Pandian stores 2: கதிர் கேள்வி கேட்ட விவகாரம்.. சரவணன் & பாண்டியனிடம் போட்டுக் கொடுத்த தங்கமயில்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்த காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. நேற்றைய தினம் ராஜி டியூஷன் எடுப்பது குறித்து பாண்டியனிடம் பற்ற வைத்த தங்கமயில், அவர் டியூஷன் எடுக்க முடியாதபடி செய்கிறார். இதையடுத்து மற்றவர்கள் விஷயத்தில் தங்கமயில் தலையிட வேண்டாம் என்று கதிர் கோபமாக பேசுவதாக காணப்பட்டது.

இதையடுத்து இன்றைய எபிசோடில் தன்னுடைய கணவன் சரவணன் மற்றும் மாமனார் பாண்டியனிடம் கதிர் மற்றும் கோமதி இருவரும் ட்யூஷன் விஷயத்தில் தன்னை திட்டியதை போட்டுக் கொடுக்கிறார் தங்கள் மயில். இதுகுறித்து அவர்களிடம் பாண்டியன் மற்றும் சரவணன் இருவரும் கேட்கும்படி அவர்களை உசுப்பி விடுகிறார்.

Television Pandian stores 2 serial Vijay tv

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து மாஸ் காட்டி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடு ரசிகர்களை சிறப்பாக கவர்ந்தது. தொடர்ந்து பாண்டியன் குடும்பத்தில் தன்னுடைய ஆட்டத்தை அடுத்தடுத்து நிகழ்த்தி வருகிறார் தங்கமயில். ராஜி டியூஷன் எடுக்கும் விஷயத்தை பாண்டியனிடம் போட்டுக் கொடுக்க, அவரும் ஆத்திரத்தின் எல்லைக்கு சென்று அனைவரையும் கத்தி தீர்க்கிறார். தொடர்ந்து டியூஷன் எடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் ராஜியிடம் கூறுகிறார். தன்னால் கோமதி, கதிர், பழனிவேல் என அனைவரும் திட்டு வாங்கியதை பார்த்து ராஜியும் மனம் உடைந்து அழுவதாக நேற்றைய எபிசோடில் காணப்பட்டது.

கதிர் கோபம்: இந்நிலையில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று தங்கமயிலை பார்த்து கதிர் கூறுவதாகவும் நேற்றைய எபிசோடு அமைந்திருந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் சரவணன் மற்றும் பாண்டியனுக்கு சாப்பாடு எடுத்துச் செல்லும் தங்கமயில், அவர்களிடம் இது குறித்து போட்டுக் கொடுப்பதாக காணப்பட்டது. தன்னை திட்டியது குறித்து சரவணன் கதிரிடம் கேட்க வேண்டும் என்றும் அப்பொழுதுதான் அந்த வீட்டில் தனக்கு தொடர்ந்து மரியாதை இருக்கும் என்றும் சரவணனிடம் தங்கமயில் கூறுகிறார். இதற்கு சரவணன் தங்கமயில் செய்தது தவறு தானே என்று கூறுகிறார்.

கண்கலங்கிய தங்கமயில்: தொடர்ந்து கதிரிடம் தான் எப்படி இது குறித்து கேட்க முடியும் என்று தங்கமயிலிடம் அவர் கேள்வி எழுப்புகிறார். இதைக் கேட்கும் தங்கமயில் தன்னை கதிர் பேசியதற்காக கண்கலங்கி அழுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனால் தான் கண்டிப்பாக கதிரிடம் இது குறித்து கேட்கிறேன் என்று சரவணன் கூறுகிறார். இந்நிலையில் அடுத்ததாக பாண்டியனுக்கு சாப்பாடு எடுத்து செல்லும் தங்கமயில் அவரிடமும் இந்த விஷயம் குறித்து நைசாக பேசுகிறார். தன்னுடைய மாமனாருக்கு தெரியாமல் எந்த விஷயமும் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் டியூஷன் விஷயத்தை கூறியதாகவும் ஆனால் அதற்காக கோமதி மற்றும் கதிர் இருவரும் தன்னை திட்டியதாகவும் பாண்டியனிடம் போட்டுக் கொடுக்கிறார் தங்கமயில்.

தவிக்கும் செந்தில்: கோமதி அப்படி பேசக் கூடியவள் இல்லை என்றும் தான் அது குறித்து அவளிடம் பேசுவதாகவும் பாண்டியன் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. முன்னதாக தன்னால் அத்தையின் நிம்மதி பறிபோவதாக வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றும்வகையில் பாண்டியனிடம் விஷயத்தை கூறுகிறார் தங்கமயில். இவர்களின் இந்த பேச்சை பழனிவேல் பார்ப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே, சென்னையில் அடுத்தடுத்த வேலைகளை தொடர்ந்து செந்திலுக்கு பாண்டியன் கொடுக்கிறார். மல்லி மற்றும் பூண்டு ஆகியவற்றை கோயம்பேட்டில் ஒரு வியாபாரியிடம் பேசி தன்னுடைய கடைக்கு அனுப்பி விடுமாறு கூறுகிறார்.

மீனா ஆதங்கம்: அந்த வியாபாரி கடையில் இல்லாததால் செந்தில் தொடர்ந்து காத்திருப்பதாக இந்த எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே மதியத்திற்குள் தன்னுடைய ட்ரெயினிங்கை முடித்துவிட்டு செந்திலுக்காக வந்து மீனா காத்திருக்கிறார். செந்தில் விரைவில் வருவதாக மீனாவை சமாதானப்படுத்துவதாகவும் காணப்பட்டது. இந்நிலையில் மீனாவிற்கு கால் செய்து பேசும் ராஜி, வீட்டில் நடந்த விஷயங்களை கூற தாங்களும் அரேஞ்ச்டு மேரேஜ் செய்திருந்தால் தங்களுக்கும் அந்த வீட்டில் நல்ல மரியாதை கிடைத்திருக்குமோ என்று மீனா ஆதங்கத்துடன் கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X