Pandian stores 2 serial: அப்பாவின் 50வது பிறந்தநாள்.. செந்திலுடன் பரிசு கொடுக்க சென்ற மீனா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் குடும்ப உறவுகளின் மகத்துவத்தை, கூட்டுக் குடும்பத்தின் பெருமையை அதன் சிக்கல்களை வெளிப்படுத்துவதாக அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. பாண்டியன் -கோமதி தம்பதியின் 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளிட்டவர்களை கேரக்டர்களாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது.
சமீபத்தில் திருமணமான சரவணன் -தங்கமயிலின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக நடந்த நிலையில், செந்தில் -மீனா, கதிர் -ராஜி இருவரின் திருமணமும் காதல் மற்றும் அதையொட்டிய பிரச்சினைகளின் அடிப்படையில் நடந்துள்ளது. தன்னுடைய மகன்கள் தன்னுடைய விருப்பத்தை மீறி திருமணம் செய்த போதிலும் அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கிறார் பாண்டியன்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் முன்னணி சீரியலாக அதிகமான டிஆர்பியுடன் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. சேனலின் மூன்றாவது முன்னணி சீரியலாக தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த தொடரில் பாண்டியன் மற்றும் கோமதி தம்பதியின் மகன்கள், மகள்கள், கோமதியின் அண்ணன்கள் என குறைந்த கேரக்டர்களை கொண்டு அடுத்தடுத்த காட்சியமைப்புகளை கொடுத்து வருகிறார் இயக்குநர். சாதாரண நிலையிலிருந்து தற்போதைய நிலைக்கு உயர்ந்துள்ள பாண்டியன், பணத்தை அருமையை தன்னுடைய மகன்களுக்கும் புரிய வைக்கிறார். இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிறார்.
தங்கமயில் கொடுக்கும் டார்ச்சர்: தன்னுடைய மகன்கள் செந்தில் மற்றும் கதிர் இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில், தன்னுடைய மூத்த மகன் சரவணனுக்கு தான் பார்த்து நிச்சயித்த தங்கமயிலை ஊரார் மெச்ச திருமணம் செய்து வைக்கிறார் பாண்டியன். இந்த திருமணத்தில் தங்கமயிலின் பக்கத்தில் அடுத்தடுத்த பிரச்சினைகள் காணப்படும் நிலையில், தன்னுடைய ஆதிக்கத்தை பாண்டியன் குடும்பத்தில் நிலைநாட்ட தொடர்ந்து தங்கமயில் அடுத்தடுத்து காய்நகர்த்தி வருகிறார். அவருக்கு பின்னாலிருந்து சாவி கொடுத்து வருகிறார் அவரது அம்மா பாக்கியம். இந்நிலையில் தற்போது தன்னுடைய கணவனை ஹனிமூன் அழைத்து செல்லும்படி தொடர்ந்து குடைச்சல் கொடுக்கிறார் தங்கமயில்.
மீனா அப்பா 50வது பிறந்தநாள்: இதனிடையே, தன்னுடைய அப்பாவின் 50வது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாட்ச் ஒன்றை பரிசாக வாங்கிய மீனா, அதை தன்னுடைய கணவன் செந்திலிடம் கொடுத்து போட்டுக் கொள்ளும்படி கூறுகிறார். ஆனால் மீனாவின் அப்பாவிற்காக வாங்கிய பரிசை அவருக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று கூறும் செந்தில், மீனாவை வற்புறுத்தி அவரது அப்பா வீட்டிற்கு அழைத்து செல்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. முன்னதாக கோயிலில் வைத்து தன்னுடைய அப்பாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட மீனா, இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், செந்திலின் வற்புறுத்தலையடுத்து அப்பா வீட்டிற்கு செல்கிறார்.
கிஃப்ட் கொடுக்க சென்ற மீனா: இதனிடையே, மிகுந்த தயக்கத்துடன் தன்னுடைய வீட்டிற்கு மீனா செல்ல, அவரை பார்த்து அதிர்ச்சியடையும் அவரது அம்மா சாந்தி, அவரை உடனடியாக வெளியேறுமாறு கூறுகிறார். ஆனாலும் தன்னுடைய அப்பாவை பார்த்து தான் அவருக்காக கிஃப்ட் வாங்கியுள்ளதாக கூறி வாட்சை பரிசளிக்கிறார் மீனா. ஆனால் மிகுந்த கோபத்துடன் பேசும் அவர், வீட்டை திறந்து வைத்ததால் கண்ட நாய்களும் வீட்டிற்குள் வருவதாக பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. ஆனாலும் தன்னுடைய பொறுமையை இழக்காமல் மீனா கிஃப்டை கொடுப்பதாகவும் அமைந்திருந்தது.


Click it and Unblock the Notifications











