Pandian stores 2 serial: டிராமா கோஷ்டி.. தங்கமயில் குடும்பம் குறித்து விமர்சித்த மீனா & ராஜி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய தினமும் சரவணன் மற்றும் தங்கமயில் திருமணத்தையொட்டிய காட்சிகளே ஒளிபரப்பானது. இவர்கள் இருவருக்கும் ரிசப்ஷன் நிறைவடைந்த சூழலில் மறுநாள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
அதிகாலையில் எழுந்திரிக்க வேண்டியிருந்ததால், கோமதி மற்றும் அரசியுடன் தூங்க செல்கின்றனர் ராஜி மற்றும் மீனா. தொடர்ந்து அங்கு உறவினர்கள் தூங்க வந்ததால், வேறு அறைக்கு சென்று தூங்க முயல்கின்றனர். அவர்களுக்கு அறை கிடைக்காத நிலையில் காலியாக இருந்த மணமகள் அறையில் அவர்கள் தூங்குவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியல் துவங்கி சில மாதங்களே ஆன நிலையிலும் தொடர்ந்து சேனலில் முன்னணி சீரியலாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குடும்பப் பாங்கான கதைகளத்தில் அப்பா மற்றும் மகன்களுக்கு இடையில் உள்ள பாசப்பிணைப்பை கதைக்களமாகக் கொண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தொடர்ந்து அடுத்தடுத்த எபிசோடுகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.
சரவணன் -தங்கமயில் ரிஷப்ஷன்: சரவணன் மற்றும் தங்கமயில் ரிசப்ஷன் பல்வேறு தடைகளை தாண்டி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் ஆட்டம், பாட்டம் என உற்சாகமாக பொழுதை கழிக்கின்றனர். மீனா ராஜியை டான்ஸ் ஆட சொல்லும் சூழலில், ராஜி தன்னளவிற்கு சிறப்பாக ஆட மாட்டார் என்று குழலி கூறுகிறார். இதை சேலஞ்சாக ஏற்றுக் கொள்ளும் ராஜி, தொடர்ந்து அனைவரும் பாராட்டும் வகையில் நடனமாடுகிறார். இதை பொறுக்க முடியாமல் குழலியும் அவருடன் இணைந்து தான் பெஸ்ட் என்பதாக ஆடி முடிக்கிறார். ஆனால் பாண்டியன் உட்பட அனைவரும் ராஜியை பாராட்டியதை குழலியால் பொறுக்க முடியவில்லை.
ராஜியை அவமானப்படுத்திய குழலி: தொடர்ந்து ராஜி ஆட்டக்காரி போல ஆடியதாக அனைவர் முன்னிலையிலும் குழலி அவமானப்படுத்துகிறார். இதைக் கேட்டு பாண்டியன் மட்டும் இல்லாமல் கோமதி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் குழலியை திட்டுகின்றனர். தங்கள் வீட்டு பெண்ணை இப்படி பேசுவதா என்று கேட்கின்றனர். இதனால் வருத்தத்திற்கு உள்ளாகும் குழலி தனியாக சென்று கண்கலங்கி கொண்டிருக்கிறார். அங்கு வரும் பாண்டியன் குழலியை சமாதானப்படுத்துகிறார். இந்நிலையில் கோமதி, அரசி, ராஜி, மீனா என நால்வரும் ஒரே அறையில் படுத்து தூங்க தயாராகின்றனர். இந்நிலையில் அங்கு வரும் உறவினர்கள் தாங்கள் அங்கு படுத்து கொள்கிறோம் என்று கூற மீனா மற்றும் ராஜி அங்கு தூங்க முடியாமல் போகிறது.
மணமகள் அறையில் தூங்க செல்லும் ராஜி -மீனா: இதையடுத்து மீனாவும் ராஜியும் காலியான மற்ற அறையில் தூங்குவதாக கோமதியிடம் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறுகின்றனர். இந்நிலையில் மணமகள் அறையில் ஏசி வேலை செய்யாததால் அவர்களும் வேறு ஒரு அறையை தேடி சென்று அங்கு படுத்துக்கொள்ள திட்டமிடுகின்றனர். அந்த அறைக்கு தூங்குவதற்காக ராஜி மற்றும் மீனா வரும் சூழலில் தங்கள் அறையில் ஏசி வேலை செய்யவில்லை என்று பாக்கியம் கூறுகிறார். மணப்பெண் இரவில் சரியாக தூங்கினால் தான் மறுநாள் காலையில் பிரஷ்ஷாக இருக்க முடியும் என்று பாக்கியம் கூற தாங்கள் மணமகள் அறையில் படுத்து கொள்வதாக மீனா மற்றும் ராஜி இருவரும் அங்கு வருகின்றனர்.
டிராமா கோஷ்டி என விமர்சனம்: தொடர்ந்து அந்த இடம் நன்றாக தான் இருப்பதாக கூறும் மீனா, ஆமாம் எதையுமே தங்கமயில் குடும்பத்தினர் அதிகப்படியாகத்தான் பேசுவார்கள் என்று கூறுகிறார். இதையடுத்து தங்கமயில் குடும்பத்தினர் சரியான டிராமா கோஷ்டி என்று மீனா மற்றும் ராஜி இருவரும் அவர்களை கமெண்ட் செய்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே தங்கமயில் மற்றும் சரவணன் இருவரும் இரவில் போனில் பேசிக் கொள்வதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











