Pandian stores 2 serial: ஹனிமூனுக்கு செல்லாத செந்தில் & கதிர்.. கோபத்தில் பாண்டியன் & கோமதி!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் சென்னைக்கு ஹனிமூன் ட்ரிப்பிற்கு தன்னுடைய மூன்று மகன்களையும் அனுப்பி வைக்க பாண்டியன் திட்டமிட்டு இருந்தநிலையில், செந்தில் மற்றும் கதிர் சென்னைக்கு செல்லவில்லை என்று கூறுகின்றனர். இதனால் பாண்டியன் மட்டுமில்லாமல் கோமதியும் கோபப்படுகிறார்.

இதையடுத்து கோமதியை தாஜா செய்யும் வகையில் மீனா மற்றும் ராஜி இருவரும் பேசி சமாதானப்படுத்துகின்றனர். தொடர்ந்து குடும்ப உறவுகளின் சிக்கல்களையும் சந்தோஷங்களையும் மையப்படுத்தி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அடுத்தடுத்த காட்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.

Television Pandian stores 2 serial Vijay TV 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை சிறப்பாக கவரும் வகையில் அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் தாங்கள் சரவணன் மற்றும் தங்கமயிலுடன் சென்னைக்கு ஹனிமூன் போகவில்லை என்று கதிர் - ராஜி மற்றும் செந்தில் - மீனா இருவரும் பாண்டியனிடம் கூறுகின்றனர். தனக்கு அலுவலகத்தில் லீவ் கிடைக்கவில்லை என்று மீனாவும் தான் கோச்சிங் கிளாஸ் செல்வதால் அதற்குள்ளாக லீவ் எடுக்க முடியாது என்று ராஜியும் கூறுகின்றனர். இதனால் பாண்டியன் மிகவும் கோபத்திற்கு உள்ளாகிறார். கோமதியிடம் அவர் ஆதங்கப்படுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாண்டியன் ஆதங்கம்: இவர்களுக்காக தான் பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயத்தையும் செய்யும் நிலையில் அதை புரிந்து கொள்ளாமல் இப்படி நடந்து கொண்டால் எப்படி என்று பாண்டியன் கோமதியிடம் கேட்பதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது. இதனிடையே மீனா மற்றும் ராஜியின் இந்த முடிவால் கோமதி கோபப்படுப்படுவதாக காணப்படுகிறது. இதையடுத்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியின் மீனா மற்றும் ராஜி இருவரும் ஈடுபடுகின்றனர். கொடைக்கானலுக்கு கோமதி உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து தாங்கள் சென்ற நிலையில் தற்போது தன்னுடைய அத்தையை விட்டுவிட்டு தனியாக போவதற்கு தனக்கு விருப்பமில்லை என்று கூறி மீனா ஐஸ் வைக்கிறார்,

மாமியாரிடம் சமாதானம்: இதில் உருகும் கோமதி ராஜிடம் என்ன காரணம் என்று கேட்கிறார். அவரும் தன்னுடைய மாமியாரை இம்ப்ரஸ் செய்யும் வகையில் பதில் அளிக்கிறார்,. தன்னுடைய மாமியாருடன் தானும் மீனாவும் இணைந்து அதிகமாக பேசி சிரித்து கொண்டிருந்த நிலையில் தற்போது தங்கமயில் வந்தவுடன் அதை மிஸ் செய்வதாகவும் தற்போது தங்கமயில் சென்னைக்கு செல்வதால் மீண்டும் அந்த தருணத்தை தான் என்ஜாய் செய்ய விரும்புவதாகவும் ராஜி கூற இதை அப்படியே நம்பும் கோமதி, தனக்காகவா அவர்கள் இருவரும் ஹனிமூன் போகவில்லை என்று அப்பாவித்தனமாக கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

சரவணன் கோபம்: இதையடுத்து தனக்கு கிடைத்தது போல மாமியார் வேறு யாருக்கும் கிடைக்க மாட்டார்கள் என்று ராஜியும் மீனாவும் உச்சி குளிர்வதாகவும் இந்த எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே, செந்தில் மற்றும் கதிரின் இந்த முடிவால் சரவணன் மிகவும் ஏமாற்றத்திற்கும் கோபத்திற்கும் உள்ளாகிறார் தன்னுடைய தம்பிகளுடன் இணைந்து தான் எங்கேயும் செல்லாத நிலையில் இந்த ஹனிமுன் டிரிப்பை தான் பயன்படுத்திக் கொள்ள விரும்பியதாக அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்த, ஹனிமூனில் ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் தனியாக செல்லவும் கதிர் மற்றும் செந்தில் இருவரும் அறிவுறுத்தி அவர்களை சமாதானப்படுத்துகிறார்கள்.

ராஜிக்கு ஷாக் கொடுத்த பழனிவேல்: இதனிடையே, ராஜி கோச்சிங் கிளாஸ் செல்வதாக சொல்லிவிட்டு ஹோம் டியூஷனுக்கு கிளம்புகிறார். அப்போது அங்கு வரும் பழனிவேல், அவர் எந்த இடத்தில் கோச்சிங் கிளாஸ் செல்கிறார் என்று கேள்வி கேட்டுவிட்டு, தான் கடைக்கு தான் செல்கிறேன் என்றும் போகும் வழியில் தான் டிராப் செய்கிறேன் என்றும் கூறுவதாக எபிசோடின் காட்சிகள் காணப்பட்டன. இதனால் ராஜி மட்டுமில்லாமல் மீனாவும் அதிர்ச்சிக்குள்ளாவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X