Pandian stores 2 serial: ஹனிமூன் போன இடத்திலும் அடங்காத தங்கமயில்.. சர்ப்ரைஸ் கொடுத்த சரவணன்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியலில் தன்னுடைய மாமனார் வாங்கிக் கொடுத்த சரவணனின் ஷர்ட்டில் ரெஸ்டாரெண்ட் ஊழியர் சட்னியை கொட்டிய நிலையில், இதற்காக தங்கமயில் பொங்கிவிடுகிறார்.

தொடர்ந்து ஹனிமூன் சென்றதையும் மறந்துவிட்டு சட்னி கறை பட்ட சட்டையை துவைக்கத் துவங்குகிறார் தங்கமயில். அவரது இந்த செயல் சரவணனை மட்டுமில்லாமல், விஷயத்தை கேள்விப்படும் பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினரையும் பலவிதமாக ரியாக்ட் செய்ய வைக்கிறது. இந்நிலையில் அவரது இந்த செயல்களை பாராட்டும் சரவணன் கிப்ட் கொடுப்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Televisiion Pandian stores 2 serial Vijay TV 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலின் அடுத்தடுத்த காட்சிகள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து அதிகமான டிஆர்பிக்களையும் பெற்று தந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடும் ரசிகர்களை சிறப்பாக கவரும் வகையில் அமைந்திருந்தது. ஹனிமூன் சென்ற இட,த்திலும் தங்கமயில் தொடர்ந்து தன்னுடைய அம்மாவின் அறிவுரையின்படி நடந்துக் கொள்ள முயற்சிக்கிறார். சரவணனிடம் கோபத்துடன் நடந்துக் கொண்டு வழிக்கு கொண்டுவர முயற்சிக்கிறார். ஆனால் சரவணனோ, அதற்கு இடம் கொடுக்கவில்லை.

சட்டையை துவைத்த தங்கமயில்: தன்னுடைய அப்பா வாங்கிக்கொடுத்த சட்டையை சரவணன் போட்ட நிலையில், அதில் ரெஸ்டாரெண்ட் ஊழியர் சட்னியை கொட்டி விடுகிறார். இதனால் ஆத்திரப்படும் தங்கமயில், அவரிடம் சண்டைக்கு போக முற்படுகிறார். ஆனால் சரவணன் தடுத்து விடுகிறார். இந்நிலையில் தன்னுடைய மாமனார் அன்புடன் வாங்கிக் கொடுத்த அந்த ஷர்ட்டில் அந்தக் கறை இருப்பதை பார்த்தால் அவர் மிகுந்த வருததப்படுவார் என்று கூறும் தங்கமயில், ஹோட்டல் அறையிலேயே அந்த சட்டையை துவைத்து கறையை நீக்குகிறார். இதை தன்னுடைய ஹனிமூன் போட்டோஸ் குரூப்பிலும் பதிவிடுகிறார்.

பாண்டியன் பாராட்டு: இதுகுறித்து செந்தில் மீனா மற்றும் ராஜியிடம் கேள்வி எழுப்ப, அவர்களோ ஒருவர் தூக்கிப் போட்டுவிடுவேன் என்றும் மற்றொருவர் ட்ரை கிளீனுக்கு கொடுத்துவிடுவேன் என்றும் கூறுகின்றனர். இதனால் மேலும் தங்கமயிலுக்கு அதிகமான பாராட்டு கிடைக்கிறது. சரவணனும் இதுகுறித்து தன்னுடைய அப்பாவிற்கு கால் செய்து சரவணன் பேச, அவரோ, தான் பார்த்து திருமணம் செய்துவைத்த தங்கமயில் எவ்வளவு பொறுப்புடன் நடந்துக் கொள்கிறார் என்று இன்றைய எபிசோடில் கேட்கிறார். மேலும் தங்கமயிலை சிறப்பாக பார்த்துக் கொள்ளுமாறும் கூறுகிறார்.

சரவணன் கொடுத்த பரிசு: இந்நிலையில் தங்கமயிலை ஹோட்டல் அறையிலேயே விட்டு விட்டு வெளியில் சென்ற சரவணன், ஏறக்குறைய ஒருமணிநேரம் கழித்து திரும்புகிறார். இதனால் தங்கமயில் கோபமடைகிறார். அவரை சமாதானம் செய்யும் சரவணன், அவரை கண்ணை மூட செய்துவிட்டு அவருக்காக வாங்கிவந்த கிப்டை கொடுக்கிறார். தங்கமயிலுக்காக வெளியில் சென்று காஸ்ட்லி புடவை வாங்கி வந்து கொடுக்கிறார் சரவணன். ஸ்வீட்டும் வாங்கிவந்து கொடுக்கும் நிலையில், குடும்பத்தினருக்கு சென்னையிலிருந்து பரிசுகள் வாங்க வேண்டும் என்றும் அதனால் புடவையை திரும்பி கொடுத்து விடலாமா என்றும் தங்கமயில் கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X