Pandian stores 2 serial: ஓடிப்போனவள் குறித்து யாரும் பேசவேண்டாம்.. ராஜி மீது முத்துவேல் காட்டம்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் வழக்கம்போல சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் அமைந்திருந்தது. தன்னை விட்டுவிட்டு, தன்னுடைய தம்பிகள், சித்தப்பாவுடன் இரவுமுழுவதும் மொட்டைமாடியில் அரட்டை அடித்துவிட்டு அங்கேயே சரவணன் தூங்கிய நிலையில் தங்கமயில் பரிதவிக்கிறார்.
சரவணனின் இந்த பழக்கம் தொடர்ந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார் தங்கமயில். தன்னுடைய அம்மாவிற்கு நள்ளிரவில் கால் செய்து இதுகுறித்து பேச முயல, அவரோ தூக்கக் கலக்கத்தில் சரியாக பேசாமல் போனை வைத்து விடுகிறார். இதனால் தங்கமயில் மேலும் அப்செட்டாகி இரவு முழுவதும் தூங்காமல் இருப்பதாக இன்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த சுவாரஸ்யங்கள் நிறைந்த காட்சிகள் காணப்பட்டன. திருமணத்திற்கு முன்பு தன்னுடைய தம்பிகள், சித்தப்பா பழனிவேலுடன் மொட்டை மாடியில் தூங்கி பழக்கப்பட்ட சரவணன், திருமணத்திற்கு பிறகு அதை தொடர முடியாத சூழலில் கடந்த எபிசோடில் அனைவருடனும் சிரித்துப் பேசி மொட்டை மாடியில் தூங்குவதாக காணப்பட்டது. இதையடுத்து தங்கமயில் சரவணனுக்காக இரவு முழுவதும் தூங்காமல் காத்திருப்பதாகவும் இதே பழக்கத்தை சரவணன் தொடர்ந்து விடுவாரோ என்று அச்சப்படுவதாகவும் காணப்பட்டது.
பாக்கியம் அட்வைஸ்: இதனிடையே, நள்ளிரவில் தன்னுடைய அம்மா பாக்கியத்திற்கு கால் செய்து இதுகுறித்து கேட்கவும் அவர் முயற்சிக்கிறார். ஆனால் தூக்கக் கலக்கத்தில் எதையும் பேசாமல் அவர் காலை கட் செய்ததால் தங்கமயிலின் மனஉளைச்சல் மேலும் அதிகரிக்கிறது. இதனிடையே, காலையில் அறைக்கு வரும் சரவணன், தங்கமயில் தூங்குவதை பார்த்துவிட்டு சாதாரணமாக கேட்டுவிட்டு வேலைக்கு சென்றுவிடுகிறார். இதனால் அவர்மீது கடுமையான கடுப்புடன் தங்கமயில் காணப்படுகிறார். தொடர்ந்து தங்கமயிலுக்கு கால் செய்யும் பாக்கியம், சரவணனை தொடர்ந்து தன்னுடனேயே இருக்கும்படி செய்யுமாறு அட்வைஸ் செய்கிறார்.
முன்பே கணித்த கோமதி: இந்நிலையில், சரவணனுக்கு மதிய உணவை தான் எடுத்துச் செல்லப் போவதில்லை என்றும் அப்போதுதான் தன்னுடைய அருமை அவருக்கு தெரியும் என்றும் யோசிக்கும் தங்கமயில், அதை கோமதியிடம் கூறுகிறார். இதை கேட்கும் கோமதி, இதெல்லாம் நீண்ட நாட்களுக்கு நடக்காது என்பது தனக்கு முன்பே தெரியும் என்று கூறுகிறார். இதையடுத்து தங்கமயில் மதிய உணவை எடுத்து வராததை பார்க்கும் சரவணன், அவருக்கு கால் செய்கிறார். தங்கமயில் அந்த போனை எடுக்காத நிலையில், தன்னுடைய அம்மாவிற்கு அவர் கால் செய்து கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.
50வது பிறந்தநாள்: இதனிடையே, தன்னுடைய அப்பாவின் 50வது பிறந்தநாளையொட்டி கோயிலுக்கு செந்திலுடன் செல்லும் மீனா, அவரது பெயரில் அர்ச்சனை செய்கிறார். தொடர்ந்து தன்னுடைய அப்பாவை பார்த்து வாழ்த்து சொல்லக்கூட முடியவில்லை என்று அவர் தன்னுடைய வேதனையை செந்திலிடம் வெளிப்படுத்துகிறார். இதனிடையே, அதே கோயிலுக்கு மீனாவின் அப்பாவும் அம்மாவும் வருகின்றனர். மீனாவை பார்த்து அவரது அம்மா சந்தோஷமடைகிறார். ஆனால், மீனாவின் அப்பாவோ மீனாவிடம் தொடர்ந்து கோபப்படுகிறார். கோயிலுக்கு வந்தால் நிம்மதியாக இருக்கலாம் என்றால், இருக்கும் நிம்மதியும் பறிபோய்விட்டதாக கோபத்துடன் பேசுகிறார்.
குமரனின் திருமண ஏற்பாடுகள்: இதனிடையே குமரனுக்கு திருமண ஏற்பாடுகளை சக்திவேல் செய்கிறார். தொடர்ந்து அன்றைய தினமே பெண் வீட்டாரை நேரில் சென்று பார்க்கவும் திட்டமிடுகின்றனர். தொடர்ந்து ராஜி குறித்த பேச்சு எழு, ஓடிப்போனவள் குறித்து யாரும் பேச வேண்டாம் என்று முத்துவேல் கோபத்துடன் கூறுகிறார். இதையடுத்து பழனிவேலுக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று அப்பத்தா கூறுகிறார். ஆனால் பாண்டியன் வீட்டில் எடுபிடி வேலை செய்துக் கொண்டிருக்கும் பழனிக்கு யார் பெண் கொடுப்பார்கள், இந்த வீட்டிற்கு வந்து கௌரவமாக இருந்தால் பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதாக முத்துவேல் கூறுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications