Pandian stores 2 serial: சக்திவேல் குறித்து தெரியவந்த உண்மை.. அதிர்ச்சியில் செந்தில் -மீனா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் இன்றைய தினம் பரபரப்பான காட்சிகளுடன் காணப்பட்டது. இந்த சீரியலில் சரவணனின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக கதிர் மற்றும் ராஜியின் திருமண வாழ்க்கை குறித்த காட்சிகள் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. கல்லூரிக்கு செல்வதற்கு காசு இல்லாமல் தன்னுடைய மனைவி ராஜி, தன்னுடைய அப்பா பாண்டியனிடம் அசிங்கப்பட்டதை பார்க்கும் கதிர், கல்லூரியில் படித்துக் கொண்டே பார்ட் டைம் வேலையில் இணைவதற்காக ஒரு நிறுவனத்திற்கு செல்கிறார்.
அங்கு உணவு சப்ளை செய்யும் வேலை அவருக்கு கிடைக்கிறது. இதனிடையே அந்த நிறுவனத்தின் உரிமையாளரை காரில் திருச்சிக்கு அழைத்துச் சென்று திரும்பும் சந்தர்ப்பம் கிடைக்க இரவு முழுவதும் பணத்திற்காக கார் ஓட்டிக் கொண்டு செல்கிறார் கதிர். இது தெரியாமல் கோமதி காலையில் கல்லூரிக்கு சென்ற தன்னுடைய மகன் கதிர், இன்னும் வீட்டிற்கு திரும்பவில்லையே என்று வருத்தத்துடன் வாசலையே பார்த்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து கதிர், திருச்சிக்கு சென்றுள்ளதாக செந்தில் கூறுகிறார். இதனால் வீட்டில் யாருக்கும் சொல்லாமல் சென்றதற்காக பாண்டியன் திட்டித்தீர்ப்பதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது, இந்த சீரியலில் தன்னுடைய அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க தன்னுடைய மாமன் மகள் ராஜியை திடீர் திருமணம் செய்து கொள்கிறார் கதிர். அவர் கல்லூரி படிப்பை கூட முடிக்காத நிலையில் இந்த திருமணம் அவரது வாழ்க்கை திசையை மாற்றுகிறது. தானே பணத்திற்காக தன்னுடைய அப்பாவின் கையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தன்னுடைய மனைவியாக வந்துள்ள ராஜியும் அதே நிலைமையில் இருப்பதையும் தன்னுடைய அப்பாவிடம் திட்டு வாங்கியதையும் பார்த்து மனம் கலங்குகிறார் கதிர்.
பார்ட் டைம் வேலையில் சேரும் கதிர்: தன்னுடைய மாமனார் பாண்டியன், கதிரையும் த்ன்னையும் திட்டியதை பார்க்கும் ராஜி அழுகையுடன் அவரிடமிருந்து பணத்தை பெறாமல் கல்லூரிக்கு நடந்தே செல்கிறார். இதை பார்க்கும் கதிர், தன்னுடைய மனைவிக்காக தான் சம்பாதிக்கும் நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார். இதனால் கல்லூரியில் படித்துக் கொண்டே பார்ட் டைம் வேலையாக உணவு டெலிவரி செய்யும் பணியில் சேர்கிறார். இதனிடையே அந்த உரிமையாளருக்கு அவசரமாக திருச்சிக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவரை திருச்சிக்கு காரில் அழைத்து செல்லும் வேலையையும் கதிர் செய்கிறார்.
திருச்சிக்கு செல்லும் கதிர்: இது குறித்து தெரியாமல் அவரது அம்மா கோமதி கவலைப்படுகிறார். காலையில் கல்லூரிக்கு சென்ற தன்னுடைய மகன் கதிர் இதுவரை வீடு திரும்பவில்லை என்று நினைத்து அவர் கவலை கொள்ள, கதிர் தனக்கு கால் செய்ததாகவும் திருச்சிக்கு நண்பனின் திருமணத்திற்காக சென்றுள்ளதாகவும் செந்தில் சமாளிக்கிறார். இதைக் கேட்கும் பாண்டியன், இது என்ன புது பழக்கம் வீட்டில் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் திடீரென திருச்சிக்கு போவது சரியாக இல்லை என்றும் தற்குறியாக கதிர் செயல்படுவதாகவும் திட்டி தீர்க்கிறார். அவருக்கு பதில் சொல்ல முடியாமல் செந்தில் திணறுகிறார்.
கதிர் குறித்து வேதனைப்படும் சரவணன்: கதிர் குறித்து சரவணன் தொடர்ந்து கேள்வி எழுப்ப, கதிர் திருச்சிக்கு சென்ற உண்மை காரணத்தை செந்தில் கூறுகிறார். தன்னுடைய பணத் தேவைகளுக்காக கதிர் திருச்சிக்கு கார் ஓட்டிக்கொண்டு சென்றுள்ளதாகவும் மறுநாள் காலை வீடு திரும்ப உள்ளதாகவும் செந்தில் உண்மையை வெளிப்படுத்துகிறார். இதனால் சரவணன் வருத்தம் கொள்கிறார். தன்னுடைய தம்பிக்கு தேவையான நேரத்தில் தன்னால் உதவ முடியவில்லை என்பதை நினைத்து அவர் வருந்துவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. முன்னதாக சரவணனின் திருமணம் நின்றதற்கான காரணம் தற்போது ராஜிக்கு தெரியவருகிறது.
ராஜிக்கு தெரியவந்த உண்மை: ராஜியுடன் பணிபுரியும் பெண்மணியின் மகளை முன்னதாக சரவணனுக்கு பெண் பார்க்க போன நிலையில் அந்த திருமணம் நிற்கிறது. இதனிடையே தற்போது ராஜியை வழியில் சந்திக்கும் அந்த பெண்மணி, திருமணம் நின்றதற்கான உண்மை காரணத்தை கூறுகிறார். கோமதியின் இளைய அண்ணன் சக்திவேல்தான் தன்னுடைய கணவருக்கு கால் செய்து சரவணன் குறித்து மோசமாக கூறியதாகவும் அதனால்தான் தன்னுடைய கணவர் திருமணத்தை நிறுத்தியதாகவும் அவர் உண்மையை வெளிப்படுத்துகிறார். இதனால் அதிர்ச்சியடையும் ராஜி, தன்னை பிக்கப் செய்யவரும் தன்னுடைய கணவனிடம் இதுகுறித்த உண்மையை இன்றைய எபிசோடில் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











