Pandian stores 2 serial: போட்டி டான்ஸ் போட்ட குழலி -ராஜி.. பாராட்டிய பாண்டியன்.. கடுப்பான குழலி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் சரவணன் மற்றும் தங்கமயில் திருமணத்தை ஒட்டிய காட்சிகளாக காணப்பட்டன. ஒரு நிஜ திருமணத்தையே ரசிகர்கள் கண் முன்னால் இந்த சீரியல் இயக்குனர் கொண்டு வந்துள்ளார். ரிசப்ஷனை ஒட்டி அனைவரும் புகைப்படங்கள் எடுத்த சூழலில் தன்னுடைய அப்பா அம்மாவையும் புகைப்படம் எடுக்க நினைக்கிறார் கதிர்.
இதையடுத்து தன்னுடைய அண்ணி மீனாவிடம் இதைக் கூற, அவரும் பாண்டியன் மற்றும் கோமதியை சென்று அழைத்து புகைப்படங்களை எடுக்க வைக்கிறார். இதனிடையே யார் சிறப்பாக நடனம் ஆடுவார்கள் என்பது குறித்து குழலி மற்றும் ராஜி இடையே போட்டி ஏற்படுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து மணப்பெண்ணை கடத்துவதற்காக தன்னுடைய நண்பர்களுடன் குமரனும் தன்னுடைய சதித்திட்டத்தை தொடர்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றும் சரவணன் -தங்கமயில் திருமணத்தையொட்டிய காட்சிகளையே அரங்கேற்றியுள்ளனர். நேற்றைய எபிசோடில் தங்கமயில் நகைகளை எடை போட வேண்டும் என்று பாண்டியனின் சம்பந்தி கூற அதற்கு பாண்டியன் சம்மதிக்காத நிலை காணப்பட்டது. இதனிடையே அவரை குழலியும் சம்மந்தியும் இணைந்து சமாதானப்படுத்தி நகைகளை எடை போட சம்மதிக்க வைக்கின்றனர். இதனால் படபடப்பு அதிகமாகி தங்கமயில் மயங்கி விழுகிறார். இந்நிலையில் அவரது மயக்கத்தை அனைவரும் சேர்ந்து தெளிய வைக்கின்றனர்.
மயங்கி விழுந்த தங்கமயில்: தங்கமயிலின் மயக்கத்தால் நகைகளை எடைபோடும் விஷயத்தில் இருந்து தங்கமயில் குடும்பத்தினர் தப்பிக்கின்றனர். இதில் அறைக்குள் வந்து தங்கமயிலை ஆசுவாசப்படுத்தும் பாக்கியம், நல்லவேளை நீ மயக்கம் அடைந்தது போல நடித்தாய், இல்லையென்றால் அனைவரும் மாட்டி இருப்போம் என்று கூறுகிறார். இதைக் கேட்கும் தங்கமயில் கடுப்புடன், தான் உண்மையிலேயே மயக்கம் போட்டு விழுந்ததாக கூற பாக்கியம் உள்ளிட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். இந்நிலையில் அனைவரும் புகைப்படம் எடுத்த சூழலில் தன்னுடைய அப்பா மற்றும் அம்மா இருவரும் புகைப்படம் எடுக்காததை பார்க்கும் கதிர் அவர்களையும் புகைப்படம் எடுக்க அழைக்க நினைக்கிறார்.
குடும்ப புகைப்படம்: இந்த விஷயத்தில் மீனாவை அவர் உதவிக்கு அழைக்கிறார். மீனாவும் சென்று புகைப்படம் எடுக்க பாண்டியன் மற்றும் கோமதியை கூப்பிட, காலம் போன கடைசியில் இது தேவையா என்று பாண்டியன் கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. இதையடுத்து பேசும் செந்தில், அவர்கள் தங்களுடன் வந்தால் மூத்த அண்ணன் அண்ணியா என்றுதான் அனைவரும் கேட்பார்கள், அந்த அளவிற்கு அவர்கள் இளமையுடன் இருப்பதாக கூற ,பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் வெட்கப்படுகின்றனர். தொடர்ந்து அவர்களுக்கும் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் புகைப்படம் எடுப்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.
ராஜி ஆடிய சூப்பர் டான்ஸ்: இதனிடையே ஸ்டேஜில் அனைவரும் மீண்டும் கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அனைவரும் இணைந்து ஆட்டம் போடுகின்றனர். ராஜி நன்றாக ஆடுவார் என்று கூறும் மீனா, அவரை ஆடுமாறு கேட்கிறார். இதையடுத்து இடையில் நுழையும் குழலி, ராஜி நன்றாக ஆடினாலும் தன்னளவிற்கு ஆட முடியாது என்று வம்பிழுக்கிறார். இதனால் மீனா போட்டி இன்று வந்துவிட்டது, அதனால் நீ சென்று ஆடு என்று ராஜியிடம் கூறுகிறார். தொடர்ந்து சூப்பரான குத்து போடுகிறார் ராஜி. இதை பொறுக்க முடியாத குழலியும் உடன் இணைந்து ஆடுகிறார். தொடர்ந்து அனைவரும் ராஜியை பாராட்டுகின்றனர்.
கடுப்பான குழலி: ராஜியின் டான்சை பார்த்து பாண்டியனும் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்ததாக பாராட்டுகிறார். இதை பொறுக்க முடியாத குழலி, ராஜி தன்னளவிற்கு எல்லாம் ஆடவில்லை என்று கூறுகிறார். ராஜி சிறப்பாக ஆடியதாக பாண்டியன் தொடர்ந்து கூற, குழலி கோபப்படுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. இந்நிலையில் மணப்பெண்ணை கடத்துவது குறித்து தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து குமரன் மீண்டும் பேசுவதாக காணப்படுகிறது. பெண்ணை கடத்திவிட்டு கால் செய்யுமாறு குமரன் கூறுகிறார். இவர்களின் இந்த கடத்தல் சம்பவத்தால் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதை அடுத்தடுத்த எபிசோட்களில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











