Pandian stores 2 serial: பெண் பார்க்க தயங்கிய சரவணன்.. ரூட்டை மாற்றிய பாண்டியன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சரவணனின் திருமணத்தை மையமாக கொண்டு அடுத்தடுத்த கதைக்களங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அடுத்தடுத்து சரவணனுக்கு பார்க்கப்படும் பெண்கள் தட்டி கழிந்து வருகின்றனர். இதற்கு கோமதியின் அண்ணன் சக்திவேல் காரணமாக அமைந்து வருகிறார். ராஜியை கதிர் ஏமாற்றி திருமணம் செய்ததாக கருதி, பாண்டியனை பழிவாங்கும் நோக்கத்தில் அவர் இத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து சரவணனின் திருமண ஏற்பாடுகள் நடக்காமல் போவதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர் முழிபிதுங்கி வருகின்றனர்.

இதனிடையே மேட்ரிமோனி சைட் மூலம் சரவணனுக்கு கதிர் மற்றும் செந்தில் இணைந்து ரெஜிஸ்டர் செய்கின்றனர். அதன்மூலம் ஒரு பெண்ணையும் செலக்ட் செய்து அந்தப் பெண்ணை பார்க்க பிக்ஸ் செய்கின்றனர். அந்தப் பெண் ஆரஞ்ச் கபேவிற்கு சரவணனை தனியாக வருமாறு கூறும் நிலையில், தனியாக போக சரவணன் தயக்கம் காட்டுகிறார். இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சரவணனுடன் போக பாண்டியன் கூறுகிறார். முன்னதாக மேட்ரிமோனி மூலம் பெண் பார்ப்பதை வேண்டாம் என்று கூறும் பாண்டியன், தன்னுடைய மகன்களின் தொடர்ந்த சமாதானத்தால் இதற்கு ஒப்பு கொள்கிறார்.

Vijay TV s Pandian stores 2 serial today 23rd March 2024 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் தொடர்ந்து அதிக டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் காணப்படுகிறது. இந்த சீரியலில் பாண்டியன் மற்றும் கோமதி தம்பதி மற்றும் அவர்களது மகன்கள், மகள்கள் உள்ளிட்டவர்களை மையமாக கொண்டு எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அடுத்த வீட்டு சம்பவங்களை ஒளிந்து நின்று பார்க்கும் சூப்பர் அனுபவத்தை இந்த சீரியல் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. சீரியலில் இயல்பாக இழையோடும காமெடி காட்சிகளும் இந்த சீரியலுக்கு சிறப்பான காட்சி அனுபவத்தை கொடுத்து வருகிறது.

அப்பா -மகன்களின் பாசம்: இந்த சீரியலின் முதல் சீசனும் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்த சீரியலும் சேனலின் முன்னணி சீரியலாக தொடர்ந்து இருந்து வந்தது. வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருந்தபோதே எண்ட் கார்ட் போட்டது. தொடர்ந்து சில தினங்களிலேயே இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது. முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் மற்றும் ஹேமா மட்டுமே இரண்டாவது சீசனிலும் இணைந்துள்ளனர். மற்றபடி அனைவருமே புதுபுகங்கள்தான். சீரியலில் நடிகை நிரோஷா முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். சிறப்பான அம்மாவாக, மாமியாராக பன்முகம் காட்டி வருகிறார் நிரோஷா.

கோமதியின் அதிரடி முடிவு: தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்தை காக்கும்வகையிலும் அண்ணன் மகள் ராஜியின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் வகையிலும் கோமதி எடுக்கும் முடிவால் பாண்டியன் குடும்பத்தினர் மிகப்பெரிய அல்லலுக்கு உள்ளாகின்றனர். மூத்த மகன் சரவணனின் திருமணம் கேள்விக்குறியாகியுள்ளது. அவரது அடுத்தடுத்த திருமணங்கள் நடக்காமல் போவதற்கு கோமதியின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மகன் குமரன் ஆகியோர் காரணமாக அமைந்துள்ளனர். தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்திற்காக தன்னுடைய மகன் கதிர் மற்றும் ராஜிக்கு கோமதி திருமணம் செய்து வைக்க தற்போது அதுவே அவர்களது வெறுப்பை அதிகரித்துள்ளது.

பெண் தேடும் குடும்பத்தினர்: இந்நிலையில் மேட்ரிமோனி மூலம் சரவணனுக்கு பெண் பார்க்கின்றனர். அவரை தனியாக சந்திக்க வேண்டும் என்று பெண் கூற, முதலில் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் பாண்டியன். தொடர்ந்து செந்தில் உள்ளிட்டவர்கள் சமாதானம் செய்ய ஒப்புக் கொள்கிறார். இந்த விஷயத்தில் சரவணனையும் செந்தில், மீனா, கதிர், ராஜி உள்ளிட்டவர்கள் சமாதானப்படுத்தி அவரை தனியாக செல்ல தயார் செய்கின்றனர். இதனிடையே வீட்டிற்கு வரும் பாண்டியன், குடும்பத்துடன் சென்று பெண்ணை சந்திக்கலாம் என்று கூறுகிறார். இது சரிபட்டு வராது என்று மீனா உள்ளிட்டவர்கள் கூறினாலும் அவர் அதை ஏற்கவில்லை.

சரவணனின் தயக்கம்: இதனிடையே கார் மற்றும் பைக்கில் ஆரஞ்ச் கபேவிற்கு குடும்பத்தினர் அனைவரும் சரவணனுடன் செல்கின்றனர். அங்கு சென்றும் பெண்ணை தனியாக பார்த்து பேச முடியாமல் தயங்கிக் கொண்டே நிற்கிறார் சரவணன். அவருக்கு வியர்த்து வழிகிறது. ஒருவழியாக சம்பந்தப்பட்ட பெண் கபேவிற்கு வருகிறது. மாடர்ன் உடையில் அந்தப் பெண் வர, அதை பார்த்துக் கொண்டு குடும்பத்தினர் நிற்கின்றனர். ஒருவழியாக சரவணனுக்கு தைரியம் சொல்லி உள்ளே அனுப்பி வைக்கிறார்கள். அவர் உள்ளே செல்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X