Pandian stores 2: என்னோட அன்பை எப்படித்தான் நிரூபிக்கிறது.. வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட சரவணன்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் தொடர்ந்து சரவணன் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று கூறி அவரிடம் கண்ணீர் விட்டு அழுகிறார் தங்கமயில். இதையடுத்து எதை செய்தால் தான் தங்கமயிலை அதிகமாக நேசிப்பதை உணர்த்த முடியும் என்று சரவணன் கேள்வி எழுப்ப தன்னை ஹனிமூன் கூட்டி செல்லும்படி தங்கமயில் கூறுவதாக இந்த எபிசோடில் காணப்பட்டது.

இதனால் சிறுபிள்ளைத்தனமாக தங்கமயில் நடந்து கொள்வதாகவும் அவரை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என்றும் சரவணன் தன்னுடைய தம்பிகளிடமும் சித்தப்பாவிடமும் கூறுகிறார். இதையடுத்து அப்பாவிடம் ஹனிமூன் குறித்து பேசுமாறு அவர்கள் அறிவுறுத்துவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Television Pandian stores 2 serial Vijay TV 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் சரவணன், தங்கமயில் ஆகியோரின் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருந்தன. தன்னுடைய கணவன் தனக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற கடுப்புடன் தொடர்ந்து அவரிடம் பேசாமல் உடல்நிலை சரியில்லாததாக கூறி அறையிலேயே முடங்குகிறார் தங்கமயில். இதுகுறித்து எதுவும் யோசிக்காத சரவணன் சாதாரணமாக பேசிவிட்டு போகிறார். இந்நிலையில் மாலையில் வீடு வரும் சரவணன் தொடர்ந்து தங்கமயில் படுக்கையிலேயே இருப்பதை பார்த்து விசாரிக்கிறார். அப்போது மிகுந்த கோபத்துடன் சரவணனிடம் பேசுகிறார் தங்கமயில்.

தங்கமயிலிடம் மாட்டிய சரவணன்: தான் தொடர்ந்து உடல்நிலை சரியில்லாத நிலையில் இருக்கும்போதும் தன்னிடம் அதிகமாக விசாரிக்காமல் சரவணன் இருந்ததை சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அவரது தம்பி கதிர் அப்பாவிடம் திட்டு வாங்கியதற்காக அவருக்காக தொடர்ந்து அவருடனேயே இருந்து அவரை சமாதானப்படுத்திய சரவணன், தொடர்ந்து மொட்டை மாடியில் தன்னுடைய தம்பிகள் மற்றும் சித்தப்பாவுடன் தூங்கியதையும் சுட்டிக்காட்டி தங்கமயில் தொடர்ந்து அழுகிறார். தன் மீது அக்கறை இல்லாமல் சரவணன் செயல்படுவதாக கூறுகிறார். இந்நிலையில் தான் எதை செய்தால் தங்கமயில் மீது தான் மிகுந்த அன்புடன் இருப்பதை உணர்த்த முடியும் என்று சரவணன் தானே வாயை கொடுத்து மாட்டிக் கொள்கிறார்.

மன்னிப்பு கேட்ட தங்கமயில்: சரவணன் கேள்விக்கு பதிலளிக்கும் தங்கமயில், தான் ஹனிமூன் கூட்டி செல்லுமாறு கேட்டதை கூறி ஹனிமூன் கூட்டி சென்றால் சரவணன் தன் மீது அன்பாக இருப்பதாக தான் முடிவு செய்வதாக கூறுகிறார். இதையடுத்து முழிக்கும் சரவணன் தொடர்ந்து தன்னுடைய அப்பாவிடம் இது குறித்து பேசுவதாக கூறுகிறார். இதையடுத்து சமாதானம் அடையும் தங்கமயில் தான் தொடர்ந்து ஏதேதோ யோசித்து சரவணனிடம் கடுமையாக பேசி விட்டதாக கூறி மன்னிப்பு கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. மறுநாள் காலையில் தங்கமயிலின் இந்த நடவடிக்கைகள் குறித்து தானே பேசி கேள்வி கேட்டுக்கொள்கிறார் சரவணன்.

குமரன் திருமணம்: இந்நிலையில் அவர் தானே பேசி பேசிக்கொள்வதை பார்த்து பழனிவேல், கதிர் மற்றும் செந்தில் மூவரும் விசாரிக்கின்றனர். தங்கமயிலின் நடவடிக்கைகள் குறித்து சரவணன் கூற, சரவணன் கேட்டால் பாண்டியன் கண்டிப்பாக ஹனிமூன் அனுப்பி வைப்பார் என்றும் சரியான நேரம் பார்த்து இது குறித்து அவரிடம் பேசவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனிடையே எதிர் வீட்டிலிருந்து பழனிவேலை கூப்பிடும் சக்திவேல், உள்ளே அழைத்து சென்று குமரனுக்கு திருமணம் பேசி முடிவு செய்துள்ளதாக கூறுகிறார். இந்நிலையில் அடுத்ததாக பழனிவேல் திருமணம் குறித்து அப்பத்தா பேச, பாண்டியனிடம் எடுபிடி வேலை செய்யாமல் இங்கே வந்து ஏதாவது ஒரு பிசினசை செய்யுமாறு முத்துவேல் கூறுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாண்டியன் -கோமதி வருத்தம்: இதை எடுத்து கோமதி வீட்டிற்கு வரும் பழனிவேலிடம் எதிர் வீட்டிற்கு போக வேண்டாம் என்று கூறினாலும் அங்கேயே போகிறாயே என்று பாண்டியன் கேட்பதாக அமைகிறது. இந்நிலையில் பழனிவேலின் சைக்கிள் குறித்து கோமதி கேள்வி எழுப்ப, அந்த சைக்கிளை சரி செய்து கதிர் ஃபுட் டெலிவரி செய்து வருவதாக கூறுகிறார். தன்னுடைய நண்பனிடம் வாங்கிய வண்டியை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் சொல்கிறார். இதை கேட்கும் கோமதி மட்டுமில்லாமல் பாண்டியனும் வருத்தப்படுவதாக இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X