Pandian stores 2 serial: ஆர்வக்கோளாறால் மொக்கை வாங்கிய தங்கமயில்.. இப்படி ஆயிடுச்சே!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் தன்னுடைய அம்மாவின் அட்வைசால் தன்னுடைய மாமனார், மாமியார் மற்றும் கணவரை இம்ப்ரஸ் செய்வதற்காக காலை 4 மணிக்கே எழுந்து அனைத்து வேலைகளையும் முடிக்கிறார் தங்கமயில்.

தொடர்ந்து ஆர்வக்கோளாறால் அவர் அடுத்தடுத்து விஷயங்களை செய்ய அதனால் ஏற்படும் விளைவுகளையொட்டி இன்றைய எபிசோடு காணப்பட்டது. இந்த வேலைகள் பாண்டியன் மற்றும் கோமதியை வெகுவாக கவர்கிறது. மீனா மற்றும் ராஜியிடம் தனக்கு ஒரு நாளாவது டீ போட்டுக் கொடுத்திருக்கிறீர்களா என்று கோமதி கேட்கும் அளவிற்கு தங்கமயில் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. இதனால் மீனா மற்றும் ராஜி இருவரும் கடுப்பாகின்றனர்.

Television Pandian stores 2 serial Vijay TV

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருந்தது. சரவணன் மற்றும் தங்க மயிலின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தன்னுடைய அம்மாவின் அட்வைஸை ஏற்று முதல் நாளிலேயே தன்னுடைய அதிரடியை துவங்கியுள்ளார் தங்கமயில். அதிகாலை 4 மணியளவில் இருந்து வாசல் பெருக்கி கோலம் போட்டு, அனைவருக்கும் டீ, காபி போட்டு வைத்து, மார்னிங் டிபனையும் செய்து வைத்து, துணி துவைத்து என ஒவ்வொரு வேலையாக செய்து தன்னுடைய மாமியாரை அசத்துகிறார் தங்கமயில்.

பாண்டியன் பாராட்டு: ஆனால் மீனா மற்றும் ராஜி இருவருக்கும் தங்கமயிலின் நடவடிக்கைகள் கடுப்பை ஏற்படுத்துகின்றன. எதையுமே ஓவராக செய்வதாக மீனா தொடர்ந்து கமெண்ட் செய்கிறார். வாக்கிங் போகும் பாண்டியனுக்கு டீ எடுத்து வந்து கொடுக்கிறார் தங்கமயில். அவரும் அதை குடித்துவிட்டு இதுவரை இதுபோன்ற டீயை தான் குடித்ததில்லை என்று பாராட்டுகிறார். தொடர்ந்து அனைவருக்கும் டீ, காபி என்று கொடுக்கும் தங்கமயில் செந்தில், கதிர் மற்றும் அரசி மூவரும் ஏன் இவ்வளவு நேரம் தூங்குகிறார்கள். காலையிலேயே எழுந்து வந்தால் தானே கலகலப்பாக இருக்கும் என்று தன்னுடைய மாமியாரிடமும் மீனா மற்றும் ராஜியிடமும் கேட்கிறார்.

மொக்கை வாங்கிய தங்கமயில்: அவர்கள் இன்னும் சிறிது நேரம் தூங்கட்டும் என்று கோமதி கூறினாலும் கேட்காமல் செந்தில் அறைக்கு சென்று காபி கொடுக்க முயல்கிறார். மீனா இதை தடுக்கிறார். அவர் எப்படி இருப்பாரோ என்று தெரியாமல் நீங்கள் எப்படி உள்ளே போவீர்கள் என்று கேட்கிறார். இதையெல்லாம் மீறி உள்ளே போகிறார் தங்கமயில். அங்கு உள்ளாடையுடன் படுத்துக் கொண்டிருக்கும் செந்தில் தங்கமயிலை பார்த்துவிட்டு அலறி அடித்து ஒளிந்து கொள்கிறார். அதை பார்த்து தங்கமயிலும் அலறியடிக்க அனைவரும் ஓடிவர என இன்றைய எபிசோட் கலகலப்பாக காணப்பட்டது. இதையடுத்து செந்தில், அம்மா -மீனா என்று அடுத்தடுத்து கத்திக் கொண்டே இருக்க வெளியில் வரும் தங்கமயில் தான் தெரியாமல் செய்து விட்டதாக அனைவரிடமும் கூறுகிறார்.

கதிரிடம் உண்மையை கூறிய ராஜி: தொடர்ந்து மீனா நான் சொல்ல சொல்ல கேட்காமல் நீங்கள் ஏன் உள்ளே சென்றீர்கள் என்று கத்துகிறார். இதையடுத்து செந்தில் மீனாவை கூப்பிட்டு ஏன் இப்படி என்று கேட்க, நான் சொல்ல சொல்ல கேட்காமல் அவர் உள்ளே வந்ததாகவும் இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் மீனா உறுதியளிக்கிறார். இதனிடையே அங்கு என்ன நடந்தது என்று தொடர்ந்து கதிர் ராஜியிடம் கேட்கிறார். நடந்த விஷயத்தை நினைத்து சிரித்துக் கொண்டே இருந்த ராஜி, உண்மையை கூற அடுத்ததாக செந்தில் அறையிலிருந்து கதிர் அறைக்கு தங்கமயில் வர திட்டமிட்டு இருந்ததையும் கூறுகிறார்.

சரவணன் ஆச்சரியம்: நல்லவேளை தங்கமயில் வரவில்லை என்று கதிர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்கிறார். இந்நிலையில் சரவணனிடம் சென்று செந்தில் தன்னை தவறாக நினைத்து இருப்பாரா என்று தங்கமயில் கேட்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இந்த வீட்டில் யாருமே யாரையும் தவறாக நினைக்க மாட்டார்கள் என்று சரவணன் தங்க மயிலை சமாதானப்படுத்துகிறார். தொடர்ந்து தான் அடுத்த வேலையை செய்ய போவதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் தங்கமயில். நீயா சமையல் செய்யப் போகிறாய் என்று சரவணன் ஆச்சரியமாக கேட்பதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X