும் புகைப்படங்களை எடுத்துக் கொள்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தொடர்ந்து சேனலின் மூன்றாவது சீரியலாக மாஸ் காட்டி வருகிறது. இந்த வார டிஆர்பியிலும் அதிகமான புள்ளிகளை பெற்று சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி சீரியல்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த எபிசோட்களால் ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த இரு தினங்களாக சரவணனின் நிச்சயதார்த்தத்தையொட்டிய எபிசோட்கள் ஒளிபரப்பாகின. செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்களால் சரவணனின் திருமணம் கேள்விக்குறியான நிலையில், தற்போது அவரது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
சரவணன் -தங்கமயில் நிச்சயதார்த்தம்: தங்கமயில் என்பவரை சரவணனுக்கு கல்யாண வைபோகம் நிகழ்ச்சி மூலம் பாண்டியன் குடும்பத்தினர் ஃபிக்ஸ் செய்துள்ளனர். தங்கமயில் குடும்பத்தினர் குறித்து பாண்டியன் குடும்பத்தினர் மிகவும் உயர்வான கருத்துக்களை கொண்டுள்ள சூழலில் அவர்கள் அடாவடி பேர்வழிகள் என்று காட்டப்பட்டுள்ளது. பாண்டியன் குடும்பத்தினர் கேட்கும் அனைத்தையும் செய்து வைப்பதாக தங்கமயிலின் அம்மா மற்றும் அப்பா தொடர்ந்து வாக்குறுதி கொடுக்கின்றனர். அவர்களின் இந்த வாக்குறுதிகள் மீனாவிற்கு தொடர்ந்து சந்தேகத்தை கொடுகிறது. இதுகுறித்து குடும்பத்தினரிடம் அவர் தொடர்ந்து சுட்டிக் காட்டுகிறார். ஆனாலும் அவரது சந்தேகம் எடுபடாமல் போகிறது.
குடும்பத்துடன் புகைப்படங்கள்: இதனிடையே நிச்சயதார்த்தத்தில் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். தொடர்ந்து சரவணன் -தங்கமயில், செந்தில் -மீனா, கதிர் -ராஜி ஆகியோர் ஜோடிகளாக புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர். தனக்கு பெண் பார்ப்பதற்காக பெண் வீட்டாரிடம் கொடுப்பதற்காக பழனிவேலும் புகைப்படங்களை எடுத்துக் கொள்கிறார். இதனிடையே வீட்டிற்குவரும் சரவணன், கனவுலகில் இருப்பதை அவரது தம்பிகள், பழனிவேல் கலாய்க்கின்றனர். மேலும் நிச்சயதார்த்தத்தில் எடுத்த புகைப்படங்களை சரவணனுக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர் ஆர்வமில்லாதது போல தனக்கு அனுப்பி வைக்குமாறு கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.
சரவணன்னு ஒரு உத்தமன்: தொடர்ந்து அனைவரையும் ஏமாற்றிவிட்டு தனியாக சென்று அந்தப் புகைப்படங்களையும் தங்கமயிலையும் ரசிக்கிறார் சரவணன். இதைப் பார்க்கும் அவரது தம்பிகள், அவரை தொடர்ந்து கலாய்க்கின்றனர். சரவணன்னு ஒரு உத்தமன் இருந்தாரு, அவர் போட்டோசை வேண்டா வெறுப்பாக அனுப்பி வைக்க சொன்னாரு, இப்ப பார்த்தால், ஆர்வமாக பார்க்கிறாரு என்று அவர்கள் கலாய்க்கின்றனர். இதையடுத்து சரவணன் வெட்கத்தில் நெளிவதை இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. இவர்கள் அனைவரும் கூடி சிரித்து பேசுவதை அந்தப் பக்கமாக போகும் பாண்டியன் மிகுந்த சந்தோஷத்துடன் பார்க்கிறார்.


Click it and Unblock the Notifications











