Pandian stores 2 serial: பளார்.. சந்நியாசியான சரவணனுக்கு பாண்டியன் கொடுத்த அடி.. அலறியடித்து ஓட்டம்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம்பெற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிக டிஆர்பியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இதில் பாண்டியன் மற்றும் கோமதி தம்பதியின் மூன்று மகன்கள் மற்றும் மகள்கள் மற்றும் கோமதியின் அண்ணன்கள் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களாக காணப்படுகின்றனர். செந்தில் மற்றும் கதிரின் திருமணங்களால் கேள்விக்குறியான சரவணனின் திருமணத்தை 50 நாட்களுக்குள் முடிப்பேன் என்றும் அதுவரை காலில் செருப்பு போட மாட்டேன் என்றும் பாண்டியன் சபதம் இடுகிறார்.
இதனால் காலில் முள் குத்தியும் அடுத்தடுத்து ஊராரின் கிண்டலுக்கும் உள்ளாகிறார் பாண்டியன். இதனிடையே சந்நியாசியாக மாறி சரவணன் வீட்டிற்குள் வருகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் கோமதி மயங்கி விழுவதாக காணப்பட்டது. இதனிடையே சரவணன் கன்னத்தில் பளார் விடும் பாண்டியன், சரியாக வரன் அமையாததற்காக சந்நியாசியாகி விடுவாயா என்று ஆத்திரப்படுகிறார். இந்த சின்ன விஷயத்திற்கு இந்த அளவிற்கு பெரிய முடிவு எடுப்பாயா என்றும் கோபத்துடன் பேசுகிறார். தொடர்ந்து சரவணனின் பிறந்தநாள் கொண்டாட்டம் கேக் வெட்டப்பட்டு சிறப்பாக நடக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய தினமும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியலில் நேற்றைய தினம் சந்நியாசியாக மாறி வீட்டிற்கு வந்த சரவணனை பார்த்து கோமதி அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் பாண்டியன் மட்டும் சரவணனை கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார், ஆனாலும் சாமியாராக மாறிய சரவணன், தொடர்ந்து மீனா, அரசி, ராஜி ஆகியோருக்கு ஆசிர்வாதம் அளித்து பாண்டியனை மேலும் கடுப்பேற்றினார்.
சரவணன் கன்னத்தில் பளார் விட்ட பாண்டியன்: என்ன இப்படி ஆகிவிட்டது என்று கோமதி தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்த நிலையில் செந்தில், கதிர் மற்றும் பழனிச்சாமி என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்ததையும் நேற்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. இந்நிலையில் சரவணனின் கன்னத்தில் பளார் என்று அறை விடுகிறார் பாண்டியன். இரண்டு பெண்களைப் பார்த்துவிட்டு திருமணம் முடியவில்லை என்றதும் இப்படி ஒரு முடிவை எடுப்பாயா என்று அவர் சரவணனிடம் கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறார். இந்நிலையில் அவரை தான் வாங்கிக் கொடுத்த பிறந்தநாள் உடையுடன் வருமாறும் ஆத்திரத்துடன் கூற, அங்கிருந்து எடுத்தேன் பார் ஓட்டம் என்று சரவணன் உள்ளே சென்று பிறந்தநாளுக்கு எடுத்துக் கொடுத்த உடையை அணிந்து வருகிறார்.
சரவணன் பிறந்தநாள் கொண்டாட்டம்: தொடர்ந்து அனைவர் முன்னிலையிலும் கேக் வெட்டுகிறார். இந்நிலையில் சாமியார் உடை தைக்க அவருக்கு பணம் எப்படி வந்தது என்று தன்னுடைய அடுத்த பஞ்சாயத்தை துவக்குகிறார் பாண்டியன். அவர் தான் ஓ.டி செய்து சம்பாதித்த பணத்தில் சாமியார் உடையை வாங்கியதாகவும் 800 ரூபாய் செலவழித்ததாகவும் கூற இதனால் கடுப்பாகும் பாண்டியன் தேவை இல்லாமல் செலவு செய்ததாக சரவணனை கண்டிக்கிறார். இதையடுத்து கோமதி தன்னுடைய மகன் மறு பிறப்பு எடுத்து வந்ததாகவும் அவனை திட்ட வேண்டாம் என்றும பாண்டியனிடம் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
குமரனை அறைவிட்ட மாரி: இந்நிலையில் பாண்டியன் வீட்டில் முன்னதாக அலறல் சத்தம் கேட்டதையடுத்து ராஜியின் அம்மா, சித்தி உள்ளிட்டவர்கள் பழனியை கால் செய்து அழைத்து விசாரிக்கின்றனர். அவர் நடந்ததை கூறி, ராஜிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் விளக்குகிறார். இதனிடையே சரவணனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று அப்பத்தா வேண்டி கொள்கிறார். இந்நிலையில் பழனியிடம் அவர்கள் அனைவரும் ராஜி குறித்தும் பாண்டியன் குடும்பத்தினர் குறித்தும் விசாரிப்பதை பார்க்கும் குமரன், தன்னுடைய பெரியம்மாவிடம் கடிந்து கொள்கிறார். இதையடுத்து அவரது கன்னமும் பழுக்கிறது.
வருத்தத்தில் அப்பத்தா: பெரியம்மா என்று மரியாதை இல்லாமல் குமரன் எப்படி அப்படி பேசுலாம் என்று மாரி, கோபத்துடன் குமரனை அறைந்ததை இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. இதையடுத்து தன்னுடைய கணவனைதான் தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் மகனை கட்டுப்படுத்த முடியும் என்றும் தன்னுடைய மாமியாரிடம் மாரி கூறுகிறார். இதையடுத்து தன்னுடைய அம்மா முத்துவேல் மற்றும் சக்திவேலை அடக்க தவறிவிட்டதை பழனிவேல் சுட்டிக்காட்டுகிறார். அவரும் தான் இதை சிறுவயதிலேயே செய்ய தவறிவிட்டதாக கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications