Pandian stores 2 serial: செந்தில் -கதிரை வம்பிழுத்த குமரன்.. மீனா -ராஜியை பார்த்தவுடன் எஸ்கேப்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் வழக்கம் போல பாண்டியன் கதிரை திட்டுவதாக அமைந்திருந்தது. இரவில் தன்னுடைய புட் டெலிவரி வேலையை முடித்துக் கொண்டு 11 மணிக்கு மேல் வீட்டிற்கு கதிர் வர, இது என்ன சத்திரமா என்று பாண்டியன் கோபத்துடன் கேள்வி எழுப்புகிறார்.
இனி வீட்டிற்கு 10 மணிக்குள் வர வேண்டும் என்றும் பாண்டியன் கோபத்துடன் கூறுகிறார். ஆனால் அதெல்லாம் சாத்தியம் இல்லை என்று கதிர் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தனக்கும் ராஜிக்கும் சேர்த்து வீட்டில் சாப்பாட்டிற்காக பணம் கொடுப்பதாக கதிர் உறுதியளித்த நிலையில் அதற்காக கல்லூரி முடிந்ததும் ஃபுட் டெலிவரி வேலையை அவர் செய்து வருகிறார். இதனால் தினந்தோறும் இரவு வீட்டிற்கு மிகவும் லேட்டாக வருவதாக காணப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் வழக்கம் போல தன்னுடைய மகன் கதிரை பாண்டியன் திட்டி தீர்ப்பதாக காணப்பட்டது. நள்ளிரவில் தன்னுடைய ஃபுட் டெலிவரி வேலையை பார்த்துவிட்டு 11 மணிக்கு மேல் வீட்டிற்கு வருகிறார் கதிர். இதனால் ராஜி தூங்காமல் கதிருக்காக காத்திருக்கிறார். மேலும் வழக்கத்திற்கு மாறாக வெகுநேரமாகிவிட்டதால் தூங்கிக் கொண்டிருக்கும் பழனிச்சாமியை எழுப்பி தன்னுடைய கவலையை சொல்கிறார். இதையடுத்து சிறிது நேரத்திலேயே கதிர் வீட்டிற்கு வருகிறார்.
கதிரை திட்டிய பாண்டியன்: அப்போது தன்னுடைய அறையில் இருந்து வெளியில் வரும் பாண்டியன், இவ்வளவு நேரம் கழித்து வீட்டுக்கு வந்தால் இது என்ன சத்திரமா என்று கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து இனிமேல் 10 மணிக்குள் வீட்டிற்கு வர வேண்டும் என்றும் கட்டளை இடுகிறார். ஆனால் அப்படி எல்லாம் வர முடியாது என்று கதிர் பதிலுக்கு பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே தனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கதிர் கூற, மாமா என்ன புதிதாகவா பேசுகிறார் என்று அவனை சமாதானப்படுத்தி ராஜி சாப்பாடு பரிமாறுகிறார். முன்னதாக அவர் ஆம்லெட் போட சமையலறைக்குள் போக, பின்னாடியே தட்டை எடுத்துக் கொண்டு செல்லும் கதிர் தனக்காக தூங்காமல் காத்திருக்க வேண்டாம் என்று கூறுகிறார்.
வம்பிழுத்த குமரன்: மேலும் இதுபோல நள்ளிரவு நேரத்தில் ஆம்லெட் போட்டுக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் தனக்கு இதெல்லாம் ஒரு மாதிரியாக இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் தனக்காகவும் சேர்த்து தான் கதிர் உழைப்பதாக கூறும் ராஜி, சிறிது நேரம் தூங்காமல் இருந்தால் ஒன்றும் ஆகிவிடாது என்று சமாதானப்படுத்துகிறார். இதனிடையே, மறுநாள் காலையில் வீட்டு வாசலில் இருந்தபடி உடற்பயிற்சிகளை செந்தில் மற்றும் கதிர் செய்கின்றனர், அப்போது எதிர்த்த வீட்டில் இருக்கும் குமரன் அவர்களை வம்பிழுக்கிறார். பல்லி போல இருப்பவர்கள் எல்லாம் பிட்னஸ் பயிற்சி செய்வதாக தொலைபேசியில் நண்பரிடம் பேசுவதாக இவர்களை கலாய்க்கிறார்.
ராஜி -மீனாவை பார்த்து குமரன் எஸ்கேப்: இதையடுத்து குமரனை அடிப்பதற்காக செந்தில் மற்றும் கதிர் இருவரும் கோபத்துடன் கிளம்புகின்றார். அப்போது கோயிலுக்கு சென்று விட்டு வரும் ராஜி மற்றும் மீனாவை பார்த்துவிட்டு குமரன் அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். இதை பார்த்துவிட்டு செந்தில் மற்றும் கதிர் இருவரும் சந்தேகத்துடன் பேசி கொள்கிறார்கள். முன்னதாக சரவணன் திருமணத்தில் தங்க மயிலை கடத்துவதற்காக வந்து ராஜி மற்றும் மீனாவை குமரன் கடத்திய நிலையில், இன்னும் அது குறித்து யாரிடமும் அவர்கள் சொல்லாமல் இருக்கின்றனர். ராஜி மற்றும் மீனா இருவரும் அதை அனைவரிடமும் கூறி விடுவார்களோ என்ற அச்சம் தொடர்ந்து குமரனுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











