Pandian stores 2 serial: கண்கள் ஏதோ தேட.. ரொமான்ஸ் மோடில் கதிர் -ராஜி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த சீரியல் துவங்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையிலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிகமான டிஆர்பியுடன் சேனலின் மூன்றாவது சீரியலாக மாஸ் காட்டி வருகிறது. பாண்டியன் -கோமதி தம்பதி, 28 ஆண்டுகளுக்கு முன்னதாக காதல் திருமணம் செய்ததால் ஏற்படும் விளைவுகளை மையமாக கொண்டு இந்த சீரியலின் கதைக்களம் அமைந்துள்ளது. சீரியலில் அடுத்தடுத்த காட்சி அமைப்புகள் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது.

கதிர் மற்றும் செந்திலின் திருமணம் பாண்டியன் குடும்பத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள், பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்த சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தற்போதெல்லாம் சீரியல்களும் ஆக்ஷன் காட்சிகளுடன் பின்னி பெடலெடுத்து வருகின்றன. ஆனால் இது போல அல்லாமல், இயல்பான கதைக்களத்துடன், குடும்பங்களில் அன்றாடம் ஏற்படும் நிகழ்வுகளை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலின் அடிநாதமாக இழையோடும் நகைச்சுவையும் சீரியலுக்கு மிகச்சிறப்பான வடிவத்தை கொடுத்து வருகிறது.

Vijay TV s Pandian stores 2 serial today 21st March 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தன்னுடைய ஒளிபரப்பை துவங்கி சில மாதங்களே ஆன நிலையிலும் மிகச்சிறப்பாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிக டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நிலை பெற்றுள்ளது. இந்த சீரியலில் அடுத்தடுத்த எபிசோட்கள் இயல்பாக குடும்பங்களில் நிகழும் சம்பவங்களை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. 28 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியன் மற்றும் கோமதியின் காதல் திருமணம், அதனால் தன்னுடைய அண்ணன்களிடம் ஏற்படும் பகை, பாண்டியன் தன்னுடைய உழைப்பால் கண்ட வெற்றி போன்றவற்றை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

தடைபடும் சரவணன் திருமணம்: தன்னுடைய குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்துவரும் பாண்டியனுக்கு சவாலாக அவரது அடுத்தடுத்த மகன்கள் செந்தில் மற்றும் கதிரின் திருமணங்கள் அமைகின்றன. இவர்களின் திருமணங்களால் மூத்த மகன் சரவணனின் திருமணம் பாதிக்கப்படுகிறது. முன்னதாக தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்தை காப்பதற்காகவும் ராஜியின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும் தன்னுடைய மகன் கதிர் மற்றும் ராஜியின் திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் இந்த சீரியல் பேசுகிறது. சரவணனின் திருமணம் தடைபடுவதால் பாண்டியன் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.

பாண்டியனின் சவால்: தன்னுடைய மகனின் திருமணத்தை 50 நாட்களுக்குள் நடத்தி வைப்பேன் என்றும் அதுவரை தன்னுடைய காலில் செருப்பு போடமாட்டேன் என்றும் அவர் சபதம் போடுகிறார். இதனிடையே இன்றைய எபிசோடில் கதிர் மற்றும் செந்தில் இருவரும் மொட்டை மாடியில் சரவணன் மற்றும் பழனிவேலுடன் இணைந்து தூங்க வருகின்றனர். தங்களின் மனைவியை விட்டுவிட்டு ஏன் அவர்கள் மொட்டை மாடிக்கு வருகிறார்கள் என சரவணன் கேள்வி கேட்கிறார். முன்னதாக சரவணனின் திருமணம் சிறப்பாக நடப்பதற்காக தான் விரதம் இருக்கப் போவதாக மீனாவிடம் செந்தில் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

ரொமான்ஸ் மோடில் கதிர் -ராஜி: தொடர்ந்து சண்டைக்கோழிகளாக கதிர் மற்றும் ராஜி காணப்படுகின்றனர். சண்டை போடுவதற்காகவே தன்னை கதிர் திருமணம் செய்துள்ளதாக மீனாவிடம் ராஜி கூறுகிறார். இந்நிலையில் தண்ணீர் எடுத்துச் செல்லும் ராஜி, வழுக்கி விழப்போக, அங்கே வரும் கதிர், அவரை தாங்கிப் பிடிக்கிறார். இதையடுத்து பேக்கிரவுண்டில் பாட்டு இல்லாமலா, கண்கள் ஏதோ தேட பாடலுடன் இவர்களின் ரொமான்ஸ் பக்கங்கள் ஓபன் ஆவதாக இயக்குநர் காட்சிப் படுத்தியுள்ளார். இதை மீனாவும் பார்த்து குதூகலிக்கிறார். எதிர்வீட்டில் இருந்து ராஜியின் அம்மா மற்றும் சித்தியும் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X