Pandian stores 2 serial: வீட்டுக்கு வாங்க.. தழுதழுத்த கோமதி.. இறங்கி வந்த பாண்டியன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியலில் ராஜி மற்றும் கதிர் திருமணம் நிறைவடைந்து வீட்டிற்கு வந்த நாள் முதல் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு அடுத்தடுத்த எபிசோடுகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. இந்த வகையில் தன்னுடைய மகன் கதிர், தன்னுடைய எதிரியாக நினைக்கும் முத்துவின் குடும்பத்து பெண்ணை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தது மற்றும் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற பணம் நகைகளை செலவழித்து விட்டதாக கூறியது ஆகியவை பாண்டியனுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்துள்ளது.
இந்நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியேறி மனம் வருந்தி கடையில் போய் தங்குகிறார். அவரை தேட சென்ற சரவணன் தன்னுடைய அப்பாவை சமாதானப்படுத்த முயல்கிறார். அவர்கள் இருவரும் அங்கு இருப்பதை கேள்விப்படும் கோமதி மனம் சமாதானம் அடைகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க இந்த தொடரின் எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தன்னுடைய இரண்டாவது மகன் செந்திலைப் போலவே தற்போது கதிரும் காதல் திருமணம் செய்து வந்ததாக நினைக்கும் பாண்டியன் அடுத்த கட்டமாக என்ன மாதிரியான முடிவெடுப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அடுத்தடுத்து ரசிகர்களை கவரும் வகையில் எபிசோட்களை கொடுத்து வருகிறது. முன்னதாக பாண்டியனின் இரண்டாவது மகன் செந்தில் மீனாவை வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து அழைத்து வருகிறார். அதனால் அவமானப் படும் பாண்டியன், ஆனாலும் மீனாவின் நல்ல குணத்தை கருத்தில் கொண்டு அவரை தன்னுடைய மருமகளாக ஏற்றுக் கொள்கிறார். இதனிடையே ராஜியின் வாழ்க்கைக்காகவும் தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்திற்காகவும் கதிருக்கும் ராஜிக்கும் திருமணம் செய்து வைக்கிறார் கோமதி. தன்னுடைய கணவனுக்கு தெரியாமல் அவர் இந்த திருமணத்தை நடத்தி முடிக்கிறார்.

கோமதிக்கு உதவிய பாக்கியா: கோமதிக்கு துணையாக சங்கமம் எபிசோடில் பாக்கியலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் உதவி செய்கின்றனர். இதையடுத்து தற்போது ராஜி மற்றும் கதிர் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் திட்டி அனுப்புகின்றனர் முத்துவேல் மற்றும் குடும்பத்தினர். ராஜி எடுத்துச் சென்ற பணம் மற்றும் நகையை செலவழித்து விட்டதாக கதிர் கூறுகிறார். ஆனால் அந்த பணத்தை ராஜியின் காதலன் கண்ணன் எடுத்துக் கொண்டு ஓடி விட்டார். இந்நிலையில் கதிர் செலவழித்ததாக கூறப்படும் அந்த பணம் மற்றும் நகையை திரும்பித் தருமாறு முத்துவேல் குடும்பத்தினர் ஆக்ரோஷத்துடன் கேட்கின்றனர்.
அவமானத்தில் பாண்டியன்: மேலும் இந்த பணத்தை எடுத்து வர சொல்லி பாண்டியன் கதிருக்கு ஆலோசனை கொடுத்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அவமானப்படும் பாண்டியன் மனம் வெறுத்துப் போய் வீட்டை விட்டு வெளியேறுகிறார். கடையில் சென்று தங்குகிறார். இதனால் வருத்தப்படும் கோமதி, காலையில் முதல் வேலையாக, தன்னுடைய கணவனை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரும் பொருட்டு கடைக்கு செல்கிறார். அங்கு தன்னுடைய கணவனிடம் வீட்டுக்கு வாங்க என்று அவர் தழுதழுப்புடன் கேட்கிறார். தன்னுடைய மகள் அரசியும் மிகவும் பயந்து போய் காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
வீட்டிற்கு திரும்பும் பாண்டியன்: தொடர்ந்து கடையில் வேலை செய்யும் பெரியவர் உள்ளிட்ட அனைவரும் வலியுறுத்த பாண்டியன் வீட்டிற்கு செல்வதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. கதிரின் திருமணம் அடுத்தடுத்து என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இனி அடுத்தடுத்து எபிசோடுகளில் பார்க்கலாம். இதனிடையே தன்னுடைய அண்ணன் மகள் ராஜி மற்றும் கதிர் இருவரும் எலியும் பூனையும் ஆக இருந்த நிலையில் அவர்களது இந்த திருமணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பழனி கூறுவதாகவும் அவருக்கு ராஜி விளக்கம் அளிப்பதாகவும் இன்றைய எபிசோடு காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











