சம்பந்தம் இல்லாத விஷயத்தில் குழப்பத்தை உருவாக்காதீங்க.. தங்கமயிலிடம் கண்டிப்பாக பேசிய கதிர்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளது. ட்யூஷன் விவகாரத்தை பாண்டியனிடம் தங்கமயில் போட்டுக் கொடுக்கிறார். இதையடுத்து டியூஷன் எடுத்து தன்னை ராஜியின் குடும்பத்தினர் முன்னிலையில் அவமானப்படுத்த வேண்டாம் என்று கத்தி தீர்க்கிறார்.
இந்த விஷயத்தில் ராஜி மட்டுமில்லாமல் கதிர், கோமதி, பழனிவேல் உள்ளிட்ட அனைவரும் திட்டு வாங்குகின்றனர். இனி இந்த வீட்டில் ட்யூஷன் எடுக்கக்கூடாது என்று தன்னுடைய முடிவை பாண்டியன் கூற, இதனால் தங்கமயில் நிம்மதி பெருமூச்சு விடுகிறார். தன்னால் அனைவரும் திட்டு வாங்கியதால் ராஜி அழுதபடி அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை சிறப்பாக கவரும் வகையில் அமைந்திருந்தது. இன்றைய எபிசோடில் ராஜி டியூஷன் எடுப்பது குறித்து பாண்டியனிடம் தங்க மயில் போட்டுக் கொடுக்கிறார். அவர் டியூஷன் எடுப்பதால் குடும்ப கவுரவம் குறையும் என்றும் எதிர் வீட்டில் உள்ள ராஜியின் குடும்பத்தினர் அவமானமாக பேசுவார்கள் என்றும் தங்கமயில் கூற, இதனால் பாண்டியன் கோபம் தலைக்கேறுகிறது. தன்னிடம் சொல்லாமல் ராஜி இத்தகைய வேலையில் ஈடுபட்டது குறித்து அவர் ஆத்திரத்துடன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் கத்துவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
பாண்டியன் ஆத்திரம்: இந்த குடும்பம், இந்த வீடு அனைத்தும் தான் கஷ்டப்பட்டு உருவாக்கியது என்றும் இதில் அனைவரும் நாட்டாமை செய்ய வேண்டாம் என்றும் கதிரைப் பார்த்து அவர் கூறுகிறார். மேலும் அவரவர் சொந்தமாக முடிவெடுக்க வேண்டும் என்றால் அது அவர்கள் தனியாக சென்று கஷ்டப்பட்டு வீடு கட்டி அதன் பிறகு செய்து கொள்ளட்டும் என்றும் இந்த வீட்டில் தான் தான் எஜமானன் என்றும் தன்னுடைய விருப்பப்படி தான் அனைத்தும் நடத்த வேண்டும் என்றும் பாண்டியன் கூறுகிறார். இந்நிலையில் தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது என்று அனைவரிடமும் சொல்லி வைக்குமாறு கோமதிக்கும் அவர் அறிவுறுத்துகிறார்.
தங்கமயில் நிம்மதி: இந்த வீட்டில் ட்யூஷன் எடுப்பது குறித்து இனி யாரும் பேசக்கூடாது என்றும் அவர் கூற, இதை எதிர்பார்த்திருந்த தங்கமயில் நிம்மதி அடைகிறார். இந்நிலையில் பாண்டியன் சென்றவுடன் ராஜி தன்னுடைய மாமியார் மற்றும் பழனிவேல் ஆகியோரிடம் அழுகையோடு பேசுவதாக காணப்படுகிறது. தன்னால் அனைவரையும் மாமா திட்டியதாகவும் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் ராஜி கூறுகிறார். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் கதிர் தன்னுடைய மாமாவிடம் தன்னுடைய அப்பா மட்டும்தான் வீடு கட்டி பெரிய ஆளாக ஆகியுள்ளாரா, நானும் இதைவிட பெரிய மாளிகையாக கட்டுவேன் என்று கூறுவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.
தங்கமயில் அட்வைஸ்: இந்நிலையில் கதிரின் அப்பா கூறியதை எல்லாம் உத்வேகமாக எடுத்துக்கொண்டு முன்னேறி காட்டுமாறு பழனிவேலும் கூறுகிறார். இந்நிலையில் கதிர் தன்னுடைய வேலைக்கு கிளம்புகிறார். அப்போது அவரைப் பார்த்து தங்கமயில் இந்த ஓட்டை பைக்கை வைத்துக்கொண்டு போகிறீர்களே, இந்த பைக் உங்களுடைய நண்பருடையது என்று சரவணன் கூறியதாக கதிரிடம் கூறுகிறார். இந்த ஓட்டை பைக்கை எடுத்துக் கொண்டு போவதை விட அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு அவரது வண்டியை எடுத்துக்கொண்டு செல்லலாமே என்று தங்கமயில் கூறுகிறார். தான் தன்னுடைய பெஸ்ட் பிரண்ட்டின் வண்டியை தான் ஒட்டி வருவதாகவும் தான் சம்பாதிப்பதால் விரைவில் புது பைக் வாங்குவேன் என்றும் அதை தான் தன்னுடைய அப்பாவும் விரும்புவார் என்றும் கதிர் கூறுகிறார்.
கறார் காட்டிய கதிர்: இந்நிலையில் தொடர்ந்து தங்கமயிலிடம் பேசும் கதிர், டியூஷன் விவகாரத்தில் ராஜி அல்லது தன்னுடைய அம்மா அப்பாவிடம் பேசியிருப்பார்கள் என்றும் இடையில் தங்கமயில் நுழைந்து குழப்பத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்புகிறார் கதிர். இதனால் கண்கலங்கியபடி தங்கமயில் தான் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறுகிறீர்களே என்று கேட்கிறார். இதற்கு பதிலளிக்கும் கதிர் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது அனைவருக்குமே நல்லது என்று தங்கமயிலிடம் கூறுவதாக இன்றைய எபிசோடு காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











