Pandian stores 2: அப்பாவிடம் பேச ஒத்திகை பார்த்த செந்தில்.. அட இப்படில்லாம்கூட நடக்குமா?
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைவடைந்து தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது.
இந்த சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட நிலையில் அதற்குள் சேனலின் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்பா -மகன்களின் அன்பை இந்த சீரியல் கதைக்களமாக கொண்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் சீரியல்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அவர்களின் மனதிற்கு நெருக்கமான சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று கூறலாம். அந்த வகையில் சிறப்பான சீரியலாக டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று முதல் 3 சீரியல்களில் ஒன்றாக அமைந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் 5 ஆண்டுகளை கடந்து சிறப்பாக நடைபோட்டு வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எண்ட் கார்ட் போட்டது. இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது சீசன் உடனடியாக துவங்கப்பட்டு தற்போது ரசிகர்களை அதிகமாக கவர்ந்து அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
அப்பா -மகன்களின் உறவு: முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு கதைக்களம் அமைந்த நிலையில், தற்போது இரண்டாவது சீசனில் அப்பா மற்றும் மகன்களின் உறவு மற்றும் பிணைப்பு குறித்த கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குநர். முதல் சீசனில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துவந்த ஸ்டாலின் மற்றும் ஹேமா இந்த சீசசனிலும் இடம்பெற்றுள்ளனர். காதலித்து திருமணம் செய்த பாண்டியன் மற்றும் கோமதி தம்பதியின் 3 மகன்கள், மகள் மற்றும் அவர்களின் உறவுநிலையை மையமாக கொண்டு இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
கண்டிப்பான அப்பா: சீரியலில் கண்டிப்பான அப்பாவாக பாண்டியனாக ஸ்டாலின் நடித்து வருகிறார். அவரது மனைவியாக கோமதியாக பிரபல நடிகை நிரோஷா நடித்துவருவது சீரியலுக்கு கூடுதல் அட்ராக்ஷனை கொடுத்து வருகிறது. இந்த சீரியலில் வளர்ந்த பிள்ளைகளாக இருந்தபோதிலும் தன்னுடைய அப்பாவிற்கும் அவரது கண்டிப்பிற்கும் பயப்படும் மகன்களாக செந்தில், கணேஷ், கதிர் ஆகியோர் காணப்படுகின்றனர். இதில் கதிர் மட்டும் விதிவிலக்கு. தன்னுடைய அப்பாவின் செய்கைகளை அவர் கேள்வி கேட்பதுடன் தன்னுடைய அண்ணன் செந்திலின் காதலுக்கும் உறுதுணையாக இருந்து திருமணத்தை முடித்தும் வைக்கிறார்.
செந்தில் -மீனா திருமணம்: இதனால் அவர்கள் வீட்டில் ஏற்படும் சலசலப்பை கடந்த சில தினங்களாக இந்த சீரியலில் பார்க்க முடிந்தது. திருமணம் முடிந்தும் தன்னுடைய அப்பாவின் பேச்சுக்கு உடன்பட்டு, தன்னுடைய மனைவி மீனாவை தள்ளிவைக்கிறார் செந்தில். இருந்தபோதிலும் தன்னுடைய மனைவி மீனாவின் விருப்பத்திற்கிணங்க, வெளியூருக்கு சென்று சில நாட்கள் தங்க தன்னுடைய அப்பாவிடம் பர்மிஷன் கேட்க திண்டாடுகிறார் செந்தில். இதற்காக அவர் ஒத்திகை பார்க்கிறார். இதையடுத்து தன்னுடைய சகோதரர் கதிரின் அறிவுறுத்தலின்படி அப்பாவிடம் நேரடியாக கேட்கவும் அவர் தீர்மானிப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.
கட்டுக்கோப்பான திருமணம்: தன்னுடைய குடும்பத்தை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார் பாண்டியன். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளையும் கண்டிப்புடன் நடத்துகிறார். தந்தையின் கண்டிப்பிற்காக தன்னுடைய காதலையே இழக்கிறார் கணேஷ். இந்நிலையில் இரண்டாவது மகன் செந்திலும் அப்படியே நடந்துக் கொள்ளாமல் இருக்க கதிர் உறுதுணையாக இருக்க, செந்தல் -மீனா திருமணம் நடக்கிறது. அந்த குடும்பத்துடன் உடனடியாக ஒன்ற முடியவில்லை என்றபோதிலும் தன்னுடைய அடுத்தடுத்த செயல்களால் மாமியார் உள்ளிட்டவர்களை வசப்படுத்துகிறார். நேரிடையாக பேசவில்லை என்றபோதிலும் பாண்டியனும் மீனாவிற்கு ஆதரவாகவே காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











