Pandian stores 2 serial: பாண்டியனை அடித்த குமரன்.. அப்பாவுக்காக மல்லுக்கு நின்ற கதிர்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக மாஸ் காட்டிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டிஆர்பியில் அதிக புள்ளிகள் பெற்று சேனலின் 3வது சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பாண்டியன் -கோமதி தம்பதியின் 3 மகன்கள், 2 மகள்கள், மருமகள்கள், கோமதியின் அண்ணன்கள், அவர்களது பகைமை உள்ளிட்டவற்றை இந்த தொடர் கதைக்களமாக கொண்டு எபிசோட்களை கொடுத்துவருகிறது.

பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் 28 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த நிலையில், கோமதியின் அண்ணன்கள் தொடர்ந்து பகையுடன் அடுத்தடுத்து சண்டை வலித்து வருகின்றனர். இதனிடையே சந்தர்ப்ப சூழல்நிலைகள் காரணமாக கோமதியின் மகன் கதிரை, முத்துவேலின் மகள் ராஜி திருமணம் செய்ய நேர்கிறது. இதனால் இவர்களின் பகை மேலும் அதிகரித்து தொடர்ந்து சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன.

Vijay TV s Pandian stores 2 serial today 19th April 2024 episode Fight between Pandian -Muthuvel family

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக துவக்கம் முதலே இருந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இதன் முதல் சீசனும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இரண்டாவது சீசனும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் அப்பா -மகன்கள் உறவையும் மையமாக வைத்து இந்த சீரியல் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. பாண்டியன் -கோமதி தம்பதி மற்றும் அவர்களது மகன்கள், மகள்கள், மருமகள்கள், கோமதியின் அண்ணன்கள், அவர்களது பகை என இந்த சீரியலின் அடுத்தடுத்த கதைக்களங்கள் காணப்படுகின்றன.

தந்தை -மகன் உறவு: தன்னுடைய குடும்பத்தை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார் பாண்டியன். அவரது அடுத்தடுத்த மகன்கள் செந்தில், கதிரின் திருமணங்கள் குடும்பத்தில் சரவணனின் திருமணத்தில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இருந்தபோதிலும் தன்னை மீறி திருமணம் செய்த செந்தில் மற்றும் கதிரிடம் அன்பு பாராட்டுகிறார் பாண்டியன். கதிர் தனக்கு திருட்டுப்பட்டம் வாங்கிக் கொடுத்ததால் அவரிடம் பேசாமல் இருக்கிறார். இருந்தபோதிலும் இருவரும் மற்றவர்களுக்கு பிரச்சினை என்றால் முன்னால் நிற்பதை பார்க்க முடிகிறது. இதனிடையே சரவணனுக்கு தங்கமயில் என்ற பெண்ணை நிச்சயம் செய்கின்றனர்.

மீனா வைராக்கியம்: சரவணன் -தங்கமயிலுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிகிறது. ஆனாலும் தங்கமயில் குடும்பத்தில் ஏதோ பிரச்சினை இருப்பதாக தொடர்ந்து மீனா சுட்டிக் காட்டுகிறார். அவரது சொல் அங்கு எடுபடாமல் போகிறது. அவசரப்படாமல் விசாரித்து திருமணத்தை நடத்தலாம் என்று மீனா தொடர்ந்து கூற, ஒருகட்டத்தில் அவர் ஓடிவந்து திருமணம் செய்ததால், நிச்சயிக்கப்படும் திருமணம் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரியவில்லை என்று அவரது மாமியார் கோமதி கூறுகிறார். இதற்கு செந்திலும் சிரித்து வைக்க, கடுப்பாகும் மீனா, இனிமேல் தங்கமயில் குடும்பம் குறித்த தன்னுடைய சந்தேகத்தை தான் எப்போதும் வெளிப்படுத்த மாட்டேன் என்று ஆத்திரத்துடன் செந்திலிடம் பேசுகிறார் மீனா.

குமரனிடம் சண்டைக்கு போகும் பாண்டியன்: இந்நிலையில் காலையில் வாசல் கூட்டுவதற்காக ராஜி வெளியில் வருகிறார். அப்போது வாசல் பெருக்க வரும் அவரது அம்மா வடிவு கால் தவறி கீழே விழுகிறார். இதையடுத்து பதறும் ராஜி, தன்னுடைய அப்பா உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், தன்னுடைய அம்மாவை வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். தொடர்ந்து அங்குவரும் முத்துவேல், சக்திவேல் மற்றும் குமரன் ஆகியோர் அவர் எப்படி வீட்டிற்குள் வரலாம் என்று சண்டையிடுகின்றனர். ராஜியை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளுகிறார் குமரன். அவர் கீழே விழப்போக, அங்குவரும் பாண்டியன் அவரை பிடிக்கிறார். தொடர்ந்து பெண் பிள்ளையை அடிக்கிறாயே என்று குமரனிடம் சண்டைக்கு போவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

பாண்டியனை அடித்த குமரன்: இதையடுத்து அவரிடமும் சண்டைக்கு போகும் குமரன், அவரை தெரியாமல் அடித்துவிடுகிறார். இதைப் பார்க்கும் கதிர், தன்னுடைய அப்பாவை அடித்த குமரனை அடிக்கப் பாய்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் சண்டை வலுக்கிறது. தொடர்ந்து இரு குடும்பத்தினரும் அந்த சண்டையை தடுத்து அவர்களை வீட்டிற்குள் அனுப்பி வைக்கின்றனர். திருமணத்தின்போது வீட்டைவிட்டு வெளியேறி தங்களது குடும்பத்தினருக்கு தீராத அவமானத்தை ஏற்படுத்திய கோமதி மற்றும் ராஜியை முத்துவேல் குடும்பத்தினர் மன்னிப்பதற்கு தயாராக இல்லை என்பதையே அடுத்தடுத்த எபிசோட்கள் காட்டுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X