Pandian stores 2: பற்ற வைத்த பரட்டை.. ராஜி ட்யூஷன் குறித்து பாண்டியனிடம் போட்டுக் கொடுத்த தங்மயில்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் சிறப்பாக அமைந்திருந்தது. வழக்கம்போல அனைத்திலும் மூக்கை நுழைக்கும் தங்கமயிலின் செய்கைகள் தொடர்ந்து கோமதிக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் அவர் தங்கமயிலிடம் எரிந்து விழுவதை அடுத்தடுத்த எபிசோட்களில் பார்க்க முடிகிறது.
முன்னதாக மீனா மற்றும் ராஜி என அடுத்தடுத்த மருமகள்கள் வந்தபோதும் மிகவும் சாஃப்டாக அவர்களுடன் மிகவும் அன்னியோன்யமாக நடந்துக் கொண்ட கோமதி, தங்கமயில் வீடடில் அனைத்து விஷயங்களிலும் தலையிடுவதை அனுமதிக்க முடியாமல் கோபம் கொள்கிறார். அவரை மீனாவும் ராஜியும் தொடர்ந்து சமாதானப்படுத்தி வந்த நிலையில், தற்போது யாரும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோமதியின் கோபம் அதிகரித்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியல் துவங்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில், அடுத்தடுத்து ரசிகர்களை சிறப்பான எபிசோட்களால் கட்டிப் போட்டு வருகிறது. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் தங்கமயிலுக்கு எதிராக கோமதி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவதாக காணப்பட்டது. ஃபுட் டெலிவரி செய்துவிட்டு கதிர் தாமதமாக வீட்டிற்கு வர, வழக்கம்போல அவருக்காக ராஜி மற்றும் கோமதி காத்திருக்கின்றனர். அவர் ஃபிரஷ்ஷாகி சாப்பிட வருகிறார். அப்போது தங்கமயில் கதிருக்கு சாப்பாடு போட வருகிறார்.
கோமதி ஆத்திரம்: இதை பார்க்கும் கோமதிக்கு ஆத்திரம் தலைக்கேறுகிறது. நீ உன் புருஷனுக்கு மட்டும் சாப்பாடு போடு, கதிருக்கு அவனுடைய மனைவி ராஜி சாப்பாடு பரிமாறுவாள் என்று கூறுகிறார். ஆனாலும் தான்தான் கதிருக்கு சாப்பாடு போடுவேன் என்று தங்கமயில் அடம்பிடிக்க, உடனே கோமதி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துகிறார். அனைத்து விஷயத்திலும் தலையிடாமல் இரு என்றும் கூறுகிறார். முன்னதாக பாண்டியனுக்கு அவரது கடைக்கு சென்று தங்கமயில் சாப்பாடு கொடுத்ததால், அவர் தன்னுடைய மருமகளை அதிகமாக பாராட்டுகிறார். கோமதி இதுபோல ஒருநாளும் செய்ததில்லை என்று சுட்டிக் காட்டுகிறார். இதனால் கோமதி கடுப்பானதை பார்க்க முடிந்தது.
தங்கமயில் அழுகை: இந்நிலையில் கோமதி திட்டியதால், மிகுந்த அழுகையினூடே, சரவணனிடம் இதுகுறித்து தங்கமயில் பேசுகிறார். தன்னை அத்தை திட்டி விட்டதாக கூறுகிறார். அவரோ, அம்மா அப்படிப்பட்டவர் இல்லை என்றும் தவறாக புரிந்துக் கொண்டதாகவும் தங்கமயிலுக்கு விளக்கம் கொடுக்கிறார். தொடர்ந்து அம்மா எது சொன்னாலும் மீனா மற்றும் ராஜியை போல அதை பெரிது படுத்தாமல் இருக்குமாறும் அட்வைஸ் கொடுக்கிறார். இதனால் தங்கமயில் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
போட்டுக் கொடுத்த தங்கமயில்: இந்நிலையில், ராஜி ட்யூஷன் எடுக்கும் விவரத்தை மறுநாள் பாண்டியனிடம் கூறுகிறார் தங்கமயில். அவரது ஒப்புதல் இல்லாமல் இந்த ட்யூஷனை ராஜி எடுப்பதாகவும், எதிர் வீட்டில் இருக்கும் அவரது வீட்டினருக்கு தெரிந்தால், ராஜியை வேலைக்கு அனுப்புவதாக அவர்கள் பாண்டியனை கேவலமாக நினைப்பார்கள் என்றும் பற்ற வைக்கிறார். முன்னதாக ட்யூஷன் எடுப்பதை குலைக்குமாறு, தங்கமயிலுக்கு அவரது அம்மா பாக்கியம் சொல்லிக் கொடுத்த நிலையில், தற்போது அதை கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார் தங்கமயில். ஆனால் இவர்கள் இருவரும் பேசுவதை வெளியில் இருந்து கதிர் கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
எகிறி குதித்த பாண்டியன்: இதையடுத்து கோயிலுக்கு சென்றிருந்த கோமதியும் ராஜியும் வந்தவுடன் பாண்டியன் ஆத்திரத்தில் கத்துவதாக காணப்பட்டது. அனைத்து முடிவுகளையும் நீங்களே எடுப்பதாக இருந்தால் இந்த வீட்டில் தான் எதற்கு குடும்பத் தலைவன் என்று பெயருடன் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து இடையில் பேச முயலும் கதிருக்கும் பதிலடி கொடுக்கிறார். எந்த விஷயத்தைதான் கதிர் தன்னுடைய பேச்சை கேட்டு செய்தார் என்று அவர் கேள்வி கேட்க இதனால் கதிர், ராஜி, கோமதி என அனைவரும் அதிர்ச்சி அடைவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











