Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக துவக்கம் முதலே மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் பாண்டியன், கோமதி அவர்களின் மகன்கள், மகள்கள் என அடுத்தடுத்த கேரக்டர்கள் சிறப்பாக காட்டப்பட்டு வருகின்றனர். தன்னுடைய குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார் பாண்டியன்.
ஆனால் அவரது இந்த செயல்பாட்டிற்கு பிரச்சினையாக செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்கள் வந்து சேர்கின்றன. ஆயினும் மகன்கள் மீது இருக்கும் பாசத்தின் காரணமாக இவற்றை ஏற்றுக் கொள்கிறார். தொடர்ந்து கேள்விக்குறியாகும் சரவணனின் திருமணத்தை மிகுந்த சிரமங்களுக்கிடையில் நிச்சயிக்கிறார். அவரது மகன்களும் தன்னுடைய அப்பா மீது மிகுந்த பிரியமாக இருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அப்பா மற்றும் மகன்களின் உறவு மிகச்சிறப்பாக காட்டப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் தன்னுடைய குடும்பத்தினர் மீது மிகுந்த பரிவுடன் காணப்படுகிறார் பாண்டியன். இருந்தபோதிலும் மிகுந்த கண்டிப்புடன் அவர்களை வழிநடத்தி வருகிறார். ஆயினும் இதையும் மீறி செந்தில் மற்றும் கதிர் அடுத்தடுத்து வீட்டிற்கு தெரியாமல் திருமணங்களை செய்துக் கொள்கின்றனர். இதனால் ஊரார் முன்னிலையில் அவமானப்பட நேர்ந்தாலும் தன்னுடைய மகன்கள் மீது இருக்கும் பாசத்தின் காரணமாக இவற்றை புறந்தள்ளுகிறார் பாண்டியன்.
சரவணன் -தங்கமயில் திருமணம்: இவர்களின் திருமணங்களால் மூத்த மகன் சரவணனின் திருமணம் கேள்விக்குறியாகிறது. மிகுந்த முயற்சிகளுககு பிறகு கல்யாண வைபோகம் நிகழ்ச்சி மூலமாக சரவணனுக்கு தங்கமயில் என்பவரை நிச்சயிக்கிறார் பாண்டியன். இவர்களின் நிச்சயதார்த்தமும் சிறப்பான முறையில் நடந்து முடிகிறது. இதனிடையே, கீழே விழுந்த தன்னுடைய அம்மாவை காப்பாற்றுவதற்காக வீட்டிற்குள் செல்லும் ராஜியை, குமரன், சக்திவேல் உள்ளிட்டவர்கள் வீட்டை விட்டு வெளியில் தள்ளுகிறார்கள். அவரை காப்பாற்ற இடையில் நுழையும் பாண்டியன்மீது குமரனின் கை படுகிறது. இதையடுத்து தன்னுடைய அப்பாவை அடித்த குமரனை விட்டு வைக்கக்கூடாது என்று செந்தில், கதிர் ஒன்று சேர்கின்றனர்.
குமரனை அடிக்க திட்டமிடும் சகோதரர்கள்: அவர்களின் இந்த முயற்சியை யூகிக்கும் பழனிவேல், சரவணனுக்கு கால் செய்து அவர்களை தடுக்க முயற்சிக்கிறார். ஆனால் தன்னுடைய கடைக்கு வரும் தங்கமயிலை அவரது வீட்டிற்கு சென்று டிராப் செய்யும் சரவணன், ரொமாண்டிக் மூடில், பழனிச்சாமியின் காலை எடுக்காமல் விடுகிறார். ஒருவழியாக அவரை கான்டாக்ட் செய்யும் பழனிவேல் நிலைமையை எடுத்துரைக்கிறார். இதையடுத்து சரவணனும் மிகவும் கோபத்துடன் தன்னுடைய தம்பிகளுக்கு கால் செய்வதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.
சரவணனுக்கு கால் செய்யும் பழனிவேல்: சரவணனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த நேரத்தில் எந்த வம்பும் வேண்டாம் என்பதால் பழனிவேல் தவிப்புடன் சரவணனுக்கு கால் செய்கிறார். ஆனால் அவரோ, தம்பிகளுடன் இணைந்து குமரனை தாக்கும் எண்ணத்தில் இருப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தொடர்ந்து இவர்கள் மூவரும் இணைந்து குமரனை தாக்குவார்கள் என்று இந்த வார பிரமோவில் காணப்பட்டது. தொடர்ந்து இவர்களை காவல்துறையினர் கைது செய்தால் சரவணன் -தங்கமயில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது போல நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











