Pandian stores 2 serial: என்னது நகைகளை எடை போட போறாங்களா?.. மண்டபத்தில் மயங்கி விழுந்த தங்கமயில்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் சரவணன் மற்றும் தங்கமயிலின் திருமண ரிசப்ஷன் குறித்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகவுள்ளது. இன்றைய எபிசோடில் ரிசப்ஷன் நிறைவடைந்து தங்கமயில் குடும்பத்தினரும் பாண்டியன் குடும்பத்தினரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதாக காணப்படுகிறது,.

தங்கமயில் ஏன் ரிசப்ஷனில் தங்க நகைகளை போட்டுக் கொள்ளாமல் பேன்சி நகைகளை போட்டு இருக்கிறார் என்று குழலி கேள்வி எழுப்புகிறார். அதற்கு மேட்சிங்காக இருக்கும் என்று போட்டுள்ளதாக தங்கமயில் பதிலளிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதையடுத்து அங்கு ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் அதையொட்டி ஏற்படும் விளைவுகளை மையமாகக் கொண்டு இன்றைய எபிசோடின் காட்சிகள் அமைந்துள்ளன.

Vijay TV s Pandian stores 2 serial today 18th May 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடிலும் சரவணன் மற்றும் தங்கமயில் திருமண ரிசப்ஷன் மற்றும் அதையொட்டிய காட்சிகளை காண முடிந்தது. இந்த சீரியலில் நீண்ட இழுபறிக்கு பிறகு சரவணனுக்கு தங்கமயிலுடன் திருமணத்தை பிக்ஸ் செய்கிறார் பாண்டியன். இந்த திருமணத்திலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. தங்கமயில் குடும்பத்தினர் அடாவடித்தனமானவர்கள் என்பது தெரியாமல் அவர்களிடம் பாண்டியன் குடும்பத்தினர் சிக்குகின்றனர்.

மீனா சந்தேகம்: இது குறித்து மீனா முன்னதாக தன்னுடைய சந்தேகத்தை பலமுறை வெளிப்படுத்திய போதிலும் அவரது பேச்சு எடுபடாமல் போகிறது. தங்கமயிலுக்கு 80 சவரன் நகைகள் போடுவதாக அவரது அம்மா கூறிய சூழலில் அவை அனைத்துமே போலி நகைகள். இது குறித்து தொடர்ந்து தங்கமயில் தனது பெற்றோரிடம் பயத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் திருமணத்திற்காக ஒரு லட்சத்திற்குள் துணிமணிகள் எடுக்க பாண்டியன் திட்டமிட்ட சூழலில் மூன்றரை லட்சத்திற்கு அவர் செலவு செய்ய வேண்டியதாகி விடுகிறது. இவ்வாறு தொடர்ந்து பல பிரச்சனைகளை பாண்டியன் குடும்பத்தினர் எதிர்கொள்கின்றனர்.

அடுத்தப் பிரச்சினையை இழுத்துவிட்ட குழலி: இந்நிலையில் சரவணன் மற்றும் தங்கமயில் ரிசப்ஷன் சிறப்பாக நடந்து முடிகிறது. இதனிடையே மண்டபத்திலிருந்து தங்கமயிலை கடத்தவும் இதன் மூலம் திருமணத்தை நிறுத்தவும் குமரன் தன்னுடைய நண்பர்களுடன் திட்டமிடுகிறார் இந்நிலையில் ரிஷப்ஷன் முடிந்தவுடன் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தங்க மயிலை பார்த்து ஏன் அவர் தங்க நகைகளை போடாமல் பேன்சி நகைகளை போட்டு இருக்கிறார் என்று குழலி கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளிக்கும் தங்கமயில், புடவைக்கு மேட்சிங்காக இருக்கும் என்று தான் இந்த நகைகளை போட்டுள்ளதாக கூறுகிறார்.

பணத்தை கொடுத்த தங்கமயில் பெற்றோர்: இந்த பேச்சை மாற்றும் வகையில் திருமணத்திற்கான செலவுகளில் தாங்கள் பாதியை ஏற்பதாக கூறியதை சுட்டிக்காட்டும் தங்க மயிலின் அம்மா பாக்கியம், தொடர்ந்து பணத்தை எடுத்து வந்து பாண்டியனிடம் கொடுக்கிறார். முதலில் பாண்டியன் மறுத்தாலும் பின்பு வாங்கிக் கொள்கிறார். திருமண செலவுகளில் பாதியை ஏற்பதாக கூறிய சூழலில் இன்னும் செலவுகள் எவ்வளவு என்று தெரியாது நிலையில் எப்படி தங்கமயிலின் குடும்பத்தினர் பணத்தை இப்போதே கொடுக்கிறார்கள் என்று குழலி கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து பேசும் குழலியின் மாமனார் அவர்கள் கூறியதை காட்டிலும் அதிகமாக 80 சவரன் நகைகள் போடுவதால் திருமண செலவுகள் குறித்து எல்லாம் பேச வேண்டியது இல்லை என்று கூறுகிறார்.

நகையை எடைபோட முடிவு: தொடர்ந்து நகைகளை வேண்டுமானால் எடை போட்டு பார்க்கலாம் என்று அவர் ஆலோசனை கூற, குழலியும் அதை அமோதிக்கிறார். ஆனால் பாண்டியன் மற்றும் கோமதி இதில் உடன்பாடு இல்லாமல் வேண்டாம் என்று கூறுகின்றனர். பாக்கியமும் தங்கள் மீது நம்பிக்கை இல்லாத வகையில் இவ்வாறு எடை போட்டு பார்ப்பது தங்களை அவமானப்படுத்துவதாக இருப்பதாக கூறுகிறார். நகைகளை எடை போட்டால் அது போலி நகைகள் என்பது தெரியவரும் என்று அவர் பயத்தில் இவ்வாறு பேசுகிறார். ஆயினும் நகைகளை எடை போடுவது திருமணங்களில் நடப்பது தான் என்று குழலியின் மாமனார் சமாதானம் கூறிவிட்டு திருமண மண்டபத்திலேயே எடை போடும் மெஷின் இருக்கும் என்றும் அதை எடுத்து வரும்படியும் ஊழியர்களிடம் கூறுகிறார்.

மயங்கி விழும் தங்கமயில்: இதைக் கேட்கும் தங்க மயிலுக்கு நடுக்கம் ஏற்படுகிறது. தொடர்ந்து அவர் தலையைப் பிடித்துக் கொண்டு மயக்கம் அடைகிறார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் அனைவரும் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனால் திருமணத்தில் எத்தகைய குழப்பங்கள் ஏற்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக ராஜி ஓடி ஓடி அனைத்து வேலைகளையும் செய்வதை பார்க்கும் கதிர் அவருக்கு ஜூஸ் கொடுப்பதாக காணப்பட்டது. இதனிடையே தங்களுக்கு ரிஷப்ஷன் நடக்காததால் மேடையில் சோபாவில் அமர்ந்து புகைப்படங்கள் எடுக்க மீனா ஆசைப்படுவதாகவும் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X