Pandian stores 2: பொங்கிய பானைகள்.. நான் அனாதை இல்லை.. கண்கலங்கிய பாண்டியன்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருந்தது. பொங்கல் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் இன்றைய எபிசோடு காணப்பட்டது. பாண்டியன் குடும்பத்தினர் தங்கள் வீட்டு வாசலில் பொங்கல் கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்துவதாக அடுத்தடுத்த காட்சிகள் அமைந்திருந்தன.
பாண்டியன் -கோமதி தம்பதியின் மூன்று மருமகள்களும் ஒரே விதமாக புடவை அணிந்து கொண்டு மூன்று பானைகளில் பொங்கல் வைப்பதாக இன்றைய எபிசோடில் காட்சிகள் அரங்கேறின. இதை பார்க்கும் பாண்டியன் கண் கலங்குவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. ஆனால் எதிர் வீட்டிலிருந்தபடி முத்துவேல், சக்திவேல் இதை பார்த்து எரிச்சல் அடைவதாகவும் காட்சிகள் காணப்பட்டன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல மாதங்களாக மாஸ் காட்டி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த சில தினங்களாக பொங்கல் கொண்டாட்டத்தை மையமாக வைத்து காட்சிகளை ஒளிப்பரப்பி வருகிறது. பொங்கல் கொண்டாட்டத்திற்காக சுத்தம் செய்வது, அதற்கான ஏற்பாடுகளை செய்வது என பாண்டியன் குடும்பத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்ட நிலையில் இன்றைய தினம் வீட்டு வாசலில் சூரிய பகவானுக்கு பொங்கல் வைப்பதாக காணப்பட்டது. மூன்று மருமகள்களும் ஒரே நிறத்தில் புடவை அணிந்து கொண்டு கலக்கலாக தனித்தனியாக பானைகளை வைத்து பொங்கல் வைக்கின்றனர்.
பொங்கலோ பொங்கல்: இதிலும் போட்டி மனப்பான்மையுடன் எதிர் வீட்டில் இருக்கும் முத்துவேல், சக்திவேல் நடந்து கொள்கின்றனர். தங்களது பானை தான் முதலில் பொங்க வேண்டும் என்று சக்திவேல் நடவடிக்கையில் இறங்க அவர்களது பானையில் தண்ணீர் ஊற்றுகிறார். இதனால் தீ அணைக்கப்பட்டு சக்திவேல் தன்னுடைய அம்மாவிடமும் அண்ணனிடமும் திட்டு வாங்குகிறார். இதனால் அவர்கள் பானை பொங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் பாண்டியன் குடும்பத்தினரின் மூன்று மருமகள்கள் வைத்த பானைகளிலும் அடுத்தடுத்து பால் பொங்குகிறது. இதையடுத்து அவர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக குரல் கொடுக்கின்றனர்.
சக்திவேல் வயிற்றெரிச்சல்: இதை பார்த்து சக்திவேல் வயிற்றெரிச்சல் படுகிறார். இந்நிலையில் தங்களது வீட்டின் பொங்கல் கொண்டாட்டத்தை பார்க்கும் பாண்டியன் தன்னுடைய மனைவி கோமதியுடன் கண்கலங்கி பேசுகிறார். தன்னை இனி மேல் யாரும் அனாதை என்று கூற முடியாது என்றும் பாண்டியன் எப்படிப்பட்ட குடும்பத்தை உருவாக்கியுள்ளான் என்று மற்றவர்கள் பாராட்டி பேசுவார்கள் என்றும் பாண்டியன் தன்னுடைய நெகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இந்நிலையில் அனைவரும் பொங்கல் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் பாண்டியன், குடும்பத்தினர் அனைவரையும் ஒன்றாக அழைத்து தன்னுடைய மற்றொரு சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறார்.
உற்சாகத்தில் பாண்டியன்: தான் வழியில் குறி கேட்டதாகவும் அப்போது தன்னுடைய குலதெய்வம் குறித்த தகவல் தனக்கு தெரியவரும் என்று கூறப்பட்டதாகவும் கூறும் பாண்டியன், அதற்கேற்ப சாலையில் சென்று கொண்டிருந்த இருவர் தன்னிடம் தானே வந்து பேசியதாகவும் அது தன்னுடைய பெரியம்மா பெண் என்று தெரியவந்ததாகவும் பாண்டியன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இதையடுத்து தன்னுடைய குலதெய்வம் குறித்த தகவலும் கிடைத்ததாக கூறும் பாண்டியன் மறுநாளே குடும்பத்தோடு குலதெய்வம் கோயிலுக்கு போக ஏற்பாடுகளை மேற்கொள்கிறார். தங்கமயிலின் பெற்றோரையும் அவர் கோயிலுக்கு அழைக்கிறார். இதேபோல மீனாவின் பெற்றோரையும் அழைக்க வேண்டும் என்று அவர் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











