Pandian stores 2 serial: நிச்சயிக்கப்பட்ட திருமணம்.. கலக்கத்தில் ராஜி.. கலாய்க்கும் கதிர்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர். இந்தத் தொடரில் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ள நிலையில் சீரியல் கடந்த வார டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. முன்னதாக இந்த சீரியலின் முதல் சீசனும் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணியில் இருந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த சிரியல் நிறைவு செய்யப்பட்டு இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது.
தற்போது ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தந்தை -மகன்களின் பாசத்தை மையமாக கொண்டு எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த சீரியலில் பாண்டியனாக ஸ்டாலின் நடித்துவர அவரது மனைவி கோமதியாக பிரபல நடிகை நிரோஷா நடித்து வருகிறார். இவர்களையும் இவர்களது மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் மற்றும் உறவுகளையும் இணைத்து இந்த சீரியல் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. வளர்ந்த மகன்களையும் கட்டுக்கோப்பாக வைத்து வரும் பாண்டியன் மற்றும் குடும்பத்தினரின் வாழ்க்கை மாற்றம் மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் துவக்கம் முதலே இடம்பெற்று வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலின் முதல் சீசன் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. டிஆர்பியிலும் முதல் 3 இடங்களில் தொடர்ந்து இந்த சீரியல் இடம்பெற்றது. இந்நிலையில் 5 ஆண்டுகளை கடந்த இந்த சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எண்ட் கார்ட் போட்ட நிலையில், உடனடியாக இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது. முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின், இந்த சீசனில் அப்பாவாக நடித்து வருகிறார்.
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை: பாண்டியனாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை நடத்தி வரும் ஸ்டாலின், தன்னுடைய குடும்பத்தினரை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். வளர்ந்த மகன்களாக இருந்தாலும் தன்னுடைய தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்துவரும் சரவணன், செந்தில் மற்றும் கதிர் வாழ்க்கையில் திருமணம் ஏற்படுத்தும் மாற்றம் குடும்பத்தையும் எப்படி மாற்றுகிறது என்பதாக இந்தக் கதையின் போக்கு காணப்படுகிறது. தன்னுடைய அப்பாவிற்காக தன்னுடைய காதலையே தியாகம் செய்யும் முதல் மகன் சரவணன் கேரக்டர் இந்தத் தொடரில் காட்டப்பட்டுள்ளது.
செந்தில் -மீனா காதல் திருமணம்: இரண்டாவது மகன் செந்தில் தான் விரும்பிய மீனாவை தன்னுடைய தம்பியின் உதவியுடன் அப்பாவிற்கு தெரியாமல் திருமணம் செய்துக் கொள்கிறார். முதலில் இவர்களது திருமணத்தை குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளாத நிலையில், அடுத்தடுத்த மீனாவின் செயல்பாடுகளால் ஏற்றுக் கொள்கின்றனர். முன்னதாக பாண்டியன் -கோமதி காதலித்து திருமணம் செய்ததால் அவர்களை ஏற்காமல் அவர்களது அண்ணன்கள் பகைமை பாராட்டி வருகின்றனர். இரு குடும்பத்தினருக்கும் இடையில் அடிக்கடி சண்டை எற்படுவதாக காட்டப்படுகிறது. இந்நிலையில் மூத்த அண்ணனின் மகள் ராஜிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
ராஜிக்கு திருமண ஏற்பாடுகள்: ராஜி ஒருவரை காதலித்துவரும் நிலையில், இந்த திருமண ஏற்பாடுகளால் அவர் மனமுடைகிறார். தன்னுடைய அப்பாவிடம் தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால் யாரும் அதை ஏற்பதாக தெரியவில்லை. இதனால் யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வெளியில் வந்து மனமடைந்து அழுகிறார். அந்த நேரத்தில் அங்குவரும் கதிர், ராஜியை கலாய்த்து அவரை கடுப்பேற்றுகிறார். ஏற்கனவே மனதிற்கு பிடிக்காத திருமணத்தால் செய்வது அறியாமல் ராஜி திகைத்து காணப்படும் நிலையில், தன்னுடைய அத்தை மகனும் தன்னை கடுப்பேற்றுவதால் அவரது கோபம் மற்றும் சோகம் அதிகரிக்கிறது.


Click it and Unblock the Notifications











