Pandian stores 2 serial: சைக்கிளில் ஃபுட் டெலிவரி செய்யும் கதிர்.. கண்ணீரில் ராஜி!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் பரபரப்பான காட்சிகள் அமைந்துள்ளன. தன்னுடைய மகள் ராஜிக்கு தன்னுடைய நகைகளை வடிவு கொடுத்த நிலையில், அவருடைய கணவரிடம் இதுகுறித்து மாட்டும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் முழிக்கும் அவரை உடனிருக்கும் அப்பத்தா, மாரி ஆகியோர் காப்பதாகவும் காணப்படுகிறது.

இதேபோல தன்னுடைய நண்பனின் பைக்கில் ஃபுட் டெலிவரியை கதிர் செய்து வந்த நிலையில், நண்பன் பைக்கை திருப்பி கேட்க, அவரது வேலை கேள்விக்குறியாகிறது. இதனால் சித்தப்பா பழனிவேலின் சைக்கிளில் சென்று ஃபுட் டெலிவரியை அவர் செய்வதாகவும் காணப்படுகிறது. இதை பார்க்கும் ராஜி மிகுந்த வேதனை அடைகிறார்.

Television Pandian stores 2 serial Vijay TV 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை மிகச்சிறப்பாக என்டர்டெயின் செய்யும்வகையில் அமைந்துள்ளது. இந்த சீரியலில் கோமதியின் அண்ணன் மகன் குமரனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதையொட்டி பெண் வீட்டாரை சென்று பார்க்க அனைவரும் தயாராகின்றனர். மாரி, அப்பத்தா என அனைவரும் நகைகளை போட்டிருக்கும் நிலையில், ராஜிக்கு தன்னுடைய நகைகளை வடிவு கொடுத்ததால் அவர் சாதாரணமாக காணப்படுகிறார். இதையொட்டி முத்துவேல் கேள்வி கேட்கிறார்.

சிக்கலில் வடிவு: இதனால் அதிர்ச்சியடைந்தாலும் வடிவு லாக்கரில் நகைகளை வைத்து விட்டதாக சமாளிக்கிறார். ஆனாலும் தனியாக எப்படி சென்று வைத்தாய் என்பது போல தொடர்ந்து அடுத்தடுத்த கேள்விகளை முத்துவேல், சக்திவேல் உள்ளிட்டவர்கள் கேட்கின்றனர். ஒருவழியாக அப்பத்தா, மாரி உதவியுடன் நிலைமையை சமாளிக்கிறார் வடிவு. தொடர்ந்து மாரியின் நகைகளை போட்டுக் கொண்டு அவர் தயாராவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. இதனிடையே, தன்னுடைய கணவனுக்கும் சாப்பாடு எடுத்துச் செல்லாமல் அறையிலேயே உடம்பு சரியில்லை என்று கூறிவிட்டு அழுதபடி இருக்கிறார் தங்கமயில்.

சைக்கிளில் ஃபுட் டெலிவரி: அவரது உடல்நிலை குறித்து மீனா, ராஜி விசாரிக்கின்றனர். ஆனாலும் அவர்கள் தன்னை கலாய்ப்பதாகவே தங்கமயில் கருதுகிறார். இதனிடையே, நண்பனின் பைக்கை வைத்து ஃபுட் டெலிவரி செய்துவந்த கதிருக்கு இதில் சிக்கல் ஏற்படுகிறது. பைக் சொந்த உபயோகத்திற்கு வேண்டும் என்று நண்பன் கேட்க, இதனால் ஃபுட் டெலிவரி செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் தன்னுடைய சித்தப்பா பழனிவேலின் சைக்கிளில் சென்று அவர் டெலிவரி செய்கிறார். அவர் இரவு வீடு வந்தபோது, இதைப் பார்த்து ராஜி, மீனா, செந்தில் உள்ளிட்டவர்கள் மனம் வருந்துவதாக காணப்பட்டது.

Television Pandian stores 2 serial Vijay TV 2

கண்ணீரில் தங்கமயில்: இந்நிலையில் மாலையில் வீட்டிற்கு வரும் சரவணன், தங்கமயில் தொடர்ந்து படுக்கையிலேயே தூங்கிக் கொண்டிருப்பதை பார்க்கிறார். அவரது உடல்நிலை குறித்து விசாரிக்கிறார். ஆனால் தங்கமயில் எதுவும் கூறாமல் தொடர்ந்து தூங்குவதாக பாசாங்கு செய்கிறார். அவரின் மன ஓட்டத்தை அறியாமல் சரவணன், அவர் உடல்நலக்குறைவால் தூங்குவதாக நினைத்துக் கொண்டு, தொடர்ந்து தூங்குமாறு கூறுகிறார். இதனால் தங்கமயிலின் கடுப்பு மேலும் அதிகமாகிறது. சரவணன் மேம்போக்காக பேசிவிட்டு செல்வதாக நினைக்கும் தங்கமயிலின் ஏமாற்றம் மேலும் அதிகமாகி அவர் கண்ணீர் விடுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X