Pandian stores 2: அடுத்தடுத்த போட்டோக்களை அனுப்பும் தங்கமயில்.. வாய்ஸ் மெசேஜில் பாண்டியன் நெகிழ்ச்சி!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்து சுவாரசியங்கள் நிறைந்த காட்சிகள் காணப்பட்டன. சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஹனிமூனுக்காக சென்னை சென்றுள்ள நிலையில் அங்கு அடுத்தடுத்த செட்களில் செல்ஃபிக்களாக எடுத்து தள்ளுகிறார் தங்கமயில்.
தான் உருவாக்கிய ஹனிமூன் போட்டோஸ் என்ற குரூப்பில் இந்த புகைப்படங்களை தங்கமயில் அடுத்தடுத்து அனுப்புகிறார். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இந்த புகைப்படங்களை பார்த்தும் எந்த விதமான ரியாக்ஷனும் தெரிவிக்கவில்லை என்று அவர் சரவணனிடம் குறைபட்டு கொள்கிறார். தொடர்ந்து வீட்டுக்கு கால் செய்து தன்னுடைய மாமனாரிடம் இந்த புகைப்படங்களை பார்க்குமாறு கூறுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் கலகலப்பாக அமைந்திருந்தது. சென்னைக்கு சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஹனிமூன் சென்ற நிலையில் அங்கு ஹோட்டல் அறையை முன்னதாக தங்கமயில் தவறாக புக் செய்திருந்தார். கூடுதலாக 21 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே ஹோட்டல் அறைக்குள் நுழைய முடியும் என்ற நிலை ஏற்பட சரவணன் இது குறித்து தன்னுடைய அப்பாவிடம் கேட்காமல் தம்பிகளிடம் கேட்கிறார். அவர்களும் பல்வேறு இடங்களில் இருந்தும் தன்னுடைய அப்பாவின் அக்கவுண்டில் இருந்தும் பணத்தை எடுத்து தெரியாமல் அனுப்புகின்றனர்.
பாடம் எடுக்கும் பாக்கியம்: இதனால் பிரச்சினை தீர்ந்து சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஹோட்டல் அறைக்கு சென்று சந்தோஷமாக காலத்தை கழிப்பதாக காணப்பட்டது. இந்த நிலையிலும் தங்கமயிலின் அம்மா பாக்கியம் தொடர்ந்து தன்னுடைய மகளுக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுத்து அப்படியெல்லாம் செய்தால்தான் இன்பமான வாழ்க்கையை வாழலாம் என்றும் பாண்டியன் குடும்பத்தில் தங்க மயிலின் கை ஓங்கி இருக்கும் என்றும் பலவாறாக பாடம் எடுக்கிறார். இதையெல்லாம் செய்தால்தான் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்று நினைக்கும் தங்கமயில் அவர் கூறியதுபடியே நடந்து கொள்கிறார்.
வழிக்கு வராத சரவணன்: ஹனிமூன் சென்ற இடத்திலும் கணவனிடம் சண்டையை போட வேண்டும் என்றும் அப்போதுதான் ஆண்கள் வழிக்கு வருவார்கள் என்றும் பாக்கியம் கூற அதை தங்கமயில் ட்ரை செய்கிறார். ஆனால் தன்னுடைய தம்பி செந்திலின் அறிவுரையை கேட்கும் சரவணன், தங்கமயிலை சமாதானப்படுத்த முயலாமல் தூங்கி விடுகிறார். இதனால் தங்கமயில் மிகுந்த ஏமாற்றத்துடன் மறுநாள் காலை தன்னுடைய அம்மாவிற்கு இது குறித்து கால் செய்து கேட்கிறார். சரவணன் உன் வழிக்கு வரவில்லை என்றால் நீ அவர் வழிக்கு சென்று தான் அவரை சிறிது சிறிதாக உன் வழிக்கு மாற்ற வேண்டும் என்று பாக்கியம் கூறுகிறார்.
பாண்டியன் நெகிழ்ச்சி: சரவணனிடம் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் பேசுமாறு தங்க மயிலுக்கு அவர் அறிவுறுத்துகிறார். இதனால் மிகுந்த குழப்பம் அடைகிறார் தங்கமயில். இதனிடையே அடுத்தடுத்து செல்ஃபிக்களாக எடுத்து அவற்றை ஹனிமூன் போட்டோஸ் என்று தான் உருவாக்கியுள்ள குரூப்பில் தொடர்ந்து அனுப்புகிறார் தங்கமயில். புகைப்படங்களை பார்க்கும் யாரும் ரிப்ளை செய்யவில்லை என்று குறைப்பட்டு கொள்கிறார். தொடர்ந்து வீட்டிற்கு கால் செய்து அனைவரிடமும் இதுகுறித்து பேசுகிறார். பாண்டியனிடமும் பேசுகிறார். இதையடுத்து புகைப்படங்களை பார்க்கும் அவர், மனதிற்கு நிறைவாக இருப்பதாக வாய்ஸ் மெசேஜ் கொடுக்கிறார்.
எதிர்பார்ப்பில் மீனா: முன்னதாக சரவணனிடம் பேசிவிட்டு அறைக்குள் வரும் செந்திலிடம் கண் முழித்து பார்க்கும் மீனா பேசுவதாக காணப்பட்டது. இந்த ஹோட்டல் அட்வான்ஸ் மேட்டர் தன்னுடைய மாமனாருக்கு தெரிய வந்தால் எது மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுமோ என்று மீனா கூறுகிறார். தொடர்ந்து இந்த விஷயம் தெரிய வந்தால் அவர் எப்படி ரியாக்ட் செய்வார் என்று தெரிந்து கொள்ள தான் ஆர்வமாக இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் தான் இந்த விஷயத்தை தன்னுடைய மாமனாரிடம் வெளிப்படுத்த மாட்டேன் என்றும் மீனா செந்திலுக்கு உறுதி அளிக்கிறார்.


Click it and Unblock the Notifications











