Pandian stores 2 serial: பணப்பையை தட்டிப் பறித்த தங்கமயில்.. அதிர்ச்சியில் கோமதி!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் துவக்கம் முதலே ஏராளமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் தன்னுடைய மாமனாருக்கு தெரியாமல் ராஜி டியூஷனை துவங்கி விடுகிறார். அவரிடம் கூறுமாறு தொடர்ந்து கோமதி கூற, தான் மாமாவிடம் பேசிக் கொள்கிறேன் படிப்பு விஷயத்துக்கு அவர் என்றுமே மறுப்பு தெரிவிக்க மாட்டார் என்று ராஜி கூறுகிறார்.
இந்த நிலையில் அந்த டியூஷனை நடக்க விடாமல் தடுக்க தங்கமயில் தன்னுடைய அம்மாவின் ஆலோசனை மூலம் திட்டம் தீட்டுகிறார். அந்த டியூஷன் தொடர்ந்து நடந்தால், தான் எம்ஏ படிக்காதது அனைவருக்கும் தெரிந்துவிடும் என்று அவர் அச்சப்படுகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த கட்டங்கள் பரபரப்பாக காணப்பட்டன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடு பரபரப்பான காட்சிகளுடன் காணப்பட்டது. இன்றைய தினம் மாலை டியூஷனுக்கு வந்த மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார் ராஜி. அவர் ஒரு மாணவனுக்கு மேக்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க, மற்றொருவர் ஆங்கிலத்தில் சந்தேகம் இருப்பதாக கூறுகிறார். இந்நிலையில் அந்த பக்கமாக வந்த தங்கமயிலை அந்தப் பையனுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்குமாறு கூறுகிறார் ராஜி. தொடர்ந்து அந்த அக்கா தன்னைவிட அதிகம் படித்தவர் என்றும் ஆங்கிலத்தில் எந்த சந்தேகம் இருந்தாலும் அவரிடம் கேட்டுக் கொள்ளலாம் என்றும் ராஜி தங்கமயிலை பாராட்டுகிறார்.
பற்ற வைத்த பாக்கியம்: இந்நிலையில் பிளஸ் டூ மட்டுமே முடித்த தங்கமயில், அங்கிருந்து தன்னுடைய அம்மா கால் செய்வதாக கூறி அங்கிருந்து நழுவுகிறார். இந்நிலையில் போனில் தன்னுடைய அம்மாவிடம் எரிந்து விழுகிறார் தங்கமயில். நடந்த விஷயத்தை அவர் தொலைபேசியில் கூற அந்த டியூஷனை நடத்த விடாமல் செய்யுமாறு பாக்கியம் தங்க மயிலுக்கு அறிவுறுத்துகிறார். இந்த விஷயம் இன்னும் பாண்டியனுக்கு தெரியாத நிலையில் அவருக்கு இந்த விஷயத்தை கூறி, இதுபோல செய்வதால் குடும்ப கௌரவம் குறையும் என்றும் தன்னுடைய அம்மாவிற்கு தெரிந்தால் அவமானமாக மாறிவிடும் என்றும் பாண்டியனிடம் கூறுமாறு தங்க மயிலுக்கு பாக்கியம் அட்வைஸ் செய்கிறார்.
கோமதி, மீனா அச்சம்: இதையடுத்து டியூஷன் விஷயத்தில் தங்கமயில் சமாதானம் அடைகிறார். இந்நிலையில் மீனாவிற்கு கால் செய்து பேசும் கோமதி, இங்கு நடக்கும் கூத்துக்களை பற்றி பேசுகிறார். மதியம் தன்னுடைய கணவருக்கும் கடையில் உள்ளவர்களுக்கும் தங்கமயில் சாப்பாடு எடுத்துச் சென்றதாகவும் இதனால் பாண்டியன் வீட்டிற்கு திரும்பியவுடன் என்னென்ன நடக்கப் போகிறதோ என்றும் தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்துகிறார் கோமதி. மாமாவிற்கு இதெல்லாம் பிடிக்காது என்றும் இன்றுடன் அந்த விஷயத்திற்கு எண்ட் கார்ட் போட்டு விடுவார் என்றும் மீனாவும் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
காத்திருக்கும் மீனா: சென்னையில் இருக்கும் செந்தில், பாண்டியன் சொன்ன அடுத்தடுத்த விஷயங்களை செய்து முடிக்கிறார். ஒரு வியாபாரி கடனை திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலையில், அவருக்காக கடையில் காத்திருக்கிறார். இந்நிலையில் ட்ரெயினிங்கை முடித்துவிட்டு ரூமிற்கு திரும்பும் மீனாவும் செந்திலுக்காக காத்திருப்பதாக காணப்பட்டது. இரண்டு நாட்கள் சந்தோஷமாக சென்னையில் கழிக்கலாம் என்று செந்தில் மற்றும் மீனா இருவரும் திட்டமிட்ட நிலையில் முதல் நாளிலேயே அது சொதப்புவதாக காணப்படுகிறது. இதனிடையே மாலை கடையிலிருந்து பாண்டியன் வந்தவுடன் அவருக்கு ஓடி சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுக்கிறார் தங்கமயில்.
பணப்பையை பறித்த தங்கமயில்: இதனிடையே அவர் கடையிலிருந்து கொண்டுவந்த பணப்பையை கோமதியிடம் கொடுத்து உள்ளே வைக்குமாறு கூற, உடனடியாக அந்த பணப்பையை தங்கமயில் தட்டி பறிப்பதாக இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது. இதை பார்த்து கோமதி, ராஜி மற்றும் அரசி ஆகியோர் அதிர்ச்சி அடைவதாகவும் இன்றைய எபிசோடு காணப்பட்டது. ஆனால் இதை பார்த்து பாண்டியன் மட்டும் மகிழ்ச்சி அடைவதாக எபிசோட் நிறைவடைந்துள்ளது. ஏற்கனவே தங்கமயிலின் நடவடிக்கைகளால் கடுப்பில் இருக்கும் கோமதி, இந்த விஷயத்தில் எப்படி ரியாக்ட் செய்வார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











