Pandian stores 2 serial: செந்திலால் தடைபடும் சரவணன் திருமணம்.. கொந்தளிக்கும் பாண்டியன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலின் முதல் சீசனும் அண்ணன் -தம்பிகள் பாசத்தை மையமாக கொண்டு ஒளிப்பரப்பான நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிஆர்பியிலும் முன்னணியில் இருந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் அப்பா -மகன்களின் பாசத்தை முன்னிறுத்தி அடுத்தடுத்த சிறப்பாக எபிசோட்களை அளித்து வருகிறது. டிஆர்பியிலும் அதிகமான புள்ளிகளை பெற்று இந்த சீரியல் தற்போது முன்னிலையில் உள்ளது.
இந்த சீரியலில் பாண்டியன் என்ற கேரக்டரில் சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார் நடிகர் ஸ்டாலின். தான் ஆசைப்பட்ட கோமதியை காதல் திருமணம் செய்ததால் அவரது அண்ணன்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார் பாண்டியன். இதனால் தன்னுடைய மகன்களையும் மகளையும் கட்டுக்கோப்பாக வளர்த்து வருகிறார். ஆனாலும் அவரது இரண்டாவது மகன் செந்தில், மீனா என்பவரை காதலித்து தன்னுடைய தம்பி கதிரின் உதவியால் பெற்றோரை மீறி திருமணம் செய்துக் கொள்கிறார். இதனால் பாண்டியன் வீட்டில் ஏற்படும் மாற்றங்கள், குழப்பங்களை மையமாக வைத்து இந்த தொடர் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியில் நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவம் தொடர்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சேனலில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, ஆஹா கல்யாணம் என அடுத்தடுத்த இடங்களில் சீரியல்கள் உள்ள நிலையில், நான்காவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இடம்பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இந்த சீரியல் தன்னுடைய பயணத்தை துவங்கியது. முன்னதாக இந்த சீரியலின் முதல் சீசனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குன்றக்குடியை மையமாக கொண்டு இந்த சீரியலின் கதைக்களம் அமைந்திருந்தது. இந்த சீரியலில் அண்ணன் -தம்பிகளின் பாசம் மையமாக காட்டப்பட்டிருந்தது.
கட்டுக்கோப்பான குடும்பம்: இந்நிலையில் 5 ஆண்டுகளை கடந்து இந்த சீரியல் வெற்றிகரமான எபிசோட்களை கொடுத்தது. இதையடுத்து சீரியல் நிறைவு பெற்றது. உடனடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் துவங்கப்பட்டது. இந்த சீரியலில் அப்பா மற்றும் மகன்களின் உறவை மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் சீசனில் அண்ணனாக நடித்திருந்த ஸ்டாலின், இந்த சீசனில் அப்பாவாக களமிறங்கியுள்ளார். பாண்டியன் தன்னுடைய குடும்பத்தை மிகவும் கட்டுக்கோப்பாக அவர் வழிநடத்தி வந்த நிலையில், அவரது இரண்டாவது மகன் செந்தில், தான் காதலிக்கும் மீனாவையே பெற்றோரை மீறி திருமணம் செய்கிறார்.
செந்தில் -மீனா காதல்: இதனால் பாண்டியன் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிரச்சினைகளை தற்போது இந்த சீரியல் முதன்மை படுத்தியுள்ளது. செந்தில் காதல் திருமணம் செய்ததால், அவரது அண்ணன் சரவணனின் வாழ்க்கை மற்றும் திருமணம் கேள்விக்குறியாகிறது. அவருக்கு பெண் பார்க்கும் படலத்தை பாண்டியன் துரிதப்படுத்துகிறார். தரகர் காட்டும் பெண்ணை, குடும்பத்தினரோடு சென்று பார்க்கிறார். ஆனால், மூத்தவர் இருக்க செந்தில் திருமணம் செய்தது குறித்து கேள்விப்படும் பெண் வீட்டார்,. இந்த திருமணம் குறித்து யோசிக்கிறார்கள். அதையே, பாண்டியன் மற்றும் குடும்பத்தினரிடமும் சொல்கிறார்கள்.
கோபப்படும் பாண்டியன்: இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார் பாண்டியன். இதனால்தான் தான் செந்தில் -மீனா திருமணத்தை எதிர்த்ததாக கோபத்தடன் கூறுகிறார். எந்தவிதமான கெட்டப்பழக்கமும் இல்லாமல் இருக்கும் சரவணனை திருமணம் செய்ய அந்தப் பெண்ணிற்கு கொடுத்து வைக்கவில்லை என்று கதிர் சொல்கிறார். இதுபோன்ற ஒரு விஷயம் நடந்ததற்கு பிறகு அதுபோல சொல்லித்தான் மனதை தேற்றிக் கொள்ள வேண்டும் என்று பாண்டியன் கோபத்துடன் கூறுகிறார். இதனால் மீனா, கலங்குவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. தொடர்ந்து கோமதியும் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று பாண்டியனிடம் கூறுகிறார். முதலில் மறுக்கும் அவர், பின்பு சம்மதிக்கிறார்.


Click it and Unblock the Notifications











