Pandian stores 2: இந்தப் புடவையில இம்புட்டு அழகா இருக்கியே.. பாண்டியன் பாராட்டு.. வெட்கப்பட்ட கோமதி!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் வழக்கம்போல வெள்ளந்தி மனிதர்களின் நடைமுறைகளை மையமாக வைத்து இன்றைய எபிசோடையும் ஒளிபரப்பியது. தங்கமயில் தன்னுடைய ஹனிமூன் புகைப்படங்களை குரூப் ஒன்றை துவங்கி அதில் தொடர்ந்து அனுப்பி வைக்கிறார்.

இந்த புகைப்படங்களுக்கு யாரும் லைக் செய்யவில்லை என தங்கமயில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்த அதுகுறித்து கோமதியிடம் கேட்கிறார் பாண்டியன். இதையடுத்து பொங்கிவிடுகிறார் அவர். தான் அவ்வப்போது ஊர்களுக்கு தனியாக செல்லும்போது அனுப்பும் புகைப்படங்களுக்கு பாண்டியன் இதுவரை எந்த கமெண்ட்டும் செய்ததில்லை என்றும் தன்னை இந்த வீட்டில் மிதியடியாகவே அனைவரும் பயன்படுத்துவதாகவும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

Television Pandian stores 2 serial Vijay TV 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய்டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்து வருகின்றன. குன்றக்குடியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மளிகைக்கடையை நடத்திவரும் பாண்டியன், அதன்மூலம் தன்னுடைய வாழ்க்கைப்பாதையை மாற்றிக் கொண்டுள்ள வெற்றிக்கதையை மையமாக கொண்டு இந்த சீரியல் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. கோமதியை காதல் திருமணம் செய்து, அதன்மூலம் அவரது அண்ணன்களின் வெறுப்பை சம்பாதிக்கும் பாண்டியன், கடினமான உழைப்பின்மூலமே இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளார்.

பாண்டியன் வெற்றிப்பயணம்: இந்த வெற்றிக்கான பயணத்தில் கறார்த்தனம், கண்டிப்பு உள்ளிட்ட அனைத்தையும் அவர் மேற்கொண்டு வருகிறார். சமயத்தில் தன்னுடைய மகன்களிடம் அவர் காண்பிக்கும் அதீத கண்டிப்பு, ரசிகர்களை வெறுப்புக்குள்ளாக்குவதே இந்த கேரக்டரின் வெற்றி. ஆயினும் தன்னுடைய தந்தையை எந்த காலத்திலும் வெறுக்காத மனநிலையை அவரது மகன்களும் புதிதாக வீட்டிற்கு வந்துள்ள மருமகள்களும் மெயின்டெயின் செய்வதும் மிகச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. கண்டிப்பு காட்டும் அதே நேரத்தில் அன்பை காட்டுவதிலும் சளைக்காதவராக பாண்டியன் காணப்படுகிறார்.

பாண்டியன் கேள்வி: கோமதி கூறுவது போல, சிறுவயதில் அநாதையாக வளர்ந்ததால் தன்னுடைய அன்பை எப்படி காட்டுவது என்பது தெரியாதவராக பாண்டியன் காணப்படுகிறார். இந்நிலையில், சென்னையிலிருந்து சரவணனுடன் தான் எடுத்துக் கொள்ளும் ஹனிமூன் போட்டோசை அதற்காக ஒரு குரூப்பை ஏற்படுத்தி தொடர்ந்து அனுப்புகிறார் தங்கமயில். அதை யாரும் பாராட்டவோ, லைக் போடவோ மாட்டேன் என்கிறார்கள் என்று கால் செய்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். தன்னுடைய மாமனாரிடமும் தங்கமயில் இவ்வாறே கூறுகிறார். இதையடுத்து கோமதியிடம் இதுகுறித்து பாண்டியன் கேட்கிறார்.

கோமதிக்கு பாண்டியன் வீடியோகால்: அதுவரை தன்னுடைய குறைகளை அடக்கிக் கொண்டு சமையல் செய்துக் கொண்டிருக்கும் கோமதி, இதைக்கேட்டு பொங்கி விடுகிறார். தான் ஊர்களுக்கு சென்று போட்டோஸ் அனுப்பியபோது, அதை பாண்டியன் கண்டுக் கொள்ளாமல் இருந்ததை சுட்டிக் காட்டிய கோமதி, இந்த வீட்டில் தனக்கு மதிப்பில்லை என்று மிதியடி போலத்தான் அனைவரும் தன்னை பயன்படுத்துவதாகவும் குறைகொட்டிக் கொள்கிறார். இதனால் வருத்தப்படும் பாண்டியன், பழனிவேல் உதவியுடன் கோமதிக்கு முதல் முறையாக வீடியோ காலில் பேசி, அவரது புடவை மிகவும் அழகாக இருப்பதாக பாராட்டுகிறார். இதை பார்க்கும் மீனா மற்றும் ராஜி அவர்களை கலாய்ப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாண்டியன் பாராட்டு: இதனிடையே, சென்னையில் பாண்டியன் வாங்கிக் கொடுத்த சட்டையை அணிந்துக் கொண்டிருக்கிறார் சரவணன். அந்த சட்டை மிகவும் அழகாக இருப்பதாக தங்கமயில் பாராட்டிய நிலையில், சட்னி எடுத்துவரும் ரெஸ்டாரெண்ட் ஊழியர், அதை சரவணன் சட்டையில் ஊற்றி விடுகிறார். இதனால் தங்கமயில் அந்த ஊழியரிடம் ஆத்திரப்பட, சரவணன் சமாதானப்படுத்துகிறார். இதனிடையே, தங்கமயிலின் இந்த நடவடிககையை சரவணன் தன்னுடைய அப்பாவிடம் கால் செய்து கூறுவதாகவும் மிகவும் நல்ல பிள்ளை என்று அவர் பாராட்டு சர்ட்டிபிகேட் கொடுப்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X